Published:Updated:

`திரைத்துறை பக்கம் திரும்பும் பாஜக'- 2024 -க்கு முன்பாக பாஜகவில் சங்கமிக்கும் தமிழ் நட்சத்திரங்கள்?!

பாஜக அலுவலகம்

மூத்த நடிகர் ஒருவர் பல கட்சிகளோடு கைகோத்துக் களமாடியவர். `இனி பாஜகவே போதும்!' எனகிற மனநிலைக்கு வந்துவிட்டாராம்

`திரைத்துறை பக்கம் திரும்பும் பாஜக'- 2024 -க்கு முன்பாக பாஜகவில் சங்கமிக்கும் தமிழ் நட்சத்திரங்கள்?!

மூத்த நடிகர் ஒருவர் பல கட்சிகளோடு கைகோத்துக் களமாடியவர். `இனி பாஜகவே போதும்!' எனகிற மனநிலைக்கு வந்துவிட்டாராம்

Published:Updated:
பாஜக அலுவலகம்

கடந்த காலங்களில் குஷ்பு, ராதாரவி, என திரைத்துரையில் பிரபலமானவர்கள் பலரும் சமீபத்தில் பாஜகவின் முகங்களாக மாறினர். இந்தச் சூழலில்தான் சில தினங்களுக்கு முன்பு, இசையமைப்பாளர் இளையராஜா மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்ட விவகாரம் விவாதமானது. அந்தக் கருத்தை தான் பின்வாங்கப்போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். இதேபோலவே சென்னை கமலாலயத்திற்கு புத்தக வெளியீட்டுக்குச் சென்ற நடிகர், இயக்குநர் பாக்யராஜ் பாஜக விற்கு பக்கபலமான கருத்தை சொல்ல அடுத்த பரபரப்பு கிளம்பியது. அதன் பிறகு, தான் பேசிய சில விஷயங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படதாக வீடியோ பதிவு ஒன்றையும் பாக்யராஜ் வெளியிட்டார். இந்தச் சம்பவங்களுக்கு எல்லாம் பின்னணியில் பாஜக இல்லாமல் இல்லை. ஆக்கப்பூர்வ அரசியல், அதிரடி அரசியல் என பாஜகவின் அரசியல் வியூகங்கள் இப்போது திரைத்துறை பக்கம் திரும்பியிருப்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியினை தமிழகத்தில் வளர்த்திட வேண்டும் என்பதோடு, அந்தக் கட்சிக்கு என வலுவான வாக்குவங்கியை உருவாக்கிட வேண்டும் என்கிற எண்ணம் நீண்ட காலமாகவே டெல்லி தலைமைக்கு இருக்கிறது. குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கேரளா, தமிழ்நாடு என இரண்டு மாநிலங்களிலும் பாஜக-வை வளர்க்கத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியில் உள்ள பாஜக அரசு செய்துவருகிறது.

குஷ்பு
குஷ்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் தமிழகத்தில் அதிமுக , திமுக உள்ளிட்ட கட்சிகளில் ஓரம்கட்டப்பட்டவர்களை பாஜக பக்கம் இழுக்கும் முயற்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கொண்டது. அந்த வகையில் அ.தி.மு.க-விலிருந்து நயினார் நாகேந்திரன், தி.மு.க விலிருந்து வி.பி.துரைசாமி போன்றவர்கள் பாஜக முகாம் பக்கம் தாவினார்கள். இதன்பிறகு கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவிற்கு பிரசார முகங்களை அதிகரிக்க வேண்டும் என்கிற திட்டத்தை கையில் எடுத்தனர். ஏற்கெனவே அதிமுகவில் அதிருப்தியிலிருந்த ராதா ரவி, காங்கிரஸ் கட்சி தலைமைமீது கடுப்பில் இருந்த நடிகை குஷ்பு உள்ளிட்டவர்களை பாஜக வின் பக்கம் கொண்டுவந்தனர். குறிப்பாக குஷ்பு வை பாஜகவின் சட்டமன்ற வேட்பாளராகவும் களத்தில் இறக்கினார்கள். அப்போதே பாஜக பக்கம் மேலும் பல திரைத்துறையினர் வருவார்கள் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் தான் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா எழுதிய முன்னுரையால் கடந்த ஒருவாராமாக பெரும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தான் தமிழகத்தில் மூத்த திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் பாஜக தரப்பில் வெளியிடப்பட்ட புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது “மோடியை குறைகூறுபவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று பேசியது பெரும் சர்சையானது. இதன்பிறகு பாக்யராஜ் தரப்பில் மன்னிப்பு கோரினாலும், இந்த விவகாரம் அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

இயக்குநர் பாக்யராஜ்
இயக்குநர் பாக்யராஜ்

பாஜக தரப்பில் இதுகுறித்துப் பேசினால் “இளையராஜாவை நாங்கள் யாரும் மோடிக்கு ஆதரவாக எழுதச் சொல்லவில்லை. அவருடைய கருத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் நடிகர் பாக்யராஜை மோடியின் சாதனை குறித்த புத்தக வெளியிட்டு விழாவுக்கு வாருங்கள் என்று சொல்லித்தான் அழைப்பு கொடுத்தோம். அந்த நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்கும் நபர்கள் குறித்த விவரங்களையும் அவரிடம் சொல்லியிருந்தோம். மோடி மீதான பாசத்தில் அவர் அப்படி பேசியிருக்கிறார். பிறகு கருத்தை மாற்றிக்கொண்டுள்ளார்.ஆனால், உண்மையில் பாஜக வில் திரைத்துறையினர் பலரையும் உள்ளே கொண்டுவரும் வேலைகள் நடக்கிறது. அது கட்சியை பலப்படுத்துவதோடு, கட்சியின் பிரசார முகத்திற்கும் எதிர்காலத்தில் பயன்படும் என்பதால்தான்”என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏற்கெனவே சினிமா தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட சிலர் பாஜகவில் உள்ள நிலையில், மேலும் இரண்டு தயாரிப்பாளர்கள் பாஜக பக்கம் நெருக்கம் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல் மூத்த நடிகர் ஒருவர் பலகட்சிகளோடு கைகோத்துக் களமாடியவர். `இனி பாஜகவே போதும்!' எனகிற மனநிலைக்கு வந்துவிட்டாராம். இவரும் விரைவில் பாஜகவில் ஐக்கியமாக இருக்கிறார். இவர்களைத் தவிர பெண் திரையுலகப் பிரபலங்கள் சிலரையும் பாஜக பக்கம் கொண்டுவர நினைக்கிற தமிழக பாஜக தலைமை.

இளையராஜா, பாக்யராஜ்
இளையராஜா, பாக்யராஜ்

திரையுலகைக் கையில் எடுப்பதன் மூலம் எந்த கருத்துகளையும் எளிதாக மக்களிடம் கொண்டுசெல்ல ஒருவாய்ப்பாக உள்ளது. இளையராஜா முதல் பாக்யராஜ் சொன்னது வரை இதற்கு ஒரு சாம்பிள்" என்று கூலாகச் சொல்கிறார்கள் பாஜகவினர். இளையராஜாவுக்கு அளிக்கப்படும் சலுகையை வைத்தே எதிர்காலத்தில் பாஜகவின் பக்கம் திரையுலகினர் திரும்ப அதிக வாய்புள்ளது என்கிறார்கள். கேரள திரையுலகிலும் விரைவில் இதுபோன்ற திரையுலக நபர்களை கட்சிக்குள் கொண்டுவரும் வேலைகளும் நடந்துவருகிறது. இரண்டு மாநிலத்திலும் 2024-க்கு முன்பாக பலம்பெறும் முயற்சியில் தீவிரமாக உள்ளது பாஜக. அதற்கு திரையுலகையும் ஒரு ஆயுதமாக கையில் எடுத்துள்ளது" என்கிறார்கள் பாஜகவினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism