Published:Updated:

நாம் தமிழர் கட்சியும், மீத்தேன் எதிர்ப்புத் திட்ட இயக்கமும் மோதிக்கொள்வது ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மீத்தேன் எதிர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
மீத்தேன் எதிர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்

மீத்தேன் எதிர்ப்புத் திட்ட இயக்கமும், நாம் தமிழர் கட்சியும் இருதரப்பும் மோதிக்கொள்வது மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மீத்தேன் எதிர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர். செயராமனுக்கு நாம் தமிழர் கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்ததாக  மயிலாடுதுறை காவல் நிலையத்தில் செயராமன் புகார் அளித்திருக்கிறார். பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினர் செயராமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளித்திருக்கிறார்கள். இணைந்திருந்த இருதரப்பும் மோதிக்கொள்வது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

ஜெயராமன்
ஜெயராமன்

கடந்த 19 -ம் தேதி சென்னையில் 'தமிழ்த் தேசிய நடுவம் 'என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட செயராமன்,' தமிழ்த் தேசத்தின் எதிரி யார் ?' என்ற தலைப்பில் பேசியிருக்கிறார். அப்போது ``தமிழ்த் தேசியம் என்பது விடுதலைக்கானது. மாநிலத் தேர்தலோடு நின்று விடுவது அல்ல" என்று கூறியிருக்கிறார். இந்தக் கருத்து நாம் தமிழர் கட்சியை  மறைமுகமாக குறிவைத்துப் பேசியதாகக் கருதிய  நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் காளிதாசன்  செயராமனைக் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் செய்திகளை வெளியிட்டு வந்தார். அச்செய்தியை மறுத்து செயராமன் தரப்பினரும் பதிலடி  தந்தார்கள். இப்படியாக சமூக வலைதளத்தில் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியைச்  சேர்ந்த நான்கு பேர் பைக்குகளில்  செயராமன் தரப்பைச் சேர்ந்த செல்வரத்தினம் கடைக்கு வந்து மிரட்டியதாகவும் செயாரமனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாக செல்வரத்தினடம் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த செயராமன் ``தன்னை நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தூண்டுதலின் பேரில் கொலைசெய்ய முயற்சி நடப்பதாக மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

`சமூகப் பிரச்னைக்குக் குரல் கொடுத்தவர்!' - மர்மமாக இறந்துகிடந்த நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர்
police station mayuiladuthurai
police station mayuiladuthurai

நாம் தமிழர் கட்சியினரோ, ``நாங்கள் பேராசிரியர் செயராமனின் மீத்தேன் எதிர்ப்புத் திட்ட இயக்கத்துடன் கடந்த 13 ஆண்டுகாலம் இணைந்து செயல்பட்டோம்.  கடந்த 19.04 2021 -ல் பேராசிரியர் கட்டுரை ஒன்றில், ``நாம் தமிழர் கட்சி ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இயங்கிவருகிறது. தமிழ்நாட்டை ஐந்து கூறுகளாகப் பிரிக்க சதி செய்கிறது" என்று எழுதியிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்தோம். அத்துடன் பிரச்னை  முடிந்துவிட்டது. தற்போது சென்னையில் எங்கள் கட்சியைக் குறிவைத்து மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். இதற்கு நாங்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் தனிமனித விமர்சனமாக அவர்கள் தரப்பில் செல்வரத்தினம் மற்றும் சிலர், அண்ணன் சீமானைப் பற்றி அவதூறாக விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்தார்கள். பேராசிரியர் தரப்பைச் சேர்ந்த செல்வரத்னத்திடம் விளக்கம் சொல்ல எங்கள் தரப்பில் நான்கு பேர் சென்றார்கள். பேராசிரியர் பற்றி அவர்கள் தரக்குறைவாக பேசவுமில்லை. கொலை மிரட்டல் விடுக்கவும் இல்லை. ஆனால் எங்கள் மீது ஒரு பொய்யான கொலை மிரட்டல் புகாரைக்  பேராசிரியர் கொடுத்திருக்கிறார். பதிலுக்கு நாங்களும் புகார் கொடுத்திருக்கிறோம்" என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபற்றி மயிலாடுதுறை நகரக காவல்நிலைய இன்ஸ்பெக்டர் செல்வத்திடம் விளக்கம் கேட்டோம்.

காளிதாசன்
காளிதாசன்

`` பேராசிரியர் செயராமன் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் , காளிதாசன் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். இரண்டு தரப்பையும் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு