Published:Updated:

ஜோதிடம், சட்டச் சிக்கல், நிர்வாகிகள் - மும்முனைச் சிக்கலில் எடப்பாடி?!

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஒற்றைத் தலைமை விவகாரம் கொளுந்துவிட்டு எரியும் நிலையில், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தை முறையாக நடத்த எடப்பாடி தரப்பினர் பல்வேறு வியூகங்களை அமைத்துவருகிறார்கள்.

ஜோதிடம், சட்டச் சிக்கல், நிர்வாகிகள் - மும்முனைச் சிக்கலில் எடப்பாடி?!

அ.தி.மு.க-வில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஒற்றைத் தலைமை விவகாரம் கொளுந்துவிட்டு எரியும் நிலையில், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தை முறையாக நடத்த எடப்பாடி தரப்பினர் பல்வேறு வியூகங்களை அமைத்துவருகிறார்கள்.

Published:Updated:
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

பொதுக்குழு தொடர்பாக ஜூன் 14-ம் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுத்ததால், பிரச்னை பூதாகரமானது. இது பொதுக்குழுவில் எதிரொலிக்கும் என்பதால், அது குறித்து விவாதிக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு அவருக்குச் சாதகமாக அமையவில்லை.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

இதனால், திட்டமிட்டபடி ஜூன் 23-ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி நம்பியிருந்த வேளையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செய்த மேல்முறையீட்டு மனுவின், அடிப்படையில், "ஏற்கெனவே முடிவு செய்திருக்கும் 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த முடிவும் பொதுக்குழுவில் எடுக்கக் கூடாது'' என்று அதிகாலையில் உத்தரவிடப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து, நடந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் செல்லாது என்றும், ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து புதிய தீர்மானத்துடன் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால், ஓ.பி.எஸ் வெளிநடப்பு செய்யவே, அவர்மீது தண்ணீர் பாட்டில் வீச்சும் நடந்தேறியது.

எடப்பாடி கே.பழனிசாமி
எடப்பாடி கே.பழனிசாமி

அதன்படி, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடக்குமா, நடக்காதா என்ற அச்சநிலையிலேயே எடப்பாடி, பன்னீர் தரப்பு உச்ச நீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் அடுத்தடுத்து மனுக்களைத் தாக்கல் செய்தவாறே இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் எடப்பாடி மிகவும் சோர்வடைந்திருப்பதாக அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் முணுமுணுத்த வண்ணம் இருக்கிறார்கள். இது குறித்து விசாரித்தோம்.

``எடப்பாடி ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கைகொண்டவர். ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவுக்கு முன்பாக அவரின் ஆஸ்தான ஜோதிடரை அவர் அணுகினார். ஆனால், அன்று அவருக்கு சந்திராஷ்டமம் இருப்பதாகத் தெரிவித்ததால், அதற்குப் பரிகாரமாக 22-ம் தேதி இரவு அவரின் வீட்டில் யாகம் நடத்தப்பட்டது. குளித்து முடித்து, யாக மையை நெற்றியில் பூசிக்கொண்டுதான் பொதுக்குழுவுக்கு வந்தார்.

அதிமுக பொதுக்குழுவில் டென்ஷனாக இருந்த எடப்பாடி
அதிமுக பொதுக்குழுவில் டென்ஷனாக இருந்த எடப்பாடி

அதிகாலை வந்த தீர்ப்பும் அவருக்குச் சாதகமாக இல்லை என்பதால், அன்று நாள் முழுவதுமே அவர் கடுகடுவெனவே இருந்தார். தேவையில்லாமல் எல்லா நிர்வாகிகள் மீதும் எரிந்து விழுந்தார். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை ஏற்றுவிடலாம் என்று அவர் நினைத்தது நடக்கவில்லை என்பதால், அடுத்த வளர்பிறையிலிருந்து வளர்ச்சி இருக்கும் என்று கூறப்பட்டது. இது ஓரளவுக்கு இப்போது நடக்கிறது.

அதாவது, புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்ற தீர்ப்பு ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேலும், ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் நேற்று (ஜூலை 6) உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி என்றாலும், ஓ.பி.எஸ் தரப்பு லீகலாக பலமாக இருப்பதால் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை.

அ.தி.மு.க-பன்னீர் செல்வம் - பழனிசாமி
அ.தி.மு.க-பன்னீர் செல்வம் - பழனிசாமி

இது குறித்து வழக்கறிஞர்களிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்திக்கொண்டேயிருக்கிறார். இதற்கிடையே, எதிர்பாராதவிதமாக மூத்த நிர்வாகிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஆன்லைன் மூலமாகப் பொதுக்குழுவை நடத்தலாம் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவினர் எடப்பாடியிடம் தெரிவித்தனர். இந்த யோசனை நன்றாக இருக்கிறது என்று அவர் கூறுவதற்குள், அதற்குக் கொஞ்சம் செலவாகும் என்று அடுத்த குண்டைப் போட்டனர்.

பொருளாளராக ஓ.பி.எஸ் இருப்பதால் கட்சி நிதியை எடுக்க முடியாது என்பதால், தனது பணத்தைத்தான் அனைத்துக்கும் எடப்பாடி செலவு செய்கிறார். தற்போது ஜோதிடம் பார்த்தபோது, மூன்று மாதங்களுக்கு நிலைமை கொஞ்சம் சரியிருக்காது என்று கூறப்பட்டதாம். வழக்கு, ஜோதிடம் என்ற பிரச்னையைத் தாண்டி, மா.செ-க்கள் மீண்டும் கவனிக்கச் சொல்லி எடப்பாடிக்குத் தூது அனுப்புகிறார்கள். ஏற்கெனவே, பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுக்கு நிறையவே கவனித்துவிட்டார் எடப்பாடி. இப்போது, வழக்கு, பொதுக்குழுவுக்கு நிறையவே செலவு செய்யவேண்டிய நிலையில் அவர் இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், நிர்வாகிகள் மீண்டும் கவனிக்கச் சொல்வதால், கடுமையான அப்செட்டில் எடப்பாடி இருக்கிறார். மேலும், ஜூலை 11-ல் பொதுக்குழு வெற்றிகரமாக முடிந்துவிட்டால், அப்புறம் கவனிப்பதாக நம்பிக்கை தெரிவித்தாலும், நிர்வாகிகள் ஒத்துழைக்கவில்லை. இதற்கிடையே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஓ.பி.எஸ் தரப்பு கிளறுகிறார்கள். எனவே, எல்லா பிரச்னைகளையும் சமாளிக்க, பொதுக்குழுவுக்கு முன்பாக மகா யாகம் ஒன்றை நடத்த எடப்பாடி முடிவு செய்திருக்கிறார்" என்றனர் விரிவாக.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஜோதிடம், சட்டச் சிக்கல், நிர்வாகிகள் என்ற மும்முனைத் தாக்குதலைச் சமாளித்து, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவாரா என்பதைக் காணக் காத்திருப்போம்..!