Published:Updated:

``எஸ்.பி.வேலுமணி ஆதரவாளருக்கு மாவட்டச் செயலாளர் பதவியா?" - கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்

வேலுமணியுடன் ரவி

``எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுப்பதா?" என கோவை திமுக-வினர் கொந்தளித்து வருகின்றனர்.

``எஸ்.பி.வேலுமணி ஆதரவாளருக்கு மாவட்டச் செயலாளர் பதவியா?" - கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்

``எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுப்பதா?" என கோவை திமுக-வினர் கொந்தளித்து வருகின்றனர்.

Published:Updated:
வேலுமணியுடன் ரவி

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. முக்கியமாக கோவை மாவட்டத்தில் ஐந்தாக இருந்த தி.மு.க மாவட்டம், தற்போது மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அதில் நான்கு பேர் கழட்டிவிட்டப்பட்டிருக்கின்றனர். பொதுவாக கோவை தி.மு.க-வில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஸ்லீப்பர் செல்கள் அதிகம் இருப்பார்கள் என்பது பேச்சாக இருக்கும்.

கோவை
கோவை

அதனால்தான், தி.மு.க இங்கு தொடர்ந்து பலவீனமாகக் காணப்படுகிறது என்பது ஊர் அறிந்த விஷயம். அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை மாவட்டப் பொறுப்பாளராக வந்ததும், அது மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், கோவை மாநகர் மாவட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக், கோவை தெற்கு மாவட்டத்துக்கு தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்டத்துக்கு தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் புதிய மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட இருக்கின்றனர்.

ரவி
ரவி

இது கோவை தி.மு.க உடன்பிறப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதிதாக நியமிக்கப்படவிருக்கும் மா.செ-க்களுக்கு எதிராக கோவை உடன்பிறப்புகள் தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில் தொண்டாமுத்தூர் ரவி, எஸ்.பி.வேலுமணியுடன் இருக்கும் படங்களுடன், ``இவரையா மாவட்டச் செயலாளராக்குகின்றனர். இது நேரடியாக வேலுமணியை மாவட்டச் செயலாளராக்குவதற்கு சமம். வேலுமணியின் ஸ்லீப்பர் செல்களால்தான் தொண்டாமுத்தூர் தொகுதியில், தி.மு.க தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது.  

செந்தில் பாலாஜியுடன் ரவி
செந்தில் பாலாஜியுடன் ரவி

அவரை எதிர்த்து அரசியல் செய்யத்தான் நமக்கு ஆள் தேவை. அவருடன் நெருக்கமானவர்களை வைத்து தேர்தலில் வெற்றி பெற முடியாது” என்று கூறி வருகின்றனர். ரவி தற்போது தி.மு.க தொண்டாமுத்தூர் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்.

இது குறித்து ரவியிடம் விளக்கம் கேட்டபோது, ``நான் தொண்டாமுத்தூர் பேரூராட்சித் தலைவராக இருந்தபோது, வேலுமணி அமைச்சராக இருந்தார். தொகுதிக்குள் அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வார். அப்போது எடுக்கப்பட்ட படம் அது. அவர் அமைச்சர், நான் பேரூராட்சித் தலைவர். பெருந்தலைவர் என்ற அடிப்படையில் மரியாதை நிமித்தமாக வரவேற்பு கொடுத்தோம். நான் வேலுமணியை எதிர்த்துதான் அரசியல் செய்து வருகிறேன்.  அவருடன் தொடர்பில் இருந்தேன் என்பது தவறான தகவல்.

அ.தி.மு.க ஆட்சியில் எனக்குச் சொந்தமான ஒரு வணிக வளாகத்தை இடித்துவிட்டார்கள். அவருடன் தொடர்பில் இருந்திருந்தால், அந்த நிலை வந்திருக்காது. நான் இணக்கமாக போயிருந்தால் என் சொத்து பாதுகாக்கப்பட்டிருக்கும். நான் இருப்பது தொண்டாமுத்தூர் பேரூராட்சி. அங்கு இதுவரை ஒருமுறைகூட அ.தி.மு.க வென்றதில்லை” என்றார்.