Published:Updated:

ராகுல் பேசிய மேடையிலிருந்த கண்ணாடிக்கூண்டு... திடீரென அகற்றப்பட்டதன் பின்னணி என்ன?

ராகுல் பேசிய மேடையிலிருந்த கண்ணாடிக்கூண்டு

ராகுல் காந்தி மேடைக்கு வரும் முன்பு அவர் பேசுவதற்காக வைக்கப்பட்டிருந்த மைக் போடியத்துக்கு பக்கத்தில் ஒரு கண்ணாடிக்கூண்டு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கூண்டைப் பாதுகாப்புப் படையினர் துடைத்துவைத்திருந்தனர்.

ராகுல் பேசிய மேடையிலிருந்த கண்ணாடிக்கூண்டு... திடீரென அகற்றப்பட்டதன் பின்னணி என்ன?

ராகுல் காந்தி மேடைக்கு வரும் முன்பு அவர் பேசுவதற்காக வைக்கப்பட்டிருந்த மைக் போடியத்துக்கு பக்கத்தில் ஒரு கண்ணாடிக்கூண்டு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கூண்டைப் பாதுகாப்புப் படையினர் துடைத்துவைத்திருந்தனர்.

Published:Updated:
ராகுல் பேசிய மேடையிலிருந்த கண்ணாடிக்கூண்டு

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் நேற்று மாலை பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி தொடங்கினார். முதல்வர் ஸ்டாலினிடமிருந்து தேசியக்கொடியை பெற்றுக்கொண்ட அவர், சுமார் 600 மீட்டர் நடந்து சென்று கடற்கரை சாலையில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார். ராகுல் காந்தி மேடைக்கு வரும் முன்பு அவர் பேசுவதற்காக வைக்கப்பட்டிருந்த மைக் போடியத்துக்கு பக்கத்தில் ஒரு கண்ணாடிக்கூண்டு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கூண்டை பாதுகாப்புப் படையினர் துடைத்துவைத்திருந்தனர். அது புல்லட் புரூஃப் கூண்டு எனவும், கடல் ஓரத்தில் மேடை அமைக்கப்பட்டிருப்பதால் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி மைக்கில் பேசும்போது போடியத்துக்கு முன் பகுதியில் வைக்கப்படும் எனவும் கூறப்பட்டது. அப்போது சிலர், `ராகுல் காந்திக்கும் மக்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்தும் இந்தக் கூண்டு எதற்கு?' என்று கூறியிருக்கின்றனர். மேடையில் நின்ற சிலர் அந்தக் கூண்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டனர்.

கூண்டை அகற்றிய பாதுகாப்பு படையினர்
கூண்டை அகற்றிய பாதுகாப்பு படையினர்

இதற்கிடையே பாதுகாப்பு வீரர்கள் சிலர் சேர்ந்து அந்தக் கூண்டை அகற்றி மேடையில் ஓர் ஓரமாக வைத்துவிட்டனர். மக்களுடனான நெருக்கம் குறைந்துவிடும் என்று ராகுல் காந்தி கூறியதால் அந்தக் கூண்டு அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அது குண்டு துளைக்காத கூண்டு அல்ல, சாதாரண கண்ணாடிக்கூண்டுதான் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். மேடையில் நின்ற ஒரு காங்கிரஸ் நிர்வாகி நம்மிடம் பேசுகையில், "ராகுல் காந்தி பேசும் மேடை கடற்கரையை ஒட்டி இருந்ததால் கடல் காற்று அதிகமாக இருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கூண்டு இல்லாமல் பேசும் ராகுல்
கூண்டு இல்லாமல் பேசும் ராகுல்

கடல் காற்று வீசும்போது அது மைக்கில் பெரும் சப்தத்துடன் இரைச்சலாகக் கேட்கும். எனவே, கடல் காற்றைத் தடுக்கும்விதமாக வைக்கப்பட்ட சாதாரணக் கண்ணாடிக்கூண்டுதான். காற்று எதிர்பார்த்த அளவு வீசாததால் அந்தக் கூண்டு மாற்றி வைக்கப்பட்டது. மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகும் ராகுல் காந்தி புல்லட் புரூஃப் கூண்டை விரும்ப மாட்டார்" என்றார். ராகுல் காந்தி மேடையில் வைக்கப்பட்டிருந்த கூண்டு குறித்து கூட்டத்துக்கு வந்த பொதுமக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் தொடர்ந்து விவாதித்துவருகின்றனர்.