Published:Updated:

மக்களவைத் தேர்தலில் திமுக-வின் மூவ்; குமுறும் கூட்டணிக் கட்சிகள்... பின்னணி என்ன?

மக்களவைத் தேர்தல்

அரசியல் களத்தில் தி.மு.க-வின் செயல்பாடுகள் சற்று மாறுபட்டதாகத் தெரிகிறது எனக் கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி தெரிவித்துவருகின்றன.

மக்களவைத் தேர்தலில் திமுக-வின் மூவ்; குமுறும் கூட்டணிக் கட்சிகள்... பின்னணி என்ன?

அரசியல் களத்தில் தி.மு.க-வின் செயல்பாடுகள் சற்று மாறுபட்டதாகத் தெரிகிறது எனக் கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி தெரிவித்துவருகின்றன.

Published:Updated:
மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் முழுமையாக இருக்கும் நிலையில், தேர்தலில் வெற்றி, தோல்வி குறித்து தி.மு.க அ.தி.மு.க என தமிழ்நாட்டின் இரு பிரதான கட்சிகளும் பேசத் தொடங்கியிருக்கின்றன. தேசிய அளவில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸும் பா.ஜ.க-வும் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில், அரசியல் களத்தில் தி.மு.க-வின் செயல்பாடுகள் சற்று மாறுபட்டதாகத் தெரிகின்றன எனக் கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி தெரிவித்துவருகின்றன. அதேபோல, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையான விவகாரம் காங்கிரஸ்-தி.மு.க இடையே புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க இணைந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்களைத் தனியாக அறிவித்திருக்கின்றன.

தி.மு.க கூட்டணி
தி.மு.க கூட்டணி

முன்னதாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் தி.மு.க-வினர் நின்று வெற்றிபெற்றனர். அதையடுத்து, அந்தப் பதவிகளை ராஜினாமா செய்யக் கோரி தி.மு.க தலைவர் ஸ்டாலினே அறிவித்தபோதும், பல்வேறு இடங்களில் தி.மு.க-வினர் பதவி விலகவில்லை. அதேபோல, கூட்டணிக் கட்சியினர்மீது வழக்கு பதிவு போடப்படுவதால் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை தி.மு.க மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், கூட்டணிக்குள் சுமுகமான போக்கு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தி.மு.க தனியாக மேற்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து தி.மு.க கூட்டணிக் கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்தோம்.

``சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க பலமாக இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் உழைப்பும் ஓட்டும்தான் அவர்களுக்கு முழுமையான வெற்றியைக் கொடுத்தது. ஆனால், தனிப் பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி அமைத்ததால், எங்களை மெல்ல மெல்ல ஒதுக்கத் தொடங்கினர். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட எங்களுக்குக் கொடுக்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை அலட்சியமாகப் பார்க்கிறார்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, கொள்கை குறித்த ஆலோசனை உள்ளிட்ட முக்கியப் பணிகளுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் அல்லது மூத்த தலைவர்கள்தான் எங்களுடன் பேசினார்கள். ஆனால், தற்போது மொத்தமும் மாறிவிட்டது. தி.மு.க தலைமையை அணுக முடியவில்லை. எதற்கெடுத்தாலும், தற்போது அமைச்சர்களாக இருக்கும் 2-ம் கட்டத் தலைவர்களையே பார்க்கச் சொல்கிறார்கள்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

அதேபோல, அரசின் கொள்கை முடிவுகள் குறித்து எங்களிடம் கருத்து கேட்பதில்லை. தாய்க் கழகமான தி.க தலைவர் ஆசிரியர் வீரமணியையும்கூட தி.மு.க மறந்துவிட்டது. பல்லக்கு விவகாரம், பிரியாணி திருவிழா, பசுமடம் என தவறான வழிகாட்டுதலில் அரசு இயங்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. கலைஞரின் சிலை திறக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை அழைக்க வேண்டாம் என்று நாங்கள் தி.மு.க தலைமையிடம் தெரிவித்தோம். ஆனால், எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. கூட்டணிக் கட்சியினர் மீதே வழக்கு போடப்பட்டுவருகிறது. இது கூட்டணிக்கு அழகல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பா.ஜ.க தேசிய அளவில் அசுர பலத்தில் உள்ளது. இந்த நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க-வுடன் அதன் கூட்டணிக் கட்சிகளே முரண்பட்டு நின்றால், அதை அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே நாங்கள் பொறுத்துப் போகிறோம். மக்களவைத் தேர்தல் குறித்து தி.மு.க தலைமை ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இன்னும் எங்களிடம் பேசவில்லை. விரைவில் பேசும் என்றும் எதிர்பார்க்கிறோம்" என்றனர்.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

இது குறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ``கூட்டணிக் கட்சியினருக்கு எப்போதும்போலவே மரியாதை கொடுக்கிறோம். ஆனால், எங்கள் தலைமையால்தான் அவர்கள் வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர் என்பதைச் சில நேரங்களில் மறந்துவிடுகிறார்கள். லோக்சபா தேர்தல் குறித்து முதற்கட்ட ஆலோசனையைத்தான் தி.மு.க நடத்தியிருக்கிறது. விரைவில் கூட்டணிக் கட்சியினரிடம் கலந்தாலோசிப்போம். கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism