Published:Updated:

``ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு பொதுச் சின்னம் வேண்டும்" - அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

`ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பொதுச் சின்னத்தில் அனைத்து வேட்பாளர்களும் போட்டியிட்டால், மக்கள் நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள்.' - அன்புமணி

``ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கு பொதுச் சின்னம் வேண்டும்" - அன்புமணி

`ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பொதுச் சின்னத்தில் அனைத்து வேட்பாளர்களும் போட்டியிட்டால், மக்கள் நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள்.' - அன்புமணி

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டில் வாக்களித்த பின்னர் பேசிய பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ``ஆறு ஆண்டுகள் கழித்து நடைபெறும் இந்த தேர்தலில் ஆளும் கட்சி ரூ,1,500 - 2,000 வரையிலும், ஆண்ட கட்சி ரூ1,000 - 1,500 வரையிலும் ஓட்டுக்கு தருகின்றன. இப்படி நடப்பது ஜனநாயக கேலிக்கூத்து.

இந்த நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சியினர், எதிர்தரப்பு வேட்பாளர்களையும், பா.ம.க-வை சேர்ந்தவர்களை கூட மிரட்டி வேட்புமனுவை திரும்பப் பெற வைத்தார்கள். மேலும், பிரசாரம் செய்யக்கூடாது என மிரட்டி கொண்டிருந்தார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் மக்கள் திருந்த வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

மேலும், ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பொதுச் சின்னத்தில் அனைத்து வேட்பாளர்களும் போட்டியிட்டால், மக்கள் நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள். சேர்மன், மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடக்கும்போது குதிரை பேரங்கள் நடக்கிறது.

தேர்தல் முடிவு வெளியிட்ட பின்னர், சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கு பத்து தினங்கள் இடைவெளி எதற்காக? பேரம் பேசுவதற்காகவா? அல்லது வெற்றி பெற்றவர்களை கடத்திச் செல்வதற்காகவா? சென்னையில் உள்ள சில வார்டுகளில், ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் வார்டு உறுப்பினராவதற்கு 5 கோடி 6 கோடி என செலவு செய்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்புமணி
அன்புமணி

அவர்கள் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள். இதை அனைத்தையும் தாண்டி பா.ம.க மிகப்பெரிய வெற்றி பெறும். தேர்தல் தொடர்பாக எவ்வளவோ புகார் தெரிவித்திருக்கிறோம், தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ளவில்லை, காவல்துறை புகாரை எடுத்துக்கொள்ளவில்லை.

`தி.மு.க-வினர் ஆட்சிக்கு வந்த இந்த 8 மாத காலங்களில் அதை எதையும் நிறைவேற்றவில்லை' என மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக நீட்தேர்வு. கடந்த ஆண்டு 12 மாணவர்கள் நீட் தேர்வினால் இறந்திருக்கிறார்கள். கடந்த 6-7 ஆண்டுகளில் 50 மாணவர்களுக்கு மேலே நீட் தேர்வினால் இறந்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

இது இந்தியாவில் வேறு எங்கும் நடக்கவில்லை, தமிழகத்தில் மட்டும் தான் நடந்து கொண்டிருக்கிறது. வன்னியர் சமூக மக்களின் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதை முழுவதுமாக உச்ச நீதிமன்றத்தில் நிறைவேற்றுவார்கள் என 100% நம்பிக்கை உள்ளது. வரும் காலங்களிலும் பா.ம.க இதே நிலைப்பாட்டில் தனித்து போட்டியிடும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism