Published:Updated:

``2.0 செயல்திட்டம்; 2026 -ல் பாமக ஆட்சியமைக்கும்" - சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்

பேட்டியளிக்கும் அன்புமணி ராமதாஸ்

``ஒருமித்த கருத்துகள் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, 2026-ல் பாமக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். வியூகம் குறித்து விரிவாகக் கூற முடியாது. மற்ற அரசியல் கட்சிகள் அதைப் பயன்படுத்தக்கூடும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

``2.0 செயல்திட்டம்; 2026 -ல் பாமக ஆட்சியமைக்கும்" - சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்

``ஒருமித்த கருத்துகள் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, 2026-ல் பாமக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். வியூகம் குறித்து விரிவாகக் கூற முடியாது. மற்ற அரசியல் கட்சிகள் அதைப் பயன்படுத்தக்கூடும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பேட்டியளிக்கும் அன்புமணி ராமதாஸ்

பா.ம.க தலைவராக அன்புமணி ராமதாஸ் சமீபத்தில், தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், மாவட்டவாரியாகச் சென்று, கட்சியினரை உற்சாகப்படுத்திவருகிறார். அந்த வகையில், கரூருக்கு வருகை தந்த அவர், தனது பயணத்தின் ஓர் அங்கமாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக அரசு மேக்கேதாட்டூ அணை திட்ட அறிக்கை சம்பந்தமாக விவாதிக்கவிருப்பதாகத் தெரிகிறது. இது, சட்டத்துக்கு எதிரானது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது. காவிரி நடுவர் நீதிமன்ற அளித்திருக்கும் தீர்ப்புக்கும், தமிழக மக்களுக்கும் எதிரானது. அதனால், இந்தக் கூட்டம் நடைபெறக் கூடாது. அப்படி நடைபெற்றாலும், அதில் மேக்கேதாட்டூ திட்டம் சம்பந்தமான விவாதம் மேற்கொள்ளக் கூடாது. இதை வலியுறுத்தி கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு பா.ம.க சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இது சம்பந்தமாக முறையிடவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அந்த முறையீட்டில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் நடைபெறும் கூட்டத்தில் மேக்கேதாட்டூ அணைத் திட்டம் சம்பந்தமான நிகழ்ச்சிக் குறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்த வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதால், அவரை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என பா.ம.க வலியுறுத்துகிறது. கர்நாடகாவில் மேக்கேதாட்டூ அணை கட்டப்படுவதற்கு முன்பே 140 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணைகள் கர்நாடகாவில் இருக்கின்றன.

பேட்டியளிக்கும் அன்புமணி ராமதாஸ்
பேட்டியளிக்கும் அன்புமணி ராமதாஸ்

ஆனால், தமிழ்நாட்டில் மேட்டூர் அணை 93 டி.எம்.சி கொள்ளளவு மட்டும்கொண்ட அணையாக இருக்கிறது. அதிலும், கர்நாடகாவிலிருந்து உபரிநீர் மட்டுமே பருவமழைக் காலங்களில் கிடைக்கிறது. அதையும் தற்போது தடுக்கும் வகையில் கர்நாடக சட்டசபையில் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். எதிர்வரும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்காக அங்கு ஆளும், ஆண்ட காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகள் இதை முன்னெடுத்துவருகின்றன. இதை பா.ம.க வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு மேக்கேதாட்டூ அணை சம்பந்தமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இது சம்பந்தமாக, நான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசியிருக்கிறேன். அப்போது கடுமையான எதிர்ப்புகள் நாடாளுமன்றத்தில் எழுந்தன. இருந்தாலும் தமிழ்நாட்டின் நலன் கருதி வலியுறுத்தினேன். மேக்கேதாட்டூ அணைத் திட்டம் வரக் கூடாது. அதை வரவும் விட மாட்டோம். பா.ம.க-வைச் சேர்ந்த நாங்கள் உயிரைக் கொடுத்தாவது, தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடிப் பிரச்னைக்கு குரல் கொடுப்போம்.

பா.ம.க 2.0 செயல் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒருமித்த கருத்துகள் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து 2026-ல் பா.ம.க தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். வியூகம் குறித்து விரிவாக கூற முடியாது. மற்ற அரசியல் கட்சிகள் அதைப் பயன்படுத்தக்கூடும். ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்தியாவில் செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆனால், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமே இல்லை" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism