Published:Updated:

``எடப்பாடி, சசிகலாவுக்கு துரோகம் பண்ணுனதைப் பத்திக் கேளு” - அதிமுக தொண்டரிடம் ஆறுக்குட்டி காட்டம்

ஆறுக்குட்டி

அதிமுக-விலிருந்து திமுக-வில் இணைந்த ஆறுக்குட்டியுடன் அதிமுக தொண்டர் நாகராஜ் பேசிய ஆடியோ வைரலாகிவருகிறது.

``எடப்பாடி, சசிகலாவுக்கு துரோகம் பண்ணுனதைப் பத்திக் கேளு” - அதிமுக தொண்டரிடம் ஆறுக்குட்டி காட்டம்

அதிமுக-விலிருந்து திமுக-வில் இணைந்த ஆறுக்குட்டியுடன் அதிமுக தொண்டர் நாகராஜ் பேசிய ஆடியோ வைரலாகிவருகிறது.

Published:Updated:
ஆறுக்குட்டி

கோவை விளாங்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுக்குட்டி. இவர் 2011 முதல் 2021 வரை அதிமுக எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்தார். அதிமுக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகளாகப் பிரிந்தபோது முதலில் ஓ.பி.எஸ் அணியில் இருந்து, பின்னர் இ.பி.எஸ் அணிக்குத் தாவினார். கொடநாடு வழக்கு குறித்து ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், அதிமுக-விலிருந்து விலகி திமுக-வில் இணைந்திருக்கிறார். இதற்கு, `ஆறுக்குட்டி வேடந்தாங்கல் பறவைபோல’ என இ.பி.எஸ் விமர்சித்திருந்தார். மேலும், அதிமுக வட்டாரங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முளைத்தன.

ஆறுக்குட்டி
ஆறுக்குட்டி

தற்போது அதிமுக தொண்டர் நாகராஜும் ஆறுக்குட்டியும் பேசும் ஆடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த ஆடியோவில் அதிமுக தொண்டர் நாகராஜ், ``உங்களுக்காக உயிரைக் கொடுத்து பாடுபட்டோம்… உங்களுக்கு ஜெயலலிதா இரண்டு தடவை பதவி கொடுத்து அழகு பார்த்தாங்க... ஆனா, ஜெயலலிதாவுக்கு இப்படி துரோகம் பண்ணிட்டீங்களே... ஜெயலலிதாவுக்கு நயவஞ்சகம் பண்ணிட்டீங்க” எனப் பேசியிருந்தார்

அதற்கு ஆறுக்குட்டி, ``என்ன துரோகம் பண்ணிட்டேன்... எடப்பாடி, சசிகலாவுக்கு துரோகம் பண்ணுனதைப் பத்திக் கேளு” எனக் காட்டமாக பதிலளித்தார். .

இந்த ஆடியோ தொடர்பாக ஆறுக்குட்டியிடம் விளக்கம் கேட்டபோது, ``அவர் எனக்கு தெரிந்த நபர்தான். நான் செல்போனில் பேச வேண்டாம், நேரில் பேசிக்கொள்ளலாம் எனத் தெரிவித்தேன். அவரை யாரோ தூண்டிவிட்டு பேசவைத்திருக்கலாம்” என்றார்.