Published:Updated:

பட்டுக்கோட்டை நகராட்சி நகர்மன்றத் தலைவர் ரேஸ்; ஐந்து முனை போட்டியால் விழி பிதுங்கும் திமுக தலைமை!

பட்டுக்கோட்டை நகராட்சி

தி.மு.க-வில் மட்டுமே நகர் மன்றத் தலைவர் பதவியை பிடிப்பதற்கு நான்கு கோஷ்டிகளுக்குள் கடும் போட்டி நிலவுவதால் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை நகராட்சி நகர்மன்றத் தலைவர் ரேஸ்; ஐந்து முனை போட்டியால் விழி பிதுங்கும் திமுக தலைமை!

தி.மு.க-வில் மட்டுமே நகர் மன்றத் தலைவர் பதவியை பிடிப்பதற்கு நான்கு கோஷ்டிகளுக்குள் கடும் போட்டி நிலவுவதால் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
பட்டுக்கோட்டை நகராட்சி

பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் சமபலத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இரு கட்சிகளுமே நகர்மன்றத்தை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க-வில் மட்டுமே நகர் மன்றத் தலைவர் பதவியை பிடிப்பதற்கு நான்கு கோஷ்டிகளுக்குள் கடும் போட்டி நிலவுவதால் ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் 50 ஆண்டுகள் பழமையான பட்டுக்கோட்டை நகராட்சியில் புதிய நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற்கப் போவது யார் என்பது அனைத்து தரப்பினரிடமும் பெரும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

மதிமுக ஜெயபாரதி விசுவநாதன்
மதிமுக ஜெயபாரதி விசுவநாதன்

பட்டுக்கோட்டை 1968-ம் ஆண்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. முதல் நகர் மன்றத்தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடக்க காலம் முதலே பட்டுக்கோட்டை நகராட்சிக்கு நகர் மன்றத் தலைவரை தேர்தெடுப்பதில் பெரும்பாலும் இழுபறி நிலையே ஏற்பட்டுள்ளது. தற்போதும் அந்த பாணியே தொடர்கிறது. பட்டுக்கோட்டையை பொறுத்தவரை ம.தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த முன்னாள் நகர் மன்றத் தலைவரான விசுவநாதன் குடும்பத்தினர், மறைந்த சீனி.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் என இருதரப்பிற்கும் தான் எப்போதும் நகர் மன்றத் தலைவர் பதவியை பிடிப்பதற்கான போட்டி நிலவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த சமயத்தில் சினிமாவை விஞ்சக்கூடிய வகையில் காட்சிகள், களேபரங்கள் நடக்கும். பெரும்பான்மையான வெற்றிகள் இருதரப்புக்கும் கிடைக்காத நிலையில் குதிரை பேரம், கவுன்சிலர்களை கடத்திச் செல்வது போன்ற பரபரப்பு சம்பவங்களும் முந்தைய காலத்தில் அரங்கேறியிருக்கின்றன. இந்தமுறை ஐந்து முனை போட்டி நிலவி வருவது எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

திமுகவை சேர்ந்த பிரியா இளங்கோ
திமுகவை சேர்ந்த பிரியா இளங்கோ

பட்டுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ம.தி.மு.க-வைச் சேர்ந்த ஜெயபாரதி விசுவநாதனையும் சேர்த்து 13 இடங்களை பிடித்துள்ளது தி.மு.க. இதே போல, அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா வென்ற ஒரு வார்டையும் சேர்த்து அதே 13 இடங்களை பிடித்துள்ளது அ.தி.மு.க. சரி சமமாக இரு கட்சிகளும் இருக்க கூடிய நிலையில் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஏழு பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள்தான் நகர் மன்றத் தலைவரை நியமிக்கக் கூடியவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சுழ்நிலையில் நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் சமபலத்தை பெற்றுள்ளதால், நகர் மன்றத் தலைவர் பதவியை அலங்கரிக்கப் போவது யார், அதற்காக யாரெல்லாம் தீவிரமாக மெனக்கெடுகின்றனர் என்பது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம்...

``பட்டுக்கோட்டை நகராட்சி நகர்மன்றத் தலைவர் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தி.மு.க கூட்டணியில் உள்ள ம.தி.மு.க கேட்கிறது. கொடுத்த ஒரே வார்டில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்ற ஜெயபாரதி நகர்மன்றத் தலைவர் பதவியை கேட்கிறார். வைகோவுக்கு நெருக்கமாக இருந்த மறைந்த விசுவநாதனிடம் சிலர், `நீங்க வேறு கட்சிக்கு போகப்போறதா சொல்றாங்களே'னு அப்போது கேட்டார்கள்.

பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தலில் வென்ற சாந்தி குணசேகரன்
பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தலில் வென்ற சாந்தி குணசேகரன்

அதற்கு விஸ்வநாதன், `சாகுற வரைக்கும் ம.தி.மு.க-வுல வைகோ கூடதான் இருப்பே'னு சொன்னார். கடைசிவரை அதை கடைப்பிடித்து மறைந்தார். கணவர் இறந்து பல வருடங்கள் ஆன நிலையிலும் அவர் மனைவி ஜெயபாரதியும் விசுவநாதன் வழியில் ம.தி.மு.க-விலேயே தனது பயணத்தை தொடர்கிறார். வைகோவையும், ம.தி.மு.க-வையும் உணர்வாக நினைக்கும் அவர் கட்சியில் மாநில தீர்மானக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். வைகோ மகன் துரை வையாபுரி முதலமைச்சர் ஸ்டாலினிடம் பட்டுக்கோட்டை நகராட்சி நகர்மன்றத் தலைவர் பதவியை எங்களுக்கு கொடுங்கனு கேட்டிருக்கிறார்.

அவரும் சரி என சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதே போல் சீனி.பன்னீர்செல்வத்தின் தம்பிகளான சீனி.அண்ணாதுரை, சீனி.இளங்கோ இருவரும் பட்டுக்கோட்டை தி.மு.க-வில் ஆளுமை மிக்கவர்களாக இருந்தவர்கள். பிரச்னை ஒன்றின் காரணமாக சீனி.அண்ணாதுரை குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கியது தி.மு.க தலைமை. ஆனாலும், நகரத்தில் உள்ள தங்கள் ஆதரவாளர்களை தங்கள் கண்ட்ரோலிலேயே வைத்திருந்தனர்.

அதிமுகவினருடன் வைத்திலிங்கம்
அதிமுகவினருடன் வைத்திலிங்கம்

ஏற்கெனவே நகர்மன்றத் தலைவராக இருந்த பிரியா சீனி. இளங்கோவின் மனைவி. இவரை கட்சியை விட்டு நீக்காததால் தற்போது தி.மு.க சார்பிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பட்டுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், சேர்மன் பதவியை பிரியா இளங்கோ கேட்கிறார். பட்டுக்கோட்டை தி.மு.க நகர பொறுப்பாளரான எஸ்.ஆர்.என் செந்தில்குமார் தன் மனைவி சண்முகபிரியாவிற்கு சேர்மன் பதவியை கேட்கிறார். ஜெயபாரதிக்கு கொடுத்தால் சீனி.இளங்கோ தரப்பு ஏற்று கொள்ளமாட்டார்கள். அதே போல் பிரியா இளங்கோவிற்கு கொடுத்தால் ஜெயபாரதி தரப்பு ஏற்று கொள்ளமாட்டார்கள்.

இந்த இரண்டு குடும்பமும் பல வருடங்களாக எதிரும், புதிருமாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதை வைத்தே செந்தில்குமார் எப்படியாவது தன் மனைவி சண்முகபிரியாவை சேர்மன் ஆக்கியே தீர வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். இரண்டு கட்சியிலும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சேர்மனாக பதவி வகித்துள்ளனர். ஆனால், அகமுடையருக்கும், முத்தரையர் சமூகத்திற்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், புதிய ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்ற குரல்களும் ஒலிக்கின்றன.

ஜெயபாரதி விசுவநாதன்
ஜெயபாரதி விசுவநாதன்

இதனால் அகமுடையர் சமூகத்தைச் சேர்ந்த சாந்தி குணசேகரன் நகர்மன்ற தலைவராகவும், துணை தலைவராக முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என ஒரு தரப்பைச் சேர்ந்த தி.மு.க-வினர் பேசத் தொடங்கியுள்ளனர். சாந்தி குணசேகரனின் மகன் தமிழரசன் திமுகவின் தொலைக்காட்சி ஒன்றில் சென்னையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். தலைமையில் தனக்குள்ள நெருக்கத்தை வைத்தே தீவிரமாக மெனக்கெடுவதை பார்க்கும் போது கட்சியின் முக்கியஸ்தர்களே வியப்படைகின்றனர்.

இதனால், தி.மு.க-விற்குள்ளேயே நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. கடந்த முறை நகர்மன்றத் தலைவராக இருந்த ஜவஹர்பாபுவின் சித்திதான் ஜெயபாரதி விசுவநாதன். ஏற்கெனவே தன்னையும் சேர்த்து ஆறு கவுன்சிலர்களை கையில் வைத்திருப்பதாகக் கூறிவரும் ஜெயபாரதிக்கு, தி.மு.க-வில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் தானும் ஆதரிப்பதாக ஜவஹர் பாபு கூறிவருவது அவருக்கான பிளஸ். குறைந்த கவுன்சிலர்களை கையில் வைத்து கொண்டு சேர்மனை பிடிப்பது ஜெயபாரதி விசுவநாதன் குடும்பத்துக்கு கைவந்த கலை.

பிரியா இளங்கோ
பிரியா இளங்கோ

தி.மு.க தலைமை அவருக்கு வாய்ப்பு கொடுத்து விட்டால் நிச்சயம் நகர்மன்றத் தலைவராக ஆகிவிடுவார் என அவர் ஆதரவாளர்கள் கூறிகின்றனர். இதே போல் முன்னாள் நகர் மன்ற தலைவரான பிரியா இளங்கோ தன்னையும் சேர்த்து, தன் பக்கம் ஏழு கவுன்சிலர்கள் இருப்பதாகக் கூறி தி.மு.க தலைமையிடம் சேர்மன் பதவி கேட்டு வருகிறார்.

அன்பில் மகேஷ் - நேரு
அன்பில் மகேஷ் - நேரு

அமைச்சர்கள் நேரு, தஞ்சை மாவட்ட பொறுப்பாளரான மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பட்டுக்கோட்டையை யாருக்கு ஒதுக்குவது என்பதில் விழி பிதுங்கியிருக்கின்றனர். சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவரான சதா.சிவக்குமார் தன் வார்டின் நலனுக்கான வாக்குறுதியை யார் செய்து தருகிறார்களோ, அவர்களுக்கே தன் ஆதரவு என கூறுகிறார். பெரும்பாலும் அவர் தி.மு.க பக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தச் சூழலில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அ.தி.மு.க பெரும் தோழ்ல்வியை சந்தித்துள்ள நிலையில் பட்டுக்கோட்டை நகராட்சியில் மட்டும் 13 இடங்களை பிடித்திருப்பது அந்தக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கத்திற்கு ஆறுதலை தந்துள்ளது. அ.தி.மு.க-வில் நகரச் செயலாளரான பாஸ்கர் மனைவி லதா,உதயகுமார் மனைவி பிரபாகரனி,முன்னாள் நகர் மன்ற துணை தலைவரான வி.கே.டி பாரதியின் மனைவி நாகலெட்சுமி ஆகியோரிடத்தில் நகர் மன்ற தலைவர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் என பலரை அழைத்து வைத்திலிங்கம் ஆலோசனை நடத்தினார். அப்போது, `எல்லாத்துலயும் தோத்துட்டோம்... கையில கிடைச்சிருக்கிற பட்டுக்கோட்டை நகராட்சியை விட்டுடக் கூடாது. என்ன செலவானாலும் பரவாயில்ல, என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்ல. ஆனா, நகர் மன்றத்தை பிடித்தே தீர வேண்டும்' என வெளிப்படையாகவே பேசியிருப்பதுடன் அதற்கான முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்
ம.அரவிந்த்

அதே போல், `யார் தலைவர், யார் துணை தலைவர் என இரண்டுக்குமான வேட்பாளர்களை தலைமைதான் அறிவிக்கும். எனவே அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்' என வைத்திலிங்கம் கூறியதை அனைவரும் ஆமோதித்துள்ளனர். வைத்திலிங்கம் கட்சி பணிகளில் முன்பு போல் ஆர்வமாக செயல்படுவதில்லை என அ.தி.மு.க-வினரே பேசி வருகின்றனர். பழைய ஃபார்முக்கு வருவதற்கு வைத்திலிங்கத்திற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எப்படியாவது மெனக்கெட்டு பட்டுக் கோட்டையை கைப்பற்றி விட்டால் தொண்டர்கள் மத்தியில் அவருடைய இமேஜ் பல மடங்கு உயரும் என பேசப்பட்டு வருவதால் வைத்திலிங்கம் இப்போதிலிருந்தே காய் நகர்த்தல்களை தொடங்கி விட்டார்" என்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism