‘லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கான திட்டங்களை, அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளிலேயே வாக்குறுதியாக வழங்க வேண்டியது அவசியம்’ என்கிறார், தமிழக ஆட்சியாளர்கள் பலரின் ஊழல்களை வெளிக்கொண்டுவந்திருக்கும் ‘அறப்போர் இயக்க’த்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?”

“நடைபெறவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி, ‘ஊழல் ஒழிப்பு தேர்தல் அறிக்கை 2021’ என்ற ஒன்றை அறப்போர் இயக்கம் சார்பில் வெளியிட்டிருக்கிறோம். வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை என்ற அம்சங்களின் அடிப்படையிலான கோரிக்கைகளை அதில் முன்வைத்திருக்கிறோம். ஆர்.டி.ஐ எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பாதுகாப்பது, சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவருவது, லோக் ஆயுக்தாவை வலுப்படுத்துவதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருவது என்று பல விஷயங்களை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். இவற்றை அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.”

“எந்தெந்தக் கட்சிகளிடம் இந்தத் தேர்தல் அறிக்கையை வழங்கியிருக்கிறீர்கள்... அவர்களின் எதிர்வினை என்னவாக இருந்தது?”

“மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்து இதை வழங்கினோம். ‘ஊழல் ஒழிப்புக்கென தனியாக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிடுவது மிகவும் நல்ல விஷயம்’ என்று சொன்னார். ஏற்கெனவே, சேவை பெறும் உரிமைச் சட்டம் குறித்து அவரிடம் சொல்லியிருந்தோம். தற்போது, ‘சேவை பெறும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவருவோம்’ என்று அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து இதை வழங்கவிருக்கிறோம்.”

“இதற்கு முன்பாக, இதுபோல ஊழல் ஒழிப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறீர்களா?”

“2016 சட்டமன்றத் தேர்தலின்போது, தமிழகத்தில் ஊழல் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கூடிய ‘லோக் ஆயுக்தா’ கொண்டுவரப்பட வேண்டும் என்று எல்லா கட்சிகளிடமும் முறையிட்டோம். பெரும்பாலான அவர்களும் அதைத் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதியாகத் தந்தார்கள். தமிழக அரசு 2018-ம் ஆண்டு, லோக் ஆயுக்தாவைக் கொண்டுவந்தது. அதற்கான மசோதா சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, மக்களிடம் கருத்து கேட்டு அதை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னோம். அப்படி அவர்கள் செய்யவில்லை. எந்த அதிகாரமும் இல்லாமல் அதைக் கொண்டுவந்தார்கள். அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்தித்து, அதில் சில சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று சொன்னோம். சட்டத் திருத்தம் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை அதைச் செய்யவில்லை.”

“ஊழல் ஒழிப்பு தேர்தல் அறிக்கையில் உடனடியாகச் செய்ய வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?”

“லஞ்சத்தை ஒழிப்பதற்கு, சேவை பெறும் உரிமைச் சட்டம் மிக மிக அவசியம். பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் என ஒவ்வொன்றும் எத்தனை நாள்களுக்குள் வழங்கப்படும் என்பதை அரசு அறிவிக்க வேண்டும். அதை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிமீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு மாநிலத் தகவல் ஆணையம் இருப்பதைப்போல, சேவை பெறும் உரிமைச் சட்டத்தின்படி சேவைகள் ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும். பல மாநிலங்களில் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். தமிழகத்திலும் அதைக் கொண்டுவர வேண்டும்.

இரண்டாவதாக, லோக் ஆயுக்தாவை அதிகாரமிக்க ஒன்றாக மாற்ற வேண்டும். ஊழல் புகார்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். லோக் ஆயுக்தாவின் கீழ், தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தைக் கொண்டுவர வேண்டும். முழுக்க முழுக்க தன்னாட்சி பெற்றதாக இது செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வலிமையான லோக் ஆயுக்தாவைக் கொண்டுவந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.”

“தேர்தல் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகளுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் வருகிறது. அது பற்றிய வெளிப்படைத்தன்மை இல்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. இது குறித்து என்ன கோரிக்கை வைத்திருக்கிறீர்கள்?”

“தேர்தல் சீர்திருத்தம் என்கிற பெயரில், `தேர்தல் பத்திரம்’ என்கிற முறை மத்திய பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் லஞ்சத்தைச் சட்டரீதியாக வாங்கலாம் என்பதுபோலச் செய்திருக்கிறார்கள். இதில் மிகப்பெரிய அளவுக்கு மோசடி நடக்கிறது. யாரிடமிருந்து, எவ்வளவு தேர்தல் நிதி வந்தது என்பது வெளிப்படையாகத் தெரியாது. மிகப்பெரும் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமான காரியங்களைச் செய்து கொடுத்து, `தேர்தல் நன்கொடை’ என்கிற பெயரில் கோடிக்கணக்கான ரூபாயை ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் பெறுகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு ஏராளமாக நிதி வந்ததாகச் செய்திகள் வந்துள்ளன. எனவே, தேர்தல் பத்திரம் என்கிற முறை ரத்துசெய்வது தொடர்பான வாக்குறுதியை, தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.”

“அ.தி.மு.க அரசுக்கு எதிராகப் பல குற்றச் சாட்டுகளை அறப்போர் இயக்கம் முன்வைத்திருக்கிறது. அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கிறீர்கள். இந்தக் கட்சிகளிடம் போய் ஊழல் ஒழிப்பு தேர்தல் அறிக்கையை நீங்கள் கொடுக்கும்போது, அவர்கள் என்ன மாதிரியாக எதிர்வினையாற்றுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?”

“நாங்கள் இதை எங்கள் கடமையாகப் பார்க்கிறோம். ஆட்சியாளர்களோ, அதிகாரிகளோ தவறு செய்தால், அதைக் கேள்வி கேட்பது நமது கடமை. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படு கிறார்கள். எனவே, வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை அளிப்பதற்கு இதையெல்லாம் செய்யப்போகிறோம் என்பதை மக்களுக்கு வாக்குறுதிகளாக அளிக்க வேண்டியது அவர்களின் கடமை. சில கட்சிகள் எங்கள்மீது கோபப்படலாம், வருத்தப்படலாம். ஆனால், இது போன்ற வாக்குறுதிகளைக் கொடுக்கவைத்தால்தான், ஆட்சிக்கு வந்த பிறகு, ஏன் இதையெல்லாம் செய்யவில்லை என்று அவர்களிடம் கேள்வி கேட்க முடியும்.”