Published:Updated:

``தவற்றுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன்" - இந்திய வரைபட சர்ச்சைக்கு சசி தரூர் விளக்கம்

காங்கிரஸ் - சசி தரூர்

"என்னை மீறி நடந்த தவற்றுக்கு நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன்" - சசி தரூர்

``தவற்றுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன்" - இந்திய வரைபட சர்ச்சைக்கு சசி தரூர் விளக்கம்

"என்னை மீறி நடந்த தவற்றுக்கு நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன்" - சசி தரூர்

Published:Updated:
காங்கிரஸ் - சசி தரூர்

காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சசி தரூர், தனது வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். அதில் இருந்த இந்திய 'மேப்'பில் காஷ்மீரின் பாதிப் பகுதிகள், லடாக் ஆகியவை இடம்பெறாதது ஆளும் பா.ஜ.க-வினரால் விமர்சனத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து, அந்தப் பக்கம் சரிசெய்யப்பட்டு புதிதாக வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "யாரும் வேண்டுமென்றே இது போன்ற செயல்களைச் செய்வதில்லை. எனது குழு செய்த தவறு. தவறு சுட்டிக்காட்டப்பட்டதும் நாங்கள் அதை உடனடியாகச் சரிசெய்தோம். மேலும், என்னை மீறி நடந்த தவற்றுக்கு நான் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

சசி தரூர் வெளியிட்ட தவறான இந்திய வரைபடம்
சசி தரூர் வெளியிட்ட தவறான இந்திய வரைபடம்
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்," காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ‘யுனைட் இந்தியா அணிவகுப்பு’க்கு எதிராக பாஜக எந்தவொரு சிறிய காரணத்தையும் வெடிமருந்தாகப் பயன்படுத்துகிறது. ராகுல் காந்தியின் தற்போதைய 'பாரத் ஜோடோ யாத்ரா' மீதான கவனத்தை திசைதிருப்ப பா.ஜ.க இந்தச் சம்பவத்தின் மூலம் முயன்று, மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.