Published:Updated:

உங்களில் ஒருவன்: `பத்திரிகையாளரின் கேள்விக்கு அன்றைய ஸ்டாலினின் பதில்...'- ஸ்டாலின் - தன் வரலாறு!

ஸ்டாலின்- உங்களில் ஒருவன்

கடந்த கால நினைவுகளை, கடந்து வந்த பாதைகளை மீண்டும் நினைப்பது சுகமானதுதான். அந்த காலத்துல என்று பேசும்போதே அனைவரின் முகத்திலும் மலர்ச்சி அடையும்.

உங்களில் ஒருவன்: `பத்திரிகையாளரின் கேள்விக்கு அன்றைய ஸ்டாலினின் பதில்...'- ஸ்டாலின் - தன் வரலாறு!

கடந்த கால நினைவுகளை, கடந்து வந்த பாதைகளை மீண்டும் நினைப்பது சுகமானதுதான். அந்த காலத்துல என்று பேசும்போதே அனைவரின் முகத்திலும் மலர்ச்சி அடையும்.

Published:Updated:
ஸ்டாலின்- உங்களில் ஒருவன்

`உங்களில் ஒருவன்' என்கிற ஸ்டாலினின் தன் வரலாற்று நுாலின் முதல் பாகம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. நுாலின் முதல் பிரதியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

`நெஞ்சுக்கு நீதி' என்கிற பெயரில் தனது சுயசரிதை எழுதியிருந்தார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரது பாணியில் அவரது மகனும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் `உங்களில் ஒருவன்' என்கிற தலைப்பில் தனது சுயசரிதையை வெளியிlப்போவதாக அறிவித்தார்.அதன்தொடர்ச்சியாக அந்த நுாலின் முதல் பாக வெளியீட்டு விழா பிப்ரவரி 28-ம் தேதி அன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேரளா முதல்வர் பிணராயி விஜயன், பீகார் எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பிணராய் விஜயன், ஸ்டாலின், ராகுல் காந்தி
பிணராய் விஜயன், ஸ்டாலின், ராகுல் காந்தி

உங்களில் ஒருவன் நுால் வெளியீட்டில் ஏற்புறை வழங்கிய ஸ்டாலின் இந்த நுால் தனது வாழ்வின் முதல் 23 ஆண்டுகளில் நடந்த சம்பவங்களைக் கொண்டது என்றும், அரசியல் தான் தனது எதிர்காலம் என்பதை சிறுவயதிலேயே என்மனதில் பதியவைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். ஸ்டாலின் தனது சுயசரிதை நுால் குறித்து அவரே குறிப்பிட்டது...

``கடந்த கால நினைவுகளைக் கடந்து வந்த பாதைகளை மீண்டும் நினைப்பது சுகமானதுதான். அந்த காலத்துல என்று பேசும்போதே அனைவரின் முகத்திலும் மலர்ச்சி அடையும். கடந்த காலத்தில் சுகமும் உண்டு, சுமையும் உண்டு,கடந்த காலத்தில் இனிப்பும் உண்டு, கசப்பும் உண்டு. இரண்டும் கலந்தது தான் அனைவரது வாழ்க்கை. எதுவாக இருந்தாலும், கடந்து வந்த பாதையை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. கோபாலபுரம் இளைஞர் தி.மு.கவை நான் தொடங்கிய காலத்தில் என்றாவது ஒருநாள் தி.மு.க வின் தலைவராக நான் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனக்கு உயிரும், உணர்வுமாய், தந்தையும், தாயுமாய் தலைவருமாய் இருந்த தலைவர் கலைஞர்கள் அவர்கள் அமர்திருந்த முதலமைச்சர் நாற்காலியில் என்றாவது ஒருநாள் நான் உட்காருவேன் என்றும் அந்தக்காலத்தில் நான் நினைத்தது இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் எனது இலக்கை நான் மிகச் சரியாகவே தீர்மானித்தேன். கழகம் தான் என் களம். திராவிடம் தான் என்னுயிர்க் கொள்கை. தமிழ்நாட்டுக்கு செய்யும் நன்மையே நமது அன்றாடப்பணி என்பதாக என்னை எனது சிறுவயதில் வடிவமைத்துக்கொண்டேன். 1996-ம் ஆண்டு சென்னை மாநகர மேயராக நான் பொறுப்பேற்றபோது என்னைப் பார்த்து நிருபர் ஒருவர், "நீங்கள் அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?" என்று கேட்டார். அப்போது நான் சொன்னேன் “இல்லை! நான் அரசியலில் தான் இருந்திருப்பேன்” என்று சொன்னேன்.கேள்வி கேட்ட அடுத்த நொடியே சொன்ன பதில் அது. நான் அரசியலாகத்தான் இருந்தேன், வளர்ந்தேன் என்பதை இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது நீங்களும் உணர்வீர்கள்.கோபாலபுரம் என்ற வீட்டில் அல்ல, கொள்கைக்கூட்டில் வளர்ந்தவன் நான். அங்கு நான் மட்டுமா வளர்ந்தேன், இனமானமும் மொழியுணர்வு கொண்ட அனைவருக்கும் அதுதான் பாசறை. அந்தவீட்டில் சிறுவனாக அல்ல, கொள்கைக்காரனாக நான் வளர்ந்தேன்.

கோபாலபுரம் வீடு
கோபாலபுரம் வீடு

எனக்கு முன்னாள் கொள்கையின் அடையாளமாக தந்தை பெரியார் எழுந்து நிற்கிறார். ஆஒரு இயக்கத்தை கோட்பாடு அடிப்படையிலும் பலதரப்பட்ட வகையினரையும் எப்படி அரவணைத்து நடத்தி செல்லவேண்டும் என்பதை பேரறிஞர் அண்ணா அடையாளம் காட்டுகிறார்.கொள்கையும் கோட்பாடும் உள்ள ஒரு இயக்கத்தை எந்த சூழ்நிலையிலும் இடையறாத போராட்டங்களின் மூலமாக உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும், என்பதை தனது வாழ்க்கை மூலமாக தினமும் உணர்த்திக் கொண்டே இருந்தார் தலைவர் கலைஞர்.பொறுமையுமும், அடக்கமு்ம் கொண்டவராகவும் அதே நேரத்தில் தெளிவும் துணிச்சலும் கொண்டவராக ஒருவர் திகழவேண்டும் என்பதை இனமானப் பேராசிரியர் அடையாளம் காட்டிக்கொண்டு இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிக சிறுவயதில் ஒருவன் தனது இலக்கை மிகச்சரியாகத் தீர்மானித்தால் வெற்றி பெற முடியும் என்பது தான் இன்றைய தலைமுறைக்கு நான் சொல்லும் ஒற்றை வழிகாட்டி நெறிமுறை. மிகச் சரியான இலக்கு, மிகத் தெளிவான பாதையை அடையாளம் காட்டும். மிகத் தெளிவான பாதை மிகச் சரியான இலக்குக்கு நம்மை கொண்டு சேர்க்கும். இதுதான் என் வாழ்கை.

உங்களில் ஒருவன்! ஸ்டாலின்
உங்களில் ஒருவன்! ஸ்டாலின்

அந்த வாழ்க்கைப் பாதையை ஊருக்கு சொல்வதற்காக மட்டுமல்ல, எனக்கு நானே திரும்பிப் பார்க்க முயற்சித்தேன். அதுதான் உங்களில் ஒருவன் முதல் பாகமாக வெளியாகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.1976-ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மிசாவில் கைது செய்யப்பட்டார் ஸ்டாலின். அதுவரையான அவரது வாழ்வில் நடந்த சுவாரஸியங்களே இந்த நுாலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism