Published:Updated:

`மா.செ ஆகும் அன்பில் மகேஷ்; முக்கிய பொறுப்பில் கே.என்.நேரு!'- திருச்சிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் ஸ்டாலின்

அன்பில் மகேஷ் - கே.என்.நேரு
அன்பில் மகேஷ் - கே.என்.நேரு

அ.தி.மு.க-வினரிடம் தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலர் கூட்டு வைத்திருந்ததால் போதிய வெற்றி வாய்ப்பு பெறமுடியவில்லை என்று ஸ்டாலினிடம் குமுறியிருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி வாய்ப்புகள் பெறவில்லை என்ற ஆதங்கம் தி.மு.க செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேசிய பேச்சில் தெளிவாகத் தெரிந்தது. தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆளும் கட்சியினரோடு மிக நெருக்கமாக இருக்கிறார்கள் என உடன் பிறப்புகள் புகார் வாசித்திருக்கிறார்கள். அதனால்தான் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசியிருக்கிறார்கள்.

தி.மு.க செயற்குழு அவசரக் கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர்
தி.மு.க செயற்குழு அவசரக் கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர்
ஸ்ரீனிவாசுலு

அ.தி.மு.க-வோடு தொடர்பிலிருந்த நிர்வாகிகளைக் களையெடுப்பதோடு அன்பில் மகேஷ், கே.என்.நேருவுக்கு முக்கிய பதவி கொடுக்க ஸ்டாலின் கிரீன் சிக்னல் கொடுத்திருப்பதாக உடன் பிறப்புகள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்தும் தலைவர்கள் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் விலைபோன கட்சியினர் குறித்தும் விவாதிக்க தி.மு.க-வின் செயற்குழு அவசரக் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நேற்று அறிவாலயத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என முக்கிய நிர்வாகிகள் என மாநிலம் முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்
உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்

இந்த நிலையில் கன்னியாகுமரி, மதுரை, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தோல்விக்கான காரணங்கள் குறித்து செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களைப் பேச வைத்தனர். இதில் மாவட்டச் செயலாளர்கள் மீது மாவட்டக் கிளைக் கழகத்தினர் புகார் வாசித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் ஒரு சிலர் ஆளுங்கட்சியினருடன் தி.மு.க-வினர் கூட்டு வைத்துக்கொண்டு செயல்பட்டதால் போதிய வெற்றி வாய்ப்பு பெறமுடியவில்லை என்று ஸ்டாலினிடம் குமுறியிருக்கிறார்கள்.

இது அத்தனையும் நோட் பண்ணிய ஸ்டாலின் பிரச்னைகளில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயாராகிவருகிறார். இந்த அதிரடி ஒருபுறம் இருந்தாலும் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு பதவி கொடுக்க அறிவாலயம் திட்டமிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் மாநில இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கக்கூடிய அன்பில் பொய்யா மொழி மகேஷ் உதயநிதியின் ஆல் இன் ஆலாக இருந்து வருகிறார். அவரது பயணத் திட்டங்களை வகுக்கக்கூடியவராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். இளைஞரணி செயலாளராக உதயநிதியை உயர்த்துவதற்காகப் பலவேலைகளைச் செய்தவர் இந்த மகேஷ்.

அன்பில் மகேஷ் - உதயநிதி
அன்பில் மகேஷ் - உதயநிதி

இளைஞரணி செயலாளராக உதயநிதியை உயர்த்துவதற்காகப் பலவேலைகளைச் செய்தவர் இந்த மகேஷ். இந்த நிலையில் அவரை தரம் உயர்த்தும் விதமாகத் திருவெறம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கும் மகேஷுக்கு விரைவில் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்க இருக்கிறார். திருச்சி பகுதியில் எந்த மாவட்டத்துக்காவது அவர் மா.செ-வாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் அறிவிப்பு இன்னும் இரண்டொரு நாள்களில் வெளிவரப்போகிறது.

மாநில பதவியிலிருந்த ஒருவருக்கு மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுக்க ஸ்டாலின் கிரீன் சிக்கனல் கொடுத்திருக்கிறார். அத்தோடு கே.என்.நேரு தற்போது மாவட்டச் செயலாளராக இருக்கிறார். அவருக்கும் முக்கிய பதவி கொடுக்க திட்டமிட்டிருக்கிறார். சற்குணம் வகித்த துணைப் பொதுச் செயலாளர் பதவி தற்போது காலியாக இருக்கிறது.

கே.என்.நேரு
கே.என்.நேரு

அதேபோல் தற்போது தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலு நாடாளுமன்ற குழுத்தலைவராகவும் எம்.பி-யாகவும் இருக்கிறார். ஒருவரிடமே இரு பதவிகள் இருப்பதால். டி.ஆர்.பாலு இருக்கும் இடத்தில் கே.என்.நேரு அமர்த்தப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.

சில நாள்களுக்கு முன்பே கே.என்.நேரு தனது ஆதரவாளர்களிடம் தனக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கப்போவதாகக் கூறி வந்தார். தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பதவியா, துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்படப்போகிறதா என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன. இன்னும் சில தினங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள்.

பின் செல்ல