Election bannerElection banner
Published:Updated:

`அறந்தாங்கித் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கக் கூடாது` - தீக்குளிக்க முயன்ற தி.மு.க தொண்டரால் பரபரப்பு

தீக்குளிக்க முயன்ற தி.மு.க தொண்டரால் பரபரப்பு
தீக்குளிக்க முயன்ற தி.மு.க தொண்டரால் பரபரப்பு ( 342242449056101 )

2006 -ல் தி.மு.க-வுக்கு சீட் கொடுக்கப்பட்டது. அப்போது தி.மு.க வெற்றிபெற்றதோடு தமிழகத்தில் தி.மு.க ஆட்சியும் மலர்ந்தது. அதன் பிறகு 2011, 2016 ஆகிய இரு தேர்தல்களிலும் காங்கிரஸுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இரண்டு முறையும் தோல்விதான் கிடைத்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அற்ந்தாங்கி தொகுதி கடந்த 2011, 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டது. இந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது.

போராடிய தி.மு.க - வினர்
போராடிய தி.மு.க - வினர்
342242449056101

இந்தநிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு அறந்தாங்கித் தொகுதியிலிருந்து தி.மு.க சார்பில் 57 பேர் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தனர். இந்த முறை கண்டிப்பாக தி.மு.க-வுக்குதான் சீட் ஒதுக்குவார்கள் என தி.மு.க தொண்டர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இதற்கிடையே, அறந்தாங்கித் தொகுதி தற்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சிக்குத்தான் ஒதுக்கப்படவிருக்கிறது என்ற ஒரு தகவல் கசிந்ததால், விரக்தியடைந்த அறந்தாங்கி தி.மு.க தொண்டர்கள் பலரும், பேருந்து நிலையத்தின் முன்பு குவிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

அறந்தாங்கி தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்குக் கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது, திடீரென தி.மு.க தொண்டர் ஒருவர் மறைத்துவைத்திருந்த மண்ணெண்ணெயைக் கண்ணிமைக்கும் நேரத்தில் உடம்பில் ஊற்றித் தீவைத்துக்கொள்ள முயன்றார்.

போராடிய தி.மு.க - வினர்
போராடிய தி.மு.க - வினர்
342242449056101

அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சற்று பதற்றம் நிலவியது. இந்தப் போராட்டம் குறித்து தி.மு.க-வினரிடம் கேட்டபோது, ``2006-ல் தி.மு.க வேட்பாளருக்கு சீட் கொடுக்கப்பட்டது. அறந்தாங்கியில் தி.மு.க வெற்றிபெற்றதோடு தமிழகத்தில் தி.மு.க ஆட்சியும் மலர்ந்தது.

அதன் பிறகு, 2011, 2016 இரு தேர்தல்களிலும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இரண்டு முறையும் தோல்விதான் கிடைத்தது. தி.மு.க ஆட்சியும் அமையவில்லை. அறந்தாங்கியில் வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்ற சென்டிமென்ட்டும் இருக்கிறது. அறந்தாங்கித் தொகுதி இந்த முறை கண்டிப்பாக தி.மு.க-வுக்குத்தான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையிலிருந்தோம்.

போராடிய தி.மு.க - வினர்
போராடிய தி.மு.க - வினர்
342242449056101

தி.மு.க சார்பில் 57 பேர் வரையிலும் விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனால், தொகுதிக் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாகவே வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த முறை அறந்தாங்கித் தொகுதியில் தி.மு.க போட்டியிட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதனால், தி.மு.க-வுக்குத்தான் அறந்தாங்கித் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும். இல்லையென்றால், எங்கள் போராட்டம் தொடரும்" என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு