Published:Updated:

`மாயன் வரட்டும்... அப்புறம் தொடங்கலாம்' என்றார் எம்ஜிஆர்... அதிமுக முதல் எம்.பி மாயத்தேவர் மறைவு

எம்.ஜி.ஆருடன் மாயத்தேவர்

எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர் மாயத்தேவர். ஒருமுறை தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியில் அதிமுக கூட்டம் நடந்தபோது  மாயத்தேவர் வர தாமதம் ஆனது. அப்போது எம்ஜிஆர்...

`மாயன் வரட்டும்... அப்புறம் தொடங்கலாம்' என்றார் எம்ஜிஆர்... அதிமுக முதல் எம்.பி மாயத்தேவர் மறைவு

எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர் மாயத்தேவர். ஒருமுறை தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியில் அதிமுக கூட்டம் நடந்தபோது  மாயத்தேவர் வர தாமதம் ஆனது. அப்போது எம்ஜிஆர்...

Published:Updated:
எம்.ஜி.ஆருடன் மாயத்தேவர்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள உச்சம்பட்டியைச் சேர்ந்தவர் மாயத்தேவர். இவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தவர். திமுக-விலிருந்து விலகி எம்ஜிஆர் அதிமுக-வைத் தொடங்கியபோது அவருடன் இணைந்து பணியாற்றினார்.

மாயத்தேவர்
மாயத்தேவர்

அதிமுக தொடங்கிய பிறகு 1973-ல் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுக சார்பில் முதன்முதலாக மாயத்தேவரை எம்ஜிஆர் போட்டியிடவைத்தார். அப்போதுதான் மாயத்தேவர் இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்வுசெய்தார். அதுவே பின்னாளில் அதிமுக-வின் அசைக்க முடியாத சக்தியாகவும், பட்டி தொட்டியெங்கும் உள்ள அதிமுக தொண்டர்களின் மனதில் நிலைத்துவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1977-ல் மீண்டும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யாகத் தேர்வானார். இதையடுத்து அதிமுக-வில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் அதிலிருந்து விலகி திமுக-வில் இணைந்து 1980-ல் எம்.பி ஆனார். பிறகு உடல்நலக் குறைவு காரணமாக அரசியலிலிருந்து விலகி சின்னாளபட்டியில் உள்ள வீட்டில் வசித்துவந்தார்.

அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஐ.பெரியசாமி
அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஐ.பெரியசாமி

இந்நிலையில் நேற்று மதியம் அவரின் இல்லத்தில் உயிரிழந்தார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், செந்தில்குமரன் என்ற மகனும், சுமதி என்ற மகளும் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திமுக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 4 மணிக்கு சின்னாளபட்டியில் இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையம் வரும் ஓ.பி.எஸ்., அங்கிருந்து சின்னாளபட்டி வந்து மாயத்தேவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தவிருக்கிறார். இதேபோல சசிகலா சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து சின்னாளபட்டி வரவிருக்கிறார்.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

இது குறித்து சின்னாளபட்டி அதிமுக-வினரிடம் பேசினோம். ``எம்ஜிஆருக்கு மிகவும் நெருக்கமானவர் மாயத்தேவர். அரசு வழக்கறிஞராக இருந்தவர். எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றால் அதை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறினார். ஒருமுறை கெங்குவார்பட்டியில் அதிமுக கூட்டம் நடந்தபோது மாயத்தேவர் வர தாமதம் ஆனது. அப்போது எம்.ஜி.ஆர்., `மாயன் வரட்டும் அதன் பிறகு தொடங்கலாம்’ என்று காத்திருந்தார். டெல்லியில் அதிமுக-வின் செல்வாக்கை அதிகப்படுத்தியவர் மாயத்தேவர்.

சின்னாளபட்டி
சின்னாளபட்டி

ஒருமுறை எதிர்க்கட்சியினர் இந்திராவைத் தாக்குவோம் எனக் கூற, `தொட்டுப்பாருங்கள்... டெல்லியே ரத்தவெள்ளத்தில் மிதக்கும்’ என கர்ஜித்தார். யாரிடமும் கைநீட்டிப் பழக்கமில்லாதவர் என்பதால் தவறு நடக்கும் இடத்தில் கோபத்தைக் கொட்டித்தீர்ப்பார். பின்னாள்களில் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால் திமுக-வில் இணைந்து செயல்பட்டார்” என்றனர்.