Published:Updated:

``திமுகவும் அதிமுகவும் மக்களுக்கான கட்சிகள் அல்ல!" - அரங்க.குணசேகரன்

அரங்க.குணசேகரன்
அரங்க.குணசேகரன்

ஒரு கட்டத்தில் தோழர்களிடமிருந்து முழுமையாக விலக நேர்ந்தது. சாதியொழிப்பு குறித்தும் தேசிய இன விடுதலை குறித்தும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களோடு கருத்து முரண் வந்தது.

சாதி ஒழிப்பு, பொதுவுடமை தமிழ்த்தேசியம், மனித உரிமைகள் செயற்பாடுகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னிற்கிறார் அரங்க.குணசேகரன். கீழத்தஞ்சை மாவட்டத்தில் நிலவிய பண்ணை ஆதிக்க கொடூரங்களை முடிவுக்குக் கொண்டு வந்தவர்களில் ஒருவர்.

அவருடனான உரையாடலிலிருந்து...

"தொடக்கத்தில் இடதுசாரி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டீர்கள்... எந்தப்புள்ளியில் அவர்களுடனான பிரிவு நிகழ்ந்தது?''

"என் அப்பா, எங்கள் பகுதியில் பஞ்சாயத்து செய்து பிரச்னைகளைத் தீர்ப்பவராக இருந்தார். சாதியத் தீண்டாமை நிலவிய அந்தக் காலகட்டத்திலும்கூட எல்லாச் சமூகத்தாரும் என் அப்பாவிடம் பஞ்சாயத்துக்கு வருவார்கள். இடதுசாரி இயக்கத் தலைவர்களில் ஒருவரான இம்மானுவேல் ராமராஜ் அப்பாவுக்கு நெருக்கமான நண்பர். வீட்டில் இருவரும் அடிக்கடி தீவிரமாக அரசியல் பேசுவார்கள். அதுதான் எனக்கு வெளிச்சத்தின் தொடக்கமாக அமைந்தது.

தஞ்சாவூரில் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என் பள்ளிக்கு எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம். அங்கு வந்து போகும் தலைவர்களால் ஈர்க்கப்பட்டு அதற்குள் நுழைந்தேன். மாணவர் பெருமன்றத்தில் தீவிரமாகச் செயல்பட்டேன். அக்காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சையில், சாதியொழிப்பும் நிலமீட்பும் மிக முக்கியப் பிரச்னைகளாக இருந்தன. மிராசுகளும் கார்வாரிகளும் நலிந்த மக்களை மிகுந்த கொடுமைக்குள்ளாக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதுதான் பிரதான வேலையாக இருந்தது.

அரங்க.குணசேகரன்
அரங்க.குணசேகரன்

அரியலூர் மாவட்டம் பொய்யூரில் ஆதி திராவிட மக்களின் நிலங்களைப் பறித்துக்கொண்டு கிராமத்தை விட்டே விரட்டிவிட்டார்கள். அப்போது நான் பியூசி படித்துக்கொண்டிருந்தேன். பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி திருச்சி ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்னால் அமர்ந்து போராடினோம். அந்தத் தருணத்திலிருந்து காவல்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டேன்.

ஒரு கட்டத்தில் தோழர்களிடமிருந்து முழுமையாக விலக நேர்ந்தது. சாதியொழிப்பு குறித்தும் தேசிய இன விடுதலை குறித்தும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களோடு கருத்து முரண் வந்தது. காலம் நமக்கு அனுபவங்கள் வாயிலாக நிறைய கற்றுக்கொடுக்கிறது. அந்த அனுபவங்கள்தான் இன்றுவரையிலும் நம்மை நகர்த்திச்செல்கிறது.''

"தமிழகத்தின் அரசியல்சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

"திமுகவும் சரி, அதிமுகவும் சரி, மக்களுக்கான கட்சிகள் அல்ல. அவர்கள் முதலாளிகளுக்காகத்தான் பேசுவார்கள். உண்மையில் மக்கள், இந்தக் கட்சிகளை நம்பவில்லை. கூடங்குளம் தொடங்கி ஜல்லிக்கட்டு, முல்லைப் பெரியாறு, சாத்தான்குளம் வரைக்கும் மக்கள் வீதிக்கு வந்து நியாயம் கேட்கத் தொடங்கி விட்டார்கள். அவர்களின் போராட்டங்களுக்குப் போய் கண்டன உரையோ, வாழ்த்துரையோ ஆற்றத்தான் இந்த அரசியல் கட்சிகளால் முடிகிறது.''

- அரங்க.குணசேகரனின் நேர்காணலை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2XnXoAC > மக்களிடம் மாற்றம் வந்திருக்கிறது! https://bit.ly/2XnXoA

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு