Published:Updated:

யோகாவின் ஆற்றல்; 125 வயதான சுவாமி சிவனாந்தாவுக்கு பத்மஸ்ரீ; ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்!

ஆனந்த் மஹிந்திரா

சுவாமி சிவனாந்தாவுக்கு பத்மஸ்ரீ கொடுக்கப்படும் காணொலியைப் பகிர்ந்திருக்கிற தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, "யோகாவின் ஆற்றல் இது" என்று ட்விட் செய்திருக்கிறார்.

யோகாவின் ஆற்றல்; 125 வயதான சுவாமி சிவனாந்தாவுக்கு பத்மஸ்ரீ; ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்!

சுவாமி சிவனாந்தாவுக்கு பத்மஸ்ரீ கொடுக்கப்படும் காணொலியைப் பகிர்ந்திருக்கிற தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, "யோகாவின் ஆற்றல் இது" என்று ட்விட் செய்திருக்கிறார்.

Published:Updated:
ஆனந்த் மஹிந்திரா

125 வயது மனிதர் சுவாமி சிவானந்தாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து "யோகா பிறந்த நாட்டில் நான் பிறந்தது பெருமிதமளிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார். அந்த காணொலியில் சுவாமி சிவானந்தா மேடைக்கு செல்லும் வழியில் அமர்ந்திருக்கிற பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்பாகத் தரையில் முகம் பதிய மண்டியிட்டு வணங்குகிறார். பதறி எழுந்த நரேந்திரமோடி சிவானந்தா இருக்கும் திசையில் இரண்டு முறை குனிந்து வணங்குகிறார். 125 வயது மனிதர் குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கச் செல்வதற்கு முன்பு இரண்டு முறை வணங்கிவிட்டு செல்கிறார். குடியரசுத் தலைவர் அவரை உயர்த்தி விருது வழங்கி கௌரவிக்கிறார். சுவாமி சிவானந்தா ஆகஸ்ட் 8, 1986 பிரிவினைக்கு முந்தைய பங்களாதேஷில் பிறந்தார். சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்தவர் மேற்கு வங்கத்தில் இருக்கும் குரு ஓம்காரானந்தா கோஸ்வாமியிடம் தஞ்சம் அடைந்தார். அங்கு தான் அவர் சமூக கல்வியைப் பயின்றார். 125 வயது என்றபோதும் இன்றைக்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கு முதன்மை காரணம் அவர் பின்பற்றுகிற யோகக் கலை தான் என்கிறார்கள். 2019 யோகா தினத்தில் பங்கேற்ற மூத்த யோக குரு இவர் தான்.

தன் வாழ்வின் பெரும்பகுதியை ஆதரவற்றோர், நோய்வாய்ப்பட்டோர் உள்ளிட்டவர்களின் சேவைகளுக்கே அர்ப்பணித்த இவருக்கு இந்த வருட பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இந்த காணொலியைப் பகிர்ந்திருக்கிற தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, "யோகாவின் ஆற்றல் இது. அர்ப்பணிப்பு மிக்க 125 வருட கால வாழ்வு. சுவாமி சிவானந்தாவின் பண்பும் பெருந்தன்மையும் பணிவுமிக்கது மற்றும் ஈர்க்கக் கூடியது. யோகா தோன்றிய நாட்டைச் சேர்ந்தவன் என்பதில் பெருமிதம்" தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism