Published:Updated:

“சமாதி நிலைக்குச் சென்றாரா நித்யானந்தா?” - பரிதாபத்தைத் தேடும் ஃபார்முலாவா?

நித்யானந்தா

“பண நெருக்கடி, மனநெருக்கடி இரண்டுமே நித்யானந்தாவை ஆட்கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவரது பயிற்சி முகாமிற்கு ஆட்கள் சேரவில்லை

“சமாதி நிலைக்குச் சென்றாரா நித்யானந்தா?” - பரிதாபத்தைத் தேடும் ஃபார்முலாவா?

“பண நெருக்கடி, மனநெருக்கடி இரண்டுமே நித்யானந்தாவை ஆட்கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவரது பயிற்சி முகாமிற்கு ஆட்கள் சேரவில்லை

Published:Updated:
நித்யானந்தா
"சுவாமிஜி அவர்கள் சமாதி நிலைக்குச் செல்வது ஒன்றும் புதிதல்ல. அவர் வருடத்தில் பல நாள்கள் சமாதியில்தான் இருப்பார். சமாதியில் இருந்து எழுந்த பின், ஆன்மிகப் பயிற்சி வகுப்புகள் எடுத்து, சமாதியில் பரமசிவன் கொடுத்த சக்திகளை மக்களுக்கு தீட்சையாக வழங்குவார்” என்று அதிரடியாக அறிவித்துள்ளது கைலாசா இணையதளப் பக்கம்.

சர்ச்சைக்குப் பெயர்போன நித்யானந்தா மரணம் அடைந்துவிட்டார் எனக் கடந்த இரண்டு நாள்களாக செய்திகள் பரவிவந்த நிலையில், நான் திரும்பி வந்துடேன்னு சொல்லு” என்கிற வசனத்தைத் தன் கைப்பட எழுதுவது போல ஒரு புகைப்படத்தை நித்யானந்தே பகர்ந்திருந்தார். தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பது உண்மைதான் எனவும், தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருதாகவும், விரைவில் நலமுடன் தனது பக்தர்களைச் சந்திப்பேன் என்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில்தான் நித்யானந்தா குறித்த தகவல்கள் எல்லாம் இணையதளத்தை ஆக்கிரமித்துவரும், நிலையில் இப்போது அவரது கைலாசா இணையப்பக்கத்தில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

நித்யானந்தா
நித்யானந்தா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில் “சுவாமிஜி சமாதி நிலைக்குச் சென்று திரும்பிவந்தபிறகு, பரமசிவன் கொடுத்த சக்திகளை மக்களுக்கு தீட்சையாக வழங்குவார்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.மேலும் அதில், “இப்பொழுது மட்டும் வதந்திகளை ஊடகங்கள் மூலமாகப் பரப்பி வருகின்றனர். இவர்கள் இந்த வதந்தியைப் பரப்ப இதுதான் காரணம் என்று எங்களால் ஒன்றை யூகிக்க முடிகிறது. சுவாமிஜி 21 நாள் ஆன்மிக வகுப்பு ஒன்றை ஆன் லைன் மூலமாக எடுக்கப்போகிறார், இந்த வகுப்பில் உலகம் முழுவதில் இருந்தும் பல பேர் ஆன்லைன் மூலமாகக் கலந்துகொள்ளப்போகிறார்கள். ஆக இந்த ஆன்மிகப் பயிற்சி வகுப்பைச் சீர்குலைக்கவே இது போன்ற வதந்தியைப் பரப்பி வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உண்மையில் நித்யானந்தா விவகாரத்தில் என்ன நடக்கிறது என்று விசாரித்தோம் “பண நெருக்கடி, மனநெருக்கடி இரண்டுமே நித்யானந்தாவை ஆட்கொண்டுள்ளது. குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே அவர் எதிர்பார்த்த அளவுக்கு அவரது பயிற்சி முகாமிற்கு ஆட்கள் சேரவில்லை. எப்போதும் தன்னைச் சுற்றி பெரும் கூட்டத்தை வைத்திருந்தவரால் இப்போது அதற்கும் வாய்ப்பில்லை. ஆன்லைன் பயிற்சி முகாமிற்கும் எதிர்பார்த்த அளவுக்கு ஆட்கள் சேராமல் போனதால் நிதி விசயத்திலும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையெல்லாம் ஒன்றுசேர்ந்து தான் அவரது உடல்நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டிருப்பது உண்மைதான்” என்கிறார்கள்.

நித்யானந்தா
நித்யானந்தா

அதே நேரம் “ நித்யானந்தாவின் பல தந்திரங்களில் ஒன்றுதான் இந்த சமாதி நிலை வசனத்துக்கும், தன்மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், தன் பக்தர்கள் மத்தயில் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தவுமே, அவர் உடல்நிலை நலிவுற்றது போன்ற புகைப்படங்களை அவரே வெளியிட்டுள்ளார் இப்போது. இன்னும் சில நாள்களில் அடுத்த ஒரு வீடியோவை அவர்கள் தரப்பிலிருந்து வெளியிடுவார்கள். அதில் சமாதி நிலைக்கு நித்யானந்தா சென்று பரமசிவனை சந்தித்து வந்துவிட்டார். இனி அவரிடம் தீட்சை பெறுபவர்களுக்குக் கூடுதல் சக்தி கிடைக்கும் என்று அறிவிப்பார்கள். அதை வைத்து அவரிடம் தீட்சை பெறவும், அவரிடம் ஆதீனவாசியாகச் சேரவும் பலரும் முயற்சி செய்வார்கள்.

நித்யானந்தா
நித்யானந்தா

அவருக்கு இதுவரை வருமானம் வந்த பல வழிகளும் தடையாகிவிட்டது. இதனால் இப்போது இந்த யுக்தியை கையில் எடுத்துள்ளார். யாரும் தனக்கு உடல்நிலை நலிவுற்றால் இப்படி போட்டோ போட்டு போஸ் கொடுக்க மாட்டார்கள். நித்யானந்தா எது செய்தாலும் அதற்குப் பின்னால் ஒருசூட்சமம் இருக்கும். அது அவருடன் நெருக்கமாக இருந்த எங்களைப் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும்” என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கைலாச இணையதளத்தில் இதற்கு பதிலடியாக ஒரு விசயத்தையும் குறிப்பிட்டுள்ளார்கள். “கடந்த மார்ச் மாதம் பரமசிவோஹம் 3 என்கிற 21 நாள் ஆன்மிக வகுப்பு நடைபெற்றபோதும்கூட சில வந்திகளை ஊடகங்கள் பரப்பி விட்டார்கள். பரமசிவோஹம் 3 வகுப்பானது மார்ச் மாதம் நடந்ததைத் தொடர்ந்து அதே போன்ற 21 நாள் வகுப்பு அடுத்த மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

நித்யானந்தா
நித்யானந்தா

அதற்கு இடையில்தான் சாமி சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார். ஆக சாமி சமாதி நிலைக்குச் சென்றால் இப்பொழுது பேச மாட்டார் என்று தெரிந்துகொண்டு தேவையில்லாத வதந்தியை அவர்கள் இஷ்டத்திற்குப் பரப்பி வருகின்றனர்” என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள். இன்னும் நித்யானந்தாவை வைத்து என்னென்ன காட்சிகளெல்லாம் அரங்கேறப்போகிறதோ என்று பதைபதைக்கிறார்கள் நித்யானந்தாவை நன்கு அறிந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism