Published:Updated:

நாகர்கோவில் மாநகராட்சி விரிவாக்கம்; பறிபோகிறதா ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்?!

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம்

"பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சியாக இருந்த ஆசாரிப்பள்ளம், நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ளது. பத்து ஆண்டுகளில் அங்கு எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை." - ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அய்யப்பன்.

நாகர்கோவில் மாநகராட்சி விரிவாக்கம்; பறிபோகிறதா ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம்?!

"பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சியாக இருந்த ஆசாரிப்பள்ளம், நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ளது. பத்து ஆண்டுகளில் அங்கு எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை." - ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அய்யப்பன்.

Published:Updated:
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 95 கிராம ஊராட்சிகள், 9 ஊராட்சி ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டாவது பெரிய ஊராட்சி ஒன்றியமான ராஜாக்கமங்கலத்தின் பெரும்பாலான ஊராட்சிகளை நாகர்கோவில் மாநகராட்சியில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால் மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் எட்டாகக் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கிராம மக்களுக்குப் பின்னடைவும், விவசாய நிலங்களுக்குப் பாதிப்பும் ஏற்படுமோ என்று அந்தப் பகுதி மக்களிடயே அச்சம் எழுந்துள்ளது.

நாகர்கோவில் நகராட்சியில் ஏற்கெனவே இருந்த 52 வார்டுகளும் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாநகராட்சியாக மாற்றப்பட்டன. நாகர்கோவில் மாநகராட்சிக்கு மொத்தம் 112 வார்டுகள் தேவை எனச் சுற்றியுள்ள 15 கிராம ஊராட்சிகள், 6 பேரூராட்சிகளையும் இணைக்கக் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடந்துவருகின்றன.

இந்த விஷயம் குறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் நம்மிடம் ``அ.தி.மு.க ஆட்சியில் இப்போது இருக்கும் வார்டுகளுடன் மாநகராட்சியை முடித்துவிட்டோம். மாநகராட்சிக்கு இரண்டு லட்சம் மக்கள்தொகை இருந்தாலே போதும். இப்போதைய நாகர்கோவில் மாநகராட்சியில் இரண்டரை லட்சத்துக்கும் மேல் மக்கள் இருக்கிறார்கள். நாகர்கோவிலுக்கு இப்போது 15 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. இந்த ஊராட்சிகளில் இருக்கும் அனைவரையும் சேர்த்தால் எத்தனை நாளைக்கு ஒரு முறை தண்ணீர் கொடுப்பார்கள்? கார்ப்பரேஷன் அளவாக இருந்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும். விரிவுபடுத்தும்போது சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்படும். கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தால் பயன்பெறும் பெண்களும் ஏழைகளும் பாதிக்கப்படுவார்கள்” எனக் கூறினார்.

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

அதேசமயம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 12 ஊராட்சிகளில் 8 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதால் அதன் ஊராட்சி ஒன்றிய அந்தஸ்து பறிபோகும் நிலை ஏற்படும் எனரு செய்திகள் வெளியாகின்றன. இது பற்றி அ.தி.மு.க-வைச் சேர்ந்த ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அய்யப்பன் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவற்றில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய ஊராட்சி ஒன்றியமாக இருப்பது ராஜாக்கமங்கலம். இந்த ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 12 ஊராட்சிகளில் ராஜாக்கமங்கலம், தர்மபுரம், மேலசங்கரன்குழி மூன்றும் மக்கள்தொகை அதிகம் கொண்ட ஊராட்சிகள். ஊராட்சி ஒன்றியத்தின் சுமார் 76,000 வாக்குகளில், சுமார் 51,000 வாக்குகள் இந்த மூன்று ஊராட்சிகளிலும் உள்ளன. இவற்றை உள்ளடக்கிய எட்டு ஊராட்சிகளையும் நாகர்கோவில் மாநகராட்சியில் இணைக்கவிருக்கிறார்கள்.

ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அய்யப்பன்
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அய்யப்பன்

கேசவன்புத்தன்துறை, பள்ளம்துறை, மேலகிருஷ்ணன் புதூர், ஆத்திக்காட்டுவிளை ஆகிய நான்கு ஊராட்சிகள் மட்டுமே ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் மிச்சம் இருக்கும். நான்கு ஊராட்சிக்காக ஒரு ஊராட்சி ஒன்றியம் நடத்த மாட்டார்கள். அவற்றை அருகிலுள்ள வேறு ஊராட்சி ஒன்றியத்தில் இணைத்துவிடும் அபாயம் ஏற்படும். குமரி மாவட்ட உள்ளாட்சி வரைபடத்திலிருந்து ராஜாக்கமங்கலம் என்ற பெரிய ஊராட்சி ஒன்றியத்தை அழிக்கப் பார்க்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை எட்டாகக் குறையும். ஊராட்சிகள் மாநகராட்சி ஆக்கப்பட்டால் வீட்டுவரி உயரும், ஆறுமாதங்களுக்கு ஒரு முறை வரிகட்டும் நிலை ஏற்படும். விவசாய நிலங்கள் எளிதில் வீட்டுமனையாக மாறும். அதிகாரிகள் இதை வளர்ச்சிக்கான நடவடிக்கை என்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சியாக இருந்தது ஆசாரிப்பள்ளம். அது நாகர்கோவில் நகராட்சியுடன் சேர்க்கப்பட்டு, இப்போது மாநகராட்சியாக உள்ளது. அங்கு பத்து ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை. மாறாக அது குப்பைகொட்டும் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. பசுமையான கிராமங்களை மாநகராட்சி என்ற பெயரில் அழித்து பாலைவனம் ஆக்கிவிடாதீர்கள் என அரசிடம் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

கன்னியாகுமரி கலெக்டர் அரவிந்த்
கன்னியாகுமரி கலெக்டர் அரவிந்த்

இது பற்றி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்திடம் பேசினோம். ``இப்போது கருத்துக்கேட்பு கூட்டங்கள்தான் நடக்கின்றன. மக்களின் கருத்துகளைக் கேட்டு, மக்கள்தொகை உள்ளிட்ட சில புள்ளிவிவரங்களையும் எடுக்கிறோம். எந்தெந்தப் பகுதிகள் இணைக்கப்படும் என இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism