Published:Updated:

``ஆளுநரைப் பற்றி எழுதியிருப்பது கருத்து விமர்சனம் அல்ல அவதூறு..!'' - அண்ணாமலை!

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு குறித்து, அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை தொடரும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

``ஆளுநரைப் பற்றி எழுதியிருப்பது கருத்து விமர்சனம் அல்ல அவதூறு..!'' - அண்ணாமலை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு குறித்து, அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை தொடரும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

`நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு குறித்து, அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை தொடரும்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இடப்பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ``அ.தி.மு.க-பா.ஜ.க இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாகச் செல்கிறது. நகர்ப்புறத் தேர்தலில் இடப்பங்கீடு குறித்து, அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை தொடரும். பா.ஜ.க வலிமையாக உள்ள இடங்களை ஒதுக்குமாறு அ.தி.மு.க தலைமையிடம் கேட்டிருக்கிறோம்" என்றார்.

அண்ணாமலை - பழனிசாமி
அண்ணாமலை - பழனிசாமி

அதைத் தொடர்ந்து பேசிய அவர்,``வலுவான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்பட்டுவருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் எதுவும் இல்லை. தமிழக ஆளுநரைப் பற்றி அவதூறாக எழுதிவிட்டு, கருத்து விமர்சனம் என்கிறார்கள். கருத்து விமர்சனத்துக்கும், அவதூறுக்கும் ஒரு சிறிய கோடுதான் வித்தியாசம் இருக்கிறது. அதை அவர்கள் தாண்டிவிட்டார்கள்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism