Published:Updated:

மாவட்டச் செயலாளர்கள் தேர்விலும் செந்தில் பாலாஜி ட்விஸ்ட்! - குமுறும் கோவை உடன்பிறப்புகள்

செந்தில் பாலாஜி

``எப்படி கோவை மாநகராட்சிக்கு தனக்கு விஸ்வாசமான ஒருவரை மேயராக நியமித்தாரோ, அதேபோல மாவட்டச் செயலாளர்கள் விஷயத்திலும் செந்தில் பாலாஜி செய்து காட்டியிருக்கிறார்" எனக் குமுறுகிறார்கள் கோவை உடன்பிறப்புகள்

மாவட்டச் செயலாளர்கள் தேர்விலும் செந்தில் பாலாஜி ட்விஸ்ட்! - குமுறும் கோவை உடன்பிறப்புகள்

``எப்படி கோவை மாநகராட்சிக்கு தனக்கு விஸ்வாசமான ஒருவரை மேயராக நியமித்தாரோ, அதேபோல மாவட்டச் செயலாளர்கள் விஷயத்திலும் செந்தில் பாலாஜி செய்து காட்டியிருக்கிறார்" எனக் குமுறுகிறார்கள் கோவை உடன்பிறப்புகள்

Published:Updated:
செந்தில் பாலாஜி

தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு விருப்ப மனுத்தாக்கல் நடந்து வருகிறது. அதன்படி இன்று கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களுக்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்கின்றனர்.

கோவை
கோவை

அதாவது போட்டியின்றி தேர்ந்தெடுப்பதற்காக இந்த முறையை பின்பற்றுகின்றனர். நிர்வாக வசதிக்காக கோவை தி.மு.க மாவட்டம் சமீபத்தில் ஐந்திலிருந்து மூன்றாகப் பிரிக்கப்பட்டது. 

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவற்றில் மாநகர் மாவட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக், தெற்கு மாவட்டத்துக்கு தளபதி முருகேன், வடக்கு மாவட்டத்துக்கு தொண்டாமுத்தூர் ஒன்றியச் செயலாளர் ரவி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், இந்த மூன்று பேரும் மாவட்டச் செயலாளர்களாவது உறுதியாகிவிட்டது என்கிறார்கள்.

மனுத்தாக்கல்
மனுத்தாக்கல்

ஏற்கெனவே இருந்த 5 மாவட்டப்  பொறுப்பாளர்களில் கார்த்திக்கை மட்டும் தக்கவைத்துவிட்டு, மற்ற நான்கு பேரும் கழட்டிவிடப்பட்டிருக்கின்றனர். இந்த புதிய நியமனம் கோவை தி.மு.க-வுக்கு திகுதிகு என கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து கோவை தி.மு.க உடன்பிறப்புகள் கூறுகையில், ``உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகே ஐந்து மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் கல்தா கொடுக்கப்போவதாக தகவல் வெளியானது. இதில் கார்த்திக்கை மட்டும் தக்கவைத்திருக்கின்றனர். கடந்த சட்டசபைத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக நின்ற கார்த்திக்,

நா.கார்த்திக்
நா.கார்த்திக்

தன் சொந்த பூத்திலேயே மூன்றாவது இடத்தைத்தான் பிடித்தார். ஏற்கெனவே ஒருங்கிணைந்த மாநகர் மாவட்டத்துக்கு (100 வார்டுகள்) கார்த்திக் தான் பொறுப்பாளராக இருந்தார். அது எதிர்பார்த்த முடிவுகளை கொடுக்கவில்லை என்றுதான், மாநகர் மாவட்டத்தை இரண்டாக பிரித்தனர்.

அப்படி இருக்கும்போது எதற்காக அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். செந்தில் பாலாஜியுடன் நெருக்கமாக இருப்பதும், நாயுடு சமுதாயத்தில் மாற்று நிர்வாகிகள் யாரும் இல்லை என்ற காரணத்துக்காகவே அவரை மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவியின் செயல்பாடுகளும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.

செந்தில் பாலாஜிக்கு விஸ்வாசமான ஆட்கள் என்ற அடிப்படையில்தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். எப்படி சீனியர்கள் முண்டியத்தபோது, கோவை மாநகராட்சிக்கு தனக்கு விஸ்வாசமான ஒருவரை மேயராக நியமித்தாரோ, அதேபோல மாவட்டச் செயலாளர்கள் விஷயத்திலும் செந்தில் பாலாஜி செய்து காட்டியிருக்கிறார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பே இவர்கள் மூவரையும் சென்னைக்கு அழைத்து தலைமையைச் சந்திக்க வைத்து, பதவியை உறுதிசெய்து விட்டார் செந்தில் பாலாஜி. இன்றுகூட மாவட்டச் செயலாளர்களாக விண்ணபித்தவர்கள், காலை சென்னையிலுள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் வைத்து ஆலோசித்து விண்ணப்பங்களை நிரப்பி முடித்துவிட்டுதான் அறிவாலயம் சென்றிருக்கின்றனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

காலங்காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்" என்று கோவை முழுவதும் அதிருப்தி குரல்களே அதிகம் தென்படுகின்றன.