Published:Updated:

`பாஜக வெளிப்படுத்தாவிட்டால், திமுக அரசு முபின் குடும்பத்துக்கு அரசு வேலை கொடுத்திருக்கும்’ -அண்ணாமலை

அண்ணாமலை

`தமிழகத்தில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.

`பாஜக வெளிப்படுத்தாவிட்டால், திமுக அரசு முபின் குடும்பத்துக்கு அரசு வேலை கொடுத்திருக்கும்’ -அண்ணாமலை

`தமிழகத்தில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன’ என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.

Published:Updated:
அண்ணாமலை

மதுரையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அண்ணாமலை, செய்தியாளர்களிடம் பேசும்போது, "மதுரை மாநகர் பா.ஜ.க சார்பில் 'எனது பூத் வலிமையான பூத்' என்ற திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்தித் திணிப்பு நடைபெறுவதாகக் கூறும் அமைச்சர் பொன்முடி, சுயபரிசோதனை செய்ய வேண்டும். 2019-ம் ஆண்டு வரை இந்தி 3-வது மொழியாகத்தான் இருந்தது, 2019-ல் தேசிய கல்விக் கொள்கையில் 3-வது மொழி எனத் தேர்வாகியிருக்கிறது. இந்தி மொழியைத் திணிக்கக் கூடாது என்பதுதான் பிரதமரின் விருப்பம்.

பா.ஜ.க-வின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வி என்ற மாற்று பெயரில் பயன்படுத்தப்படுகிறது. பொறியியல் படிப்பில் லட்சத்தில் 69 பேர்தான் தமிழில் பயின்றுவருகின்றனர். பாஜக அரசில் இந்தி மொழித் திணிப்பு என்பதே இல்லை.

கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தை 24-ம் தேதி மனித வெடிகுண்டுத் தாக்குதல் என்றேன், குண்டு வெடித்து 54 மணி நேரம் கழித்துதான் பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறினார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

ஆர்.எஸ்.பாரதி பா.ஜ.க-வுக்கு நன்றி சொல்ல வேண்டும். பா.ஜ.க-தான் வெடிகுண்டுச் சம்பவத்தை வெளிக்கொண்டு வந்தது

இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை மறைத்தது தி.மு.க-தான். பாஜக வெளிப்படுத்தாவிட்டால் தி.மு.க அரசு சிலிண்டர் குண்டு வெடிப்பில் இறந்த முபின் குடும்பத்துக்கு அரசு வேலையைக் கொடுத்திருக்கும்.

மதுரையில் மகளிர் கல்லூரி முன்பாக நடைபெற்ற சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. பள்ளிக் குழந்தைகள் பீர் பாட்டில்களை எடுத்துசெல்லும் நிலை இருக்கிறது. கட்டுக்கோப்பாக இருந்த தமிழகம் மதுவாலும் கஞ்சாவாலும் சீரழிந்திருக்கிறது. காவல்துறையின் கைகள் கட்டிப்போடப்பட்டிருப்பது தமிழகத்தில் வீபரீதத்தை ஏற்படுத்தும்.

மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் புதிது. காவல்துறையினர் கையிலுள்ள லத்தி பூஜை செய்வதற்கா... காவல் நிலையங்களில் நடைபெறும் கட்டபஞ்சாயத்துகளைத் தடுக்க வேண்டும். காவல்துறையினர் லத்தியைப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் கஞ்சா பயன்படுத்துபவர்கள், குடிப்பவர்கள், வழிப்பறி, பெண்களை இழிவுபடுத்துபவர்களைக் கட்டுப்படுத்த முடியும்.

செய்தியாளர் சந்திப்பில்
செய்தியாளர் சந்திப்பில்

சாத்தான்குளம், தூத்துக்குடியில் காவல்துறையினரின் நிகழ்வுகள் தவறு, மேலதிகாரிகளின் தோல்வி அது. ஆய்வாளர்களை நியமிக்க எம்.எல்.ஏ லெட்டர் வேண்டும் என்ற நிலைதான் இருக்கிறது. எனவே, மக்களைவிட எம்.எல்.ஏ-வுக்குத்தான் விசுவாசமாக இருப்பார்.

பிரதமர் மோடி 11-ம் தேதி மதியம் மதுரை விமான நிலையத்துக்கு வருகிறார். பின்பு திண்டுக்கல் காந்தி கிராமத்துக்குச் செல்கிறார். அங்கு பா.ஜ.க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தமிழகம் ஐந்து ஆண்டுகளில் எங்கே செல்லும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு இருக்கிறது.

குஜராத் தேர்தலில்  ஏற்கெனவே இருந்ததைவிட ஒரு சீட் கூடுதலாகப் பெற்று பா.ஜ.க வெற்றிபெறும். அங்கு தமிழர்கள் உள்ள பகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்வோம். குஜராத், இமாசலப் பிரதேசம் ஆகியவற்றில் பாஜக இமாலய வெற்றிபெறும். அங்கு 2-வது இடத்துக்கு காங்கிரஸா, ஆம் ஆத்மியா என்பதுதான் போட்டியாக இருக்கும்.

ஜனநாயகத்தில் போராட்டம் மட்டுமே தீர்வு. பால்விலை உயர்வைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்களை இணைத்து பா.ஜ.க சார்பில் 1,204 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது.

சென்னைக்கு மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு நிதி வந்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி திட்டங்களைச் செயல்படுத்துவதுதான் அரசின் வேலை. அமைச்சர்கள், மேயர் மாற்றி மாற்றிப் பேசுகின்றனர். மத்திய அரசின் நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லை.

பெரிய அளவிலான மழை பெய்யாத நிலையில், சென்னை தடுமாறுகிறது. திருப்புகழ் ஐ.ஏ.எஸ்., மோடியின் அன்பைப் பெற்றுப் பாடம் கற்றவர். அவரது தலைமையில் தமிழக அரசு குழு அமைத்திருக்கிறது. அதனால் சிறப்பாகப் பணியாற்றுவார். தமிழக அமைச்சர்கள் குறுக்கும் நெடுக்கும் நடந்து குழப்பாமல் இருந்தால் சரி" என்றார்.