Published:Updated:

பெரியாரிய இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டியவை... - ஆனைமுத்து பட்டியல்

ஆனைமுத்து
ஆனைமுத்து

பெரியாரின் கொள்கைகளில் சிலவற்றை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றன. இன்னும் பெரிய அளவில் இயங்க வேண்டும்

பெரியாரியப் பெருந்தொண்டரும் 'மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி'யின் நிறுவனருமான வே.ஆனைமுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்னர் தன் 96-வது வயதில் அடியெடுத்து வைத்தார். மிக நீண்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

"பெரியாருடனான உங்களின் பயணம் பற்றி?''

"பெரியாருடனான எனது பயணம் 1964-ம் ஆண்டு முதல் தொடங்கியது. அது அவரது இறப்புவரை தொடர்ந்தது. 27-11-1973 அன்று சேலம் கோட்டைத் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில், நான் ஒன்றரை மணி நேரம் சட்ட ஆதாரங்களுடன் பெரியாரின் கருத்துகளைப் பற்றிப் பேசினேன். அதை கவனித்தவர், அடுத்து அவர் பேச தொடங்கியபோது, 'பேரறிஞர் ஆனைமுத்து அவர்களே...' என என்னை விளித்துப் பேசினார்.

திருச்சியில் அவர் தங்கியிருந்த நாள்களில் நானும் நோபிள் கோவிந்தராஜன் அவர்களும் பல மணி நேரம் பெரியாருடன் மாலையில் உரையாடுவோம்.''

"நீங்கள் பெரியாருடன் நேரடியாகவே பல கருத்துகளில் முரண்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?''

"நான் அவரிடம், 'சமூகக் கட்டமைப்புகள் மற்றும் சட்டங்களாலுமே மதரீதியான, சாதிரீதியான ஒடுக்குமுறை பலமாக உள்ளது; இந்துவாக ஒரு சாதிக்குள் பிறந்தால், இறக்கும்வரை இந்து மதத்திலிருந்து வெளியேற முடியாது' என்பேன். ஆரம்பத்தில் அவர் இதில் முரண்பட்டாலும், பின்பு ஏற்றுக்கொண்டார்.''

"பெரியாரின் மறைவுக்குப் பிறகு திராவிடர் கழகத்திலிருந்து விலகியது ஏன்?''

"கழகத்தின் நடவடிக்கைகள் பற்றி கேள்விகள் எழுப்பினார்கள். அப்போது ஏற்பட்ட முரண்பாடுகளால் திராவிடர் கழகத்திலிருந்து விலக்கப்பட்டேன்.''

"தற்போது பெரியாரிய இயக்கங்களின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

"அவை பெரியாரின் கொள்கைகளில் சிலவற்றை மட்டுமே முதன்மைப்படுத்துகின்றன. இன்னும் பெரிய அளவில் இயங்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் மாநில மொழியை அலுவல் மொழியாகப் பயன்படுத்துதலில் தொடங்கி மாநில தன்னாட்சி, அதிகாரப் பரவலாக்கல் என்று கூட்டாட்சியை நோக்கிய பார்வை, வருணாசிரம எதிர்ப்பு, வர்ண வர்க்கங்களில் மேம்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக உள்ள இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பு, சாதி மறுப்பு ஆகியவற்றைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். அவர்களுடன் இணைந்து செயல்பட எங்கள் கட்சியும் முழு உடன்பாட்டுடன் உள்ளது. அதைத்தான் நாங்கள் இப்போதும் செய்கிறோம். கருஞ்சட்டைப் பேரணி, நீலச்சட்டைப் பேரணி ஆகியவை சமீபத்திய சான்றுகள்.''

"ஜெயலலிதாவுக்கு 'சமூக நீதி காத்த வீராங்கனை' பட்டம் கொடுத்ததற்காக, கி.வீரமணி அதிகமாக விமர்சிக்கப்பட்டார்... அது குறித்த உங்கள் பார்வை?''

"எனக்கும் அதில் உடன்பாடு கிடையாது. அப்போதே, தோழர் வீரமணியின் செயலைக் கண்டித்து, நான் நடத்திவரும் 'சிந்தனையாளன்' இதழில் கட்டுரை எழுதினேன். 69 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசுக்கு வீரமணி வழங்கியது சரியான வழிகாட்டல் இல்லை. அதனால்தான் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஒன்பதாவது அட்டவணையில் புகுத்தப்பட்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது''

ஆனைமுத்து
ஆனைமுத்து

> "தீவிர ஆத்திகராகவும், வள்ளலார் வழியையும் பின்பற்றிவந்த நீங்கள் நாத்திகராக, பெரியாரியவாதியாக மாறியது எப்படி?''

> "வள்ளலாரும் வேத எதிர்ப்பு, சாதி - மத எதிர்ப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு ஆகிய கொள்கைகளைப் பேசிவந்தவர்தான். அப்படி ஆத்திகராக இருந்தே சமூக அவலங்களை எதிர்த்திருக்கலாமே?''

> "உங்கள் கட்சியின் பெயரில் பெரியாருடன் மார்க்சியமும் இருக்கிறது. பெரியாரியத்துடன் மார்க்சியமும் தேவை என்பதை எப்போது உணர்ந்தீர்கள்?''

> "சாதி ஒழிப்பு சாத்தியமா, நீங்கள் முன்வைக்கும் செயல்திட்டம் என்ன? கலப்பு திருமணங்களுக்கு இன்றளவும் பல சிக்கல்கள் இருக்கின்றன... அது குறித்து உங்கள் பார்வை?''

> "தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளிடையே என்ன மாற்றங்கள் வேண்டும்?''

> "இன்று, பெரியாரிய இயக்கங்கள் தி.மு.க-வைத்தான் மாற்றாக முன்வைக் கின்றன... அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

> "ஓ.பி.சி இட ஒதுக்கீட்டுக்கான உங்களின் முயற்சிகள், பங்களிப்புகள் மிக முக்கியமானவை. அவை பற்றி?''

> "உங்களுடைய 70 ஆண்டுக்காலப் பொது வாழ்வில் நீங்கள் சாதித்தவை, இழந்தவை என்னென்ன?''

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை வாசிக்க க்ளிக் செய்க... > "அதிகார குவிப்புக்கு எதிராகப் போராட வேண்டும்!" - அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு ஆனைமுத்து அறிவுரை https://bit.ly/2Wbajp3

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

அதிகார குவிப்புக்கு எதிராகப் போராட வேண்டும்!

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு