Published:Updated:

உதவி கேட்டு வந்த பெண்ணை தலையில் அடித்த சம்பவம் - அண்ணாமலை ட்வீட்டுக்கு அமைச்சர் பதில்

ஃபைல் படம்

விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சரிடம் உதவி கேட்டு வந்த பெண்ணை மனு கவரால் தலையில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உதவி கேட்டு வந்த பெண்ணை தலையில் அடித்த சம்பவம் - அண்ணாமலை ட்வீட்டுக்கு அமைச்சர் பதில்

விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சரிடம் உதவி கேட்டு வந்த பெண்ணை மனு கவரால் தலையில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
ஃபைல் படம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பயனாளிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி காலை 11 மணிக்கு பாலவநத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வெள்ளாடுகளை வழங்கினார்.

ஃபைல் படம்
ஃபைல் படம்

அமைச்சரின் தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர். தொடர்ந்து சிலர், தங்களின் கோரிக்கைகளை மனுவாக அமைச்சரிடம் வழங்கினர். அப்போது, முதியோர் பென்ஷன் கேட்டு மனு கொடுக்கவந்த பெண்ணை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் மனு அடங்கிய கவரால் தலையில் அடித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகளை தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அமைச்சரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், பதவி விலகாவிட்டால் பா.ஜ.க சார்பில் அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம் எனக் கூறியிருந்தார். இந்த விவகாரம் விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் விசாரித்ததில், அந்தப் பெண், விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தை சேர்ந்த கலாவதி (45) திருமணமாகாதவர். கலாவதியின் தந்தை மற்றும் தாய் பத்மாவதி ஆகியோர் வயது முதிர்ச்சியின் காரணமாக வீட்டில் உள்ளனர்.‌ தான், தினக்கூலி வேலைக்குச் சென்று வருவதில் கிடைக்கும் பணம் பெற்றோர்களைப் பராமரிக்க போதுமானதாக இல்லாததால் தன் தந்தைக்கும் தாய்க்கும் முதியோர் உதவித்தொகை வழங்க ஆவன செய்யுமாறு கேட்டு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் அந்தப் பெண் மனு அளித்தார்.

சாதாரணமாக, மனஅழுத்தத்துடன் இருக்கும் கலாவதி, அனைவரிடமும் சற்று அதிகமாகப் பேசக்கூடியவர். இந்த நிலையில், தன் பெற்றோருக்கு முதியோர் உதவித்தொகை கேட்டு பல நாள்களாக அலைந்தும் பலனளிக்காத காரணத்தால் அமைச்சரை நேரில் சந்திக்கையில் கடகடவெனப் பேசினார். அப்போதுதான், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அந்தப் பெண்ணை தலையில் தட்டி அமைதிப்படுத்தினார்" என்றனர்.

பா.ஜ.க ட்வீட்
பா.ஜ.க ட்வீட்

இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனிடம் பேசினோம். "எம்ஜிஆர் காலத்திலிருந்தே கிட்டத்தட்ட 50 ஆண்டுக்காலமாக நான் அரசியலில் இருப்பவன். நான் எப்படிப்பட்டவன் என்பது என் தொகுதி மக்களுக்கு நன்றாகத் தெரியும். அனைவரிடத்திலும் அன்போடு பழகக்கூடியவன். வேற்றுமை பாராதவன். தகுதி பார்த்தோ, தரம் பார்த்தோ பழக மாட்டேன். எல்லோரையும் சமமாகவே மதித்து இப்போது வரைக்கும் மக்களுக்குச் சேவையாற்றிவருகிறேன். என் தொகுதி மக்களும் என்னை மாமா, தாத்தா என்று முறை சொல்லிப் பழகிவருகின்றனர். பாலவநத்தத்தில் நடைபெற்ற வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் என்னைச் சந்தித்த கலாவதி, எனக்கு உறவினர் பெண்.

பொதுவாக அனைவரிடமும் அமைச்சர் என்ற அந்தஸ்தோடு பழகாமல் அவர்களுக்குள் ஒருவனாகவே பழகுவதுதான் எனது இயல்பு. அந்த உரிமையில்தான் அவர் கொடுத்த மனு கவரை வைத்தே கலாவதியை உரிமையோடு தலையில் தட்டி அமைதிப்படுத்தினேன். நான் தொகுதி மக்களிடம் உரிமையெடுத்துப் பழகியதை ஏற்க முடியாமல் பா.ஜ.க-வின் அண்ணாமலை இதை அரசியலாக்கப் பார்க்கிறார். இதனால் எனக்கு எந்த நஷ்டமும் கிடையாது. அரசியலில் எனக்கு இருக்கும் அனுபவம் அண்ணாமலையின் வயதுகூடக் கிடையாது. ஒரே தொகுதியில் ஒன்பது முறைக்கும் மேல் மக்கள் சேவகனாகப் பணியாற்றும் என்னைப் பற்றி, என் தொகுதி மக்களுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்கு தெரியும். நான் யார் என்பது அண்ணாமலை வந்து சொல்லித்தான் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டியதில்லை" என்றார்.