Published:Updated:

``தாய்மொழியுடன் ஆங்கிலம், இந்தி அவசியம், ஆனால்..!" - அமைச்சர் ரோஜா

ஆந்திரா மாநில அமைச்சர் ரோஜா

"எதையும் தவறான நோக்கத்தில் பார்த்தால் எல்லாம் தவறாகத்தான் இருக்கும். நல்ல நோக்கத்தில் பார்த்தால் நல்லதாக இருக்கும்." - ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா

``தாய்மொழியுடன் ஆங்கிலம், இந்தி அவசியம், ஆனால்..!" - அமைச்சர் ரோஜா

"எதையும் தவறான நோக்கத்தில் பார்த்தால் எல்லாம் தவறாகத்தான் இருக்கும். நல்ல நோக்கத்தில் பார்த்தால் நல்லதாக இருக்கும்." - ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா

Published:Updated:
ஆந்திரா மாநில அமைச்சர் ரோஜா

ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் ரோஜா, சித்ரா பௌர்ணமி தினமான நேற்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்கள் கழித்து அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்கு இந்த கோயில் மிகவும் சென்டிமென்ட். ஏனெனில், நான் ஒரு திரைப்படம் எடுத்தபோது, அந்தப் படம் வெளியாவதற்கு ஒரு வருடம் வரை காலதாமதமாகி மிகவும் கஷ்டத்தில் இருந்தோம். அதனால் எனது திருமணம் நடப்பதற்கு மிகவும் காலதாமதம் ஆனது. 2002-ல் தான் திருமணம் நடந்தது.

சாமி தரிசனம் செய்த ரோஜா
சாமி தரிசனம் செய்த ரோஜா

'எங்களுக்கு சீக்கிரமாக திருமணம் ஆக வேண்டும், கஷ்டங்கள் தீர வேண்டும்' என்று என்னுடைய மாமனார் இங்கு 14 கி.மீ கிரிவல பாதையைச் சுற்றி வந்து வேண்டிக்கொண்டார். அருணாச்சலேஸ்வரரால் என்னுடைய கஷ்டங்கள் தீர்ந்து, செல்வாவுடன் திருமணமும் நடந்தது. தெலுங்கு தேச கட்சியில் இரண்டு முறை நான் தோற்றுவிட்டேன். கட்சிக்குள்ளேயே என்னை வளரவிடாமல் செய்தார்கள். மூன்றாவது முறை தேர்தலில் நின்றபோது இந்த கோயிலுக்கு வந்து, `நான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். என்னை வெற்றி பெற செய்யுங்கள்' என்று கிரிவலம் சுற்றி வந்து வேண்டிக்கொண்டேன். அவ்வாறே வெற்றி பெற்றேன். தொடர்ந்து வந்த தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கு சாமியின் அருள்தான் காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு வருடங்கள் கொரோனா காரணமாக நேரில் வந்து சுவாமியை தரிசிக்க முடியவில்லை. அதே போல அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, எனக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன், அதுவும் நிறைவேறியது. அதனால், இன்றைய தினம் சாமியை நேரில் வந்து தரிசித்து, நன்றிக்கடன் செலுத்திவிட்டு சொல்கிறேன். எங்களுடைய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சார் மூலமாகத்தான் இரண்டு முறை நான் எம்.எல்.ஏ ஆவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போதுகூட, தங்கையான எனக்கு மதிப்பு கொடுத்து அமைச்சரவையில் இடம் வழங்கியிருக்கிறார். ஆகவே, அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தரும் வகையில் நான் பணியாற்றுவேன்.

நடிகை ரோஜா
நடிகை ரோஜா

ஸ்டாலின் சார் தலைமையிலான அரசு மிகவும் நன்றாக இருக்கிறது. அவரை எதிர்பார்த்தது வேற மாதிரி. ஆனால், மிகவும் சாஃப்டாக... கூலாக வேலை செய்கிறார். ஏதாவது ஒன்று கேட்டால் மின்னல் வேகத்தில் செய்து முடிப்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஜெகன்மோகன் ரெட்டி சாரும், ஸ்டாலின் சாரும் நல்ல நண்பர்கள். ஜெகன்மோகன் ரெட்டி சார் முதலமைச்சர் ஆனபோது, ஸ்டாலின் சார் நேரில் வந்து வாழ்த்தி இருந்தார்கள். மாணவர்கள் வருங்காலத்தில் தேசிய, உலக அளவில் உள்ள இடங்களுக்குச் என்று நல்ல வேலை செய்ய வேண்டும் என்றால் நமது தாய் மொழியுடன் சேர்த்து ஆங்கிலம், இந்தி கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். சம்பந்தப்பட்ட இடத்திற்கான மொழி தெரியவில்லை என்றால் அந்த மாணவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை வரலாம்.

சித்ரா பௌர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலை
சித்ரா பௌர்ணமி கிரிவலம் - திருவண்ணாமலை

இந்தியை படிக்க சொல்லி யாரும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது. ஆந்திராவிலும் தமிழ் வழி கல்வி உள்ளதே! தவறான நோக்கத்தில் பார்த்தால் எல்லாம் தப்பாகதான் இருக்கும். நல்ல நோக்கத்தில் பார்த்தால் நல்லதாக இருக்கும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism