Published:Updated:

`நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி!' - முட்டிமோதும் அதிமுக - பாஜக

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்
அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி - பன்னீர்

`அதிமுக - பாஜக., இந்த இரண்டு கட்சிகளில் எந்த கட்சி மக்கள் மனதில் எதிர்க்கட்சியாக இடம்பிடிக்கிறது?'

`வாழ்ந்தவர் கோடி.. மறைந்தவர் கோடி.. மக்களின் மனதில் நிற்பவர் யார்..!' என்ற எம்.ஜி.ஆர் பாடலுக்கேற்ப தான் தற்போதைய அரசியல் சென்றுகொண்டிருக்கிறது. தி.மு.க ஆளுங்கட்சியாகிவிட்டது, அதனால் அதைவிட்டுவிடுவோம். எதிர்க்கட்சி அந்தஸ்தில் பிரதானமாக அமர்ந்திருப்பது அ.தி.மு.க-தான். ஆனால், 4 எம்.எல்.ஏ-க்களை கையில் வைத்துக்கொண்டு ‘நாங்கள்தான் எதிர்க்கட்சி’ என்று சொல்லாமல் சொல்லி அதிரடிக்கிறது தமிழக பாஜக. அதிமுக - பாஜக., இந்த இரண்டு கட்சிகளில் எந்த கட்சி மக்கள் மனதில் எதிர்க்கட்சியாக இடம்பிடிக்கிறது?

ஆர்.எம்.பாபு முருகவேல்
ஆர்.எம்.பாபு முருகவேல்

அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசினோம். ``எந்த கட்சியை விடவும் மற்ற கட்சி குறைந்தது என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், மக்களுக்கு 60 ஆண்டுக்கால வரலாறு தெரியும். 1967-ல் காங்கிரஸுக்கு தமிழகத்தில் மாற்றானோம். அதன்பிறகு காங்கிரஸால் வர முடியவில்லை. 2001-ல் 6 இடங்களை பா.ஜ.க ஜெயித்தது. அன்று தி.மு.க-வால் வெற்றி பெற்றது. இன்று அ.தி.மு.க-வால் வென்றிருக்கிறது. எந்தத் தேசியக் கட்சியானாலும் சரி இரு திராவிடக் கட்சிகளின் முதுகில் ஏறித்தான் சவாரி செய்ய முடியுமே தவிர, தனியாகச் செல்ல முடியாது. அவர்களே அவர்களைப் பெருமையாகப் பேசிக்கொள்வதற்கான வேலைதானே தவிர, வேறொன்றுமில்லை.

``அதிமுக மீதான பாஜக-வின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வேண்டும்!'' - கேட்கிறார் கல்யாண சுந்தரம்

அதிமுக - திமுக மட்டுமே இங்குக் கோலோச்ச முடியும். தொண்டர்கள், கட்சி பலம் உள்ளிட்டவற்றில் அதிமுக முதலிலும், திமுக அடுத்த இடத்திலும் இருக்கிறது. பாஜக-வில் ஒவ்வொரு தலைவர்கள் மாறும்போது, அவர்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காகவும், தங்களை வீரதீரனாகக் காட்டிக்கொள்வதற்காகவுமே செயல்படுகிறார்கள். அது அவர்கள் பலத்தைக் கூட்டிக்கொள்ள மட்டுமே உதவும். எங்களுக்குப் பின்னால் வேண்டுமானால் ஓடிவரலாம், ஒருக்காலும் எங்களைத்தாண்டி பா.ஜ.க-வால் ஓடவே முடியாது. மக்கள் மனதில் என்றென்றும் அதிமுக-வே நிலைத்திருக்கும்” என்றார்.

எடப்பாடி - பன்னீர் - மோடி
எடப்பாடி - பன்னீர் - மோடி

பா.ஜ.க தரப்பில் சிலரைத் தொடர்புகொண்டோம், சில பல பணிகளில் பிஸியாக இருப்பதாகச் சொன்னார்கள். அதனால், அண்ணாமலை தரப்பில் பெயர் வேண்டாம் என்ற கோரிக்கையோடு ஒருவர் பேசினார். ``முன்பு தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் இருந்தபோது எப்படி கட்சி உயிர்ப்புடன் இருந்ததோ, அதைவிடப் பன்மடங்கு உயிர்ப்புடன் தற்போது தமிழக பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழிசை தலைவராக இருந்தபோது அவரின் செயல்பாடுகளையும் இப்படித்தான் கிண்டலடித்தார்கள். அதுபோலவே அண்ணாமலையின் நடவடிக்கைகளையும் கிண்டலடிக்கிறார்கள். என்ன செய்வது ஸ்மார்ட் போன் உள்ளவர்கள் எல்லாம் இன்று எழுத்தாளர் ஆகிவிட்டார்கள். ஏதாவது மக்கள் கண்ணில் படும்படி செய்துகொண்டே இருந்தால்தான் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியும். இத்தனை நாள் பா.க-வின் செயல்பாடுகளினால்தான் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நான்கு எம்.எல்.ஏ-க்கள் கிடைத்திருக்கின்றனர்.

அண்ணாமலை, கரு.நாகராஜன்
அண்ணாமலை, கரு.நாகராஜன்

இதனை 40-ஆக அதிகரிப்பதே அண்ணாமலையின் முதல் திட்டம். அடுத்த பத்தாண்டுகளில் ஆட்சியைப் பிடிப்பது என்பது தொலைநோக்குத் திட்டம். தி.மு.க அரசின் ஒவ்வொரு அசைவுக்கும் பாஜக-தான் பதிலடிக் கொடுத்து வருகிறது. ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் ரியாக்ட் செய்வது பா.ஜ.க-தான்” என்கிறார்.

`பாஜக வாக்குகள் அதிமுக-வுக்கு அதிகம் சென்றுள்ளது!’ - அடித்து சொல்லும் அண்ணாமலை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு