Published:Updated:

திமுக: ஒன்றியச் செயலாளர் தேர்தல்; புகார்களுடன் அறிவாலயம் படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

திமுக - அண்ணா அறிவாலயம்

தி.மு.க-வில் நடைபெற்றும் வரும் உட்கட்சித் தேர்தலில் அனுதினமும் பிரச்னை வெடிப்பதால், அறிவாலயத்துக்கு புகார் மனுக்கள் குவிந்துவருகின்றன.

திமுக: ஒன்றியச் செயலாளர் தேர்தல்; புகார்களுடன் அறிவாலயம் படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

தி.மு.க-வில் நடைபெற்றும் வரும் உட்கட்சித் தேர்தலில் அனுதினமும் பிரச்னை வெடிப்பதால், அறிவாலயத்துக்கு புகார் மனுக்கள் குவிந்துவருகின்றன.

Published:Updated:
திமுக - அண்ணா அறிவாலயம்

இரட்டைத் தலைமையில் செயல்படும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க-விலேயே உட்கட்சித் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துவிட்டது. ஆனால், ஒற்றைத் தலைமையுடன், ஆளுங்கட்சியாகச் செயல்படும் தி.மு.க-விலோ உட்கட்சித் தேர்தலில் அனுதினமும் பிரச்னைதான். கடந்த ஒருவாரக் காலமாக புகார் மனுக்களுடன் தி.மு.க நிர்வாகிகள் அறிவாலயத்துக்குப் படையெடுத்துவந்துகொண்டிருக்கிறார்கள். இதன் பின்னணி என்ன? என்பது குறித்து அறிவாலய முக்கியப்புள்ளி ஒருவரிடம் பேசினோம்.

``ஒரு கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு அடுத்து முக்கியமானப் பதவி என்றால் அது ஒன்றியச் செயலாளர் பதவிதான். அப்பதவியில் உள்ளவர்தான் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பார்கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் முடியாதக் காரியத்தைக் கூட, ஒன்றியச் செயலாளர் நேரடியாக அமைச்சரை அணுகி முடித்துக்கொடுப்பார். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தப் பொறுப்புகளுக்குத்தான் தற்போது தி.மு.க-வில் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில்தான் பிரச்னைகளும் நடந்துவருகின்றன.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆ.ராசா
ஆ.ராசா

ரொம்பப் பிரச்னைக்குரிய ஒன்றியச் செயலாளர்களைத் தவிர, மற்றவர்களை மாற்ற வேண்டாம், தொடரட்டும் மீண்டும் புகார்கள் வந்தால் மாற்றிக்கொள்ளலாம் என்றுதான் தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்டது. இருந்தபோதும் பல ஆண்டுகளாக ஒரே ஒன்றியச் செயலாளரே தொடர்ந்து பொறுப்பில் இருப்பதையும், ஏகப்பட்டப் புகார்களுக்கு உள்ளானவர்கள் தொடர்ந்து பொறுப்பு வகிப்பதை விரும்பாமலும் தி.மு.க நிர்வாகிகள் புகார்களை அள்ளிக்கொண்டு அறிவாலயத்தில் ஐக்கியமாகிறார்கள். முதலில், இவ்வாறானப் புகார்களை விசாரிக்க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, முதன்மைச் செயலாளர் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர்தான் தலைமையினால் அமர்த்தப்பட்டனர். ஆ.ராசாவுக்கும், நேருவுக்கும் முட்டிக்கொள்ளவே, நேரு அதிலிருந்து விலகிக்கொண்டார். அதன்பிறகு தங்கம் தென்னரசுவும் அமைச்சகப் பணிகள் காரணமாக கழன்றுகொள்ள, தற்போது ஆ.ராசாவுடன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், என்.ஆர்.இளங்கோவும் இணைந்துள்ளனர்.

புகார் கொடுக்க வந்த திமுக நிர்வாகிகள்
புகார் கொடுக்க வந்த திமுக நிர்வாகிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புகார்கள் குறித்து சிலவற்றைச் சொல்கிறேன். திருப்பூர் கிழக்கு மாவட்டத்தில் முக்கிய புள்ளி ஒருவர் சென்னிமலை மேற்கு ஒன்றியச் செயலாளராக ராமசாமி என்பவரை நியமனம் செய்துள்ளார். கட்சியில் இல்லாதவர்களுக்குக் கட்சிப் பதவி கொடுத்ததாகவும், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் டீலிங் போட்டுக்கொண்டு, அக்கட்சிக்கு வாக்களிக்குமாறு தி.மு.க கவுன்சிலர்களிடம் பேரம் பேசியதாகவும் புகார்கள் குவிந்துள்ளன. அவருக்கு ஒன்றியப் பதவி கொடுக்கப்பட்டதை எதிர்த்து அந்த மாவட்ட நிர்வாகிகள் புகார் மனுக்களை எடுத்துக்கொண்டு வந்தனர். அதேபோல, தேனி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், கம்பம் ஒன்றியத்துக்கு தங்கபாண்டியன் என்கிற நபரைச் செயலாளராக நியமித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த மாவட்ட நிர்வாகிகளும் படையெடுத்திருந்தனர். இவை மட்டுமின்றி, ஈரோடு, கோவை, தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட வேறு சில மாவட்டங்களிலிருந்தும் நிர்வாகிகள் அறிவாலயத்தில் குவிந்தனர்.

அறிவாலயம்
அறிவாலயம்

எல்லோருடையப் புகார்களையும் பெற்றுக்கொள்ளும் ஆ.ராசா தலைமையிலான குழு, வந்த நிர்வாகிகளை நிற்கவைத்தே 5 முதல் 10 நிமிடங்கள் பேசுகிறது. புகாருக்குள்ளான ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளிடம் ஸ்பாட்டிலேயே போன் போட்டு விளக்கம் கேட்டு அதனையும் குறித்துக்கொள்கிறார்கள். பின்னர், வந்தவர்களிடம், ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நல்லதே நடக்கும் ஊருக்குப் புறப்படுங்கள்’ என்று கூறிவிட்டு அனுப்பிவிடுகிறது அக்குழு. எனினும், இந்த ஒருவார காலமும் வாங்கப்பட்டப் புகார்களின் நிலை என்னவென்று புகார் கொடுத்த ஒருவருக்கும் தெரியப்படுத்தவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தொடர்ந்து பிரச்னைகள், புகார்கள் வருவதால் இதுவரை அமைதிகாத்துவந்த முதல்வரும், கட்சித் தலைவருமான ஸ்டாலின், ஜூன் 16-ம் தேதி மாலை 5 மணியளவில் திடீரென அறிவாலயம் சென்றார். அந்த நேரத்திலும் கூடியிருந்த நிர்வாகிகளைப் பார்த்து வணக்கம் வைத்துவிட்டு, தனது அறைக்குச் சென்றவர், விசாரணைக் குழுவினரை அழைத்து புகார்கள் குறித்துக் கேட்டறிந்தார். புகார் கொடுக்கும் படலம் இன்னும் சில நாள்கள் தொடரும் என்றே தெரிகிறது” என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism