Published:Updated:

அண்ணாமலையின் உண்ணாவிரத அறப்போராட்டம்: "டெல்லி ஸ்கிரிப்ட்டுக்கு நடிக்கிறார்" - பெ.மணியரசன் விமர்சனம்

அண்ணாமலை
அண்ணாமலை

கர்நாடக அரசு அணை கட்டுவதைக் கைவிட வலியுறுத்தி பிஜேபி சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வரும் 5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு அதனை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் வரும் 5-ம் தேதி உண்ணாரவிரத அறப்போராட்டம் நடைபெறும் என பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருப்பது பல்வேறு சலசலப்புகளையும், அவருக்கும் எதிரான கண்டனங்களையும் கிளப்பியுள்ளது.

உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான ஏற்பாட்டினை செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கத்தை சேர்ந்த அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். `மேக்கேதாட்டுவில் அணை கட்டினால், காவிரி ஆற்றை நம்பி உள்ள பாசன பரப்புகள் பாலைவனமாக மாறக் கூடிய நிலை ஏற்படும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலமே கேள்விகுறியாகும்' என்ற அழுத்தமான கருத்தை தமிழக விவசாயிகள் முன் வைத்து வருகின்றனர்.

அதே நேரத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசும், பிரதமரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் குற்றச்சாட்டை கிளப்பி வருகின்றனர்.இந்நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதை கைவிட வலியுறுத்தி பிஜேபி சார்பில் வரும் 5ம் தேதி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளுடன், எதிர்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

கொம்பு சீவும் நேரு முதல் கலெக்டரைக் காக்கவைத்த  துரைமுருகன் வரை! - கழுகார் அப்டேட்ஸ்!
பெ.மணியரசன்
பெ.மணியரசன்

இது குறித்து காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், "அண்ணாமலை மிகச் சிறந்த நாடக நடிகர் டெல்லியின் ஸ்கிரிப்டுக்கு அழகாக நடித்துக் கொண்டிருக்கிறார். காவிரி விவகாரத்தில் கர்நாட அரசை எதிர்ப்பது போல் நடந்து கொள்கிறார். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் கட்சியை நடத்த முடியும் என டெல்லி மேலிடம் அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசை எதிர்த்து காவிரிக்கும்,விவசாயிகளுக்கும் ஆதரவாக இருப்பது போல் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். ஆனால் பிஜேபி அரசு அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கும் வேலையினையும் செய்து வருகிறது" என்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பனசை அரங்கன், "யாரைக் கண்டித்து போராட்டம் நடத்துகிறீர்கள் என விளக்கம் வேண்டும் என்ற பலமான கேள்வியினையும் அண்ணாமலை முன் வைத்து பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் பிஜேபி ஆட்சி நடைபெற்று வருகிறது அக்கட்சியை சேர்ந்தவரே முதலமைச்சராக இருக்கிறார். அவருடைய செயல்பாட்டைக் கண்டித்தா அல்லது மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சரை கண்டித்தா யாரைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படுகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு பிரதமர் மோடி கர்நாடக அரசிற்கு மறைமுகமாக அனுமதி கொடுத்து வருகிறார் அவருக்கு கண்டனம் தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறீகளா? என்பதை விவசாயிகளுக்கு தெளிவு படுத்திய பிறகு நடத்த வேண்டும்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

கட்சியைக் காலூன்ற வைக்க விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி விவகாரத்தினை அரசியலாக்கி நாடகமாடாதீர்கள் அது ஒரு போதும் உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் கை கொடுக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்" எனத் தெரிவித்தனர். மற்றொரு தரப்பிலோ, அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தஞ்சாவூர் வருகிறார் அவருக்கு தடபுடலான வரவேற்பு கொடுக்கவும், உண்ணாவிரதப் போராட்டத்தை பிரமாண்டமாக நடத்தவும் பிஜேபி நிர்வாகிகள் பம்பரமாக சுழன்று ஏற்பாட்டினை செய்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு