Published:Updated:

`முத்து மாணிக்கம் விஷயத்துல தலையிட்டா நிம்மதி போயிடும்' - பதறிய திமுக எம்.எல்.ஏ! பின்னணி என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திமுக யூனியன் சேர்மன் முத்து.மாணிக்கம்
திமுக யூனியன் சேர்மன் முத்து.மாணிக்கம்

நான் எம்.எல்.ஏ-வான அசோக்குமாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். ``முத்து மாணிக்கம் விஷயத்துல நான் தலையிட்டா என்னோட நிம்மதி போயிடும்" என அவர் ஓப்பனாகவே கூறி ஒதுங்கிக்கொண்டதாக, திமுக ஊராட்சி மன்றத் தலைவர் கூறியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக-வைச் சேர்ந்த முத்து.மாணிக்கம் என்பவர் யூனியன் சேர்மனாகப் பதவி வகித்துவருகிறார். இவர் திமுக-வில் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளராகவும் இருந்துவருகிறார். முத்து மாணிக்கம், பேராவூரணி தொகுதி திமுக எம்.எல்.ஏ அசோக்குமாரின் சொந்த மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுக யூனியன் சேர்மன் முத்து.மாணிக்கம்
திமுக யூனியன் சேர்மன் முத்து.மாணிக்கம்

முத்து மாணிக்கம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் பணிகளில் இரண்டு சதவிகித கமிஷன் கேட்பதாகவும், அதற்கு இடையூறாக இருக்கும் தன்னை ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, பிஜேபி ஆதரவாளரான ஒருவரை அந்தப் பதவிக்கு கொண்டுவந்ந்திருப்பதாக திமுக பிரமுகரும், குருவிக்கரம்பை ஊராட்சி மன்றத் தலைவருமான வைரவன் என்பவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டிவருவருகிறார். இது அந்தப் பகுதி திமுக-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து வைரவன் என்பவரிடம் பேசினோம். ``திமுக-வைச் சேர்ந்த நான் தொடர்ந்து இரண்டாவது முறையாக குருவிக்கரம்பை ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்துவருகிறேன். என்னுடைய ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடத்தினேன். இதற்காக, தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியின் திமுக எம்.பி பழநி மாணிக்கம் போட்டோவைப் பயன்படுத்தி ஃப்ளெக்ஸ் வைத்தேன்.

திமுக பிரமுகர் வைரவன்
திமுக பிரமுகர் வைரவன்

பழநி மாணிக்கத்துக்கு எதிராகச் செயல்பட்டுவரும் முத்து மாணிக்கம், பழநி மாணிக்கத்தின் போட்டோவைப் போட்டதற்காக என்னை மிரட்டினார். 37 பஞ்சாயத்துகளிலும் பணிபுரியும் கிளார்க்குகளை ஒரே நேரத்தில் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு முயன்றார். ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என அதற்கும் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். `மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்', `ஜல் ஜீவன் மிஷன் திட்டம்' உள்ளிட்ட பல திட்டங்களின் மூலம் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இரண்டு சதவிகித கமிஷன் கொடுக்க சம்மதித்தால் மட்டுமே அந்தப் பணிகளுக்கு ஒப்புதல் கொடுக்க வைப்பேன் என ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் கூறிவந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பி.டி.ஓ உள்ளிட்ட அரசு அலுவலர்களை மரியாதைக் குறைச்சலாக நடத்துவதால், அவர்களும் மனம் நொந்து காணப்படுகின்றனர். யாராக இருந்தாலும், `நடக்குறது எங்க ஆட்சி, நான் சொல்றதை நீங்க செய்யுங்கு' என அதிகாரிகளிடம் அடாவடியாக நடந்துகொள்கிறார். அரசு விதிகள் எதையும் பின்பற்றுவதில்லை தன் கல்லாவை நிரப்புவதிலேயே குறியாக இருக்கிறார். இதை நான் எம்.எல்.ஏ-வான அசோக்குமாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். `முத்து மாணிக்கம் விஷயத்துல நான் தலையிட்டா என்னோட நிம்மதி போயிடும்' என அவர் ஓப்பனாகவே கூறி ஒதுங்கிக்கொண்டார்.

`பார் ஏலம் எடுத்துத் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி' - திமுக நிர்வாகிமீது மகளிரணிப் பிரமுகர் புகார்

பழனி மாணிக்கத்திடமும் இதைத் தெரியப்படுத்தியிருக்கிறேன். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, கழக வேட்பாளர் அசோக்குமாருக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டார். இது திமுக தோல்வியடையக் காரணமாக அமைந்தது. எனவே, கட்சித் தலைமை முத்து மாணிக்கத்தை கட்சியிலிருந்து நீக்கியது. பின்னர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு இணைந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சிக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதுபோல் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். கமிஷன் விஷயத்தில் கறார் காட்டுவதையும், அதற்கு ஒத்துக்கொண்டால்தான் குறிப்பிட்ட ஊராட்சிக்குப் பணிகள் ஒதுக்கப்படும் என்பதையும் நான் எதிர்த்தேன்.

இதற்காக, சில ஊராட்சி மன்றத் தலைவர்களைத் தூண்டிவிட்டு ஊராட்சி மன்றக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த என்னை நீக்கவைத்தார். பிஜேபி-யின் ஆதரவாளரான சொக்கநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவரான ராம்பிரசாத் என்பவரை கூட்டமைப்பின் தலைவராகக் கொண்டுவந்திருக்கிறார். இது குறித்து நான் கேட்டதற்கு, `உன்னால முடிஞ்சதை நீ செஞ்சுக்க’ என்று என் உறவினர்கள் மூலமாக என்னை மிரட்டுகிறார். கட்சித் தலைமை இதில் தலையிட்டு, ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபடும் அவருக்குப் பாடம் புகட்ட வேண்டும். இதை முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்துக்கும் கொண்டு செல்வேன்" என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை; அதிகாரி மற்றும் திமுக, அதிமுக பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு

இது குறித்து முத்து மாணிக்கத்திடம் பேசினோம். ``ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான கூட்டமைப்பின் தலைவராக இருந்துகொண்டு, தன்னுடைய ஊராட்சியின் வளர்ச்சிக்கு மட்டும் கவனம் செலுத்துவதால், மற்ற ஊராட்சி மன்றத் தலைவர்கள் அதிருப்தியடைந்தனர். அதனால் வைரவனை மாற்றி ராம்பிரசாத் என்பவரைக் கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர் பிஜேபி-யைச் சேர்ந்தவர் எனக் கூறுவது தவறு. தன்னுடைய சொந்த நிலங்களை ஐந்து ஊராட்சிகளின் மக்கள் பயன்பாட்டுக்காகக் கொடுத்து, மக்கள் பணி செய்பவர் ராம்பிரசாத். அவர் விரைவில் திமுக-வில் சேரவிருக்கிறார். என்னுடைய அப்பா மறைந்த கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. எங்களுடையது பாரம்பர்யமான குடும்பம். மக்கள் மத்தியில் செல்வாக்கான குடும்பம் என்னுடையது என்பதைப் பலரும் அறிவர். கமிஷன் கேட்பதாக அவர் அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறிவருகிறார். என்மீதுகொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நான் கமிஷன் கேட்பதாகப் பலவிதமான பொய்ப் புகார்களைப் பரப்பிவருகிறார். என்னைப் பற்றி விசாரித்தால் உண்மை தெரியும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு