Election bannerElection banner
Published:Updated:

தமிழகத்தை தொடர்ந்து அசாமில் தொகுதி பங்கீட்டு பிரச்னையில் காங்கிரஸ்

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

அசாம் மாநிலம் பராக் பள்ளத்தாக்கில் (barak valley) காங்கிரஸ் கூட்டணி கட்சியான அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) கட்சிக்கு 15 தொகுதிகள் வழங்கியது சுஷ்மிதாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

அசாம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் கூட்டணி அமைப்பது குளறுபடிகளை சரிசெய்வது என அரசியல் கட்சிகளுக்குள் சச்சரவுகள் தொடர்கின்றன.

தமிழகத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பான நீண்ட இழுபறிக்கு பின்னர், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் வழங்கப்பட்டது. தமிழகத்தை அடுத்து அசாம் மாநிலத்தில் தொகுதி பங்கீட்டு சிக்கலில் இருக்கிறது காங்கிரஸ்.

அசாம் மாநிலத்திற்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்டம் வருகின்ற மார்ச் 27- அன்று நடைபெறுகிறது. இருக்கும் குறைவான நாள்களில் மக்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் மனக்கசப்புகளும் அதிருப்திகளும் நிலவுகின்றன. கூட்டணியில் சலசலப்பு இருப்பது வழக்கம். ஆனால் அசாம் காங்கிரஸின் கட்சிக்குள்ளேயே அதிருப்தி நீடிக்கிறது. அசாம் மகிலா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனையில் முரண்பட்டு வெளியேறியது அசாம் தேர்தல் களத்தில் புழுதி கிளப்பியது.

தமிழகத்தை தொடர்ந்து அசாமில் தொகுதி பங்கீட்டு பிரச்னையில் காங்கிரஸ்

கூட்டணிக் கட்சிகளுடனான காங்கிரஸின் தொகுதி பங்கீடு திருப்தி அளிக்காததால், பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார் என்று கூறப்பட்டது. மேலும், தனது குறைகளை நேரில் தெரிவிக்க டெல்லி பயணம் மேற்கொள்வதாகவும் தகவல் வந்தது.

என்ன பிரச்னை?:

அசாம் மாநிலம் பராக் பள்ளத்தாக்கில் (barak valley) கூட்டணி கட்சியான அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) கட்சிக்கு 15 தொகுதிகள் வழங்கியது சுஷ்மிதாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

தமிழகத்தை தொடர்ந்து அசாமில் தொகுதி பங்கீட்டு பிரச்னையில் காங்கிரஸ்

மேலும் சுஷ்மிதா முன்மொழிந்த பாப்பன் டேப் என்பவரை வேட்பாளராக ஏற்காததும் சுஷ்மிதாவை அதிருப்தியடைசயச் செய்திருக்கிறது என்கிறார்கள்.

கட்சிக்குள் சலசலப்பு இருக்கும் நிலையில், 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது காங்கிரஸ். மேலும், சுஷ்மிதா தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது. இருப்பினும் காங்கிரஸ் கட்சிக்குள் சர்ச்சை தொடர்கிறது.

தொகுதி பங்கீடு குறித்து சுமூகமான முடிவு எட்டப்பட்டதா என்பது விரைவில் தெரிய வரும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு