Published:Updated:

``அரசியல் செய்வதற்காக அண்ணாமலை அரசுமீது புழுதிவாரித் தூற்றுகிறார்” - சொல்கிறார் திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

``பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் அல்ல. அவர் சொல்வது வேதவாக்கும் இல்லை. அரசியல் செய்வதற்காகவே தமிழ்நாடு அரசுமீது புழுதி வாரித் தூற்றுகிறார்” என்கிறார் திருநாவுக்கரசர்.

``அரசியல் செய்வதற்காக அண்ணாமலை அரசுமீது புழுதிவாரித் தூற்றுகிறார்” - சொல்கிறார் திருநாவுக்கரசர்

``பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் அல்ல. அவர் சொல்வது வேதவாக்கும் இல்லை. அரசியல் செய்வதற்காகவே தமிழ்நாடு அரசுமீது புழுதி வாரித் தூற்றுகிறார்” என்கிறார் திருநாவுக்கரசர்.

Published:Updated:
திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மியூசியம் பேருந்து நிலையத்தில், அந்தப் பகுதியின் வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி தனது சொந்தச் செலவில் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்கிறார். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு சிசிடிவி கேமரா பயன்பாட்டைத் தொடங்கிவைத்தார்.

இதையடுத்து, திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மதுரை ஆதீனமாக இருந்தாலும் சரி, எந்த ஆதீனமாக இருந்தாலும் சரி... அவர்களை நாம் மதிக்கிறோம். அரசும் மதிக்கிறது. மடாதிபதிகளை பேசவே கூடாது என்று சொல்லவில்லை. அவர்களுடைய பேச்சு, பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையிலோ, மற்ற மதங்களை இழிவுபடுத்தும்விதத்திலோ, புண்படுத்தும்விதத்திலோ, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ இருக்கக் கூடாது. அதுதான் என்னுடைய கருத்து.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை அமலாக்கத்துறை அழைத்திருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ஏற்கெனவே, கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரம் ஆகியோர் வீட்டில் ஆறு முறை சோதனை நடைபெற்றது. அதில் என்ன கைப்பற்றப்பட்டது என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. எனவே இதையெல்லாம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் செய்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்ணாமலை
அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை, ஒன்றும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் அல்ல. அவர் சொல்வது வேதவாக்கும் இல்லை. அரசியல் செய்வதற்காகவே தமிழ்நாடு அரசுமீது புழுதி வாரி தூற்றுகிறார்.

கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் அந்த மாநில முதலமைச்சரை, அவரின் குடும்பத்தை அதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளி சிக்கவைப்பதற்காக வாக்குமூலம் அளித்திருக்கிறார். ஒரு குற்றவாளியின் வாக்குமூலம் எந்த அளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism