Published:Updated:

ஆவடி மாநகராட்சி: மேயருக்கு `நிழல்’... துணை மேயருக்கு `மகன்’! - மேயர் ரேஸில் அமைச்சரின் பலே திட்டம்?

ஆவடி மாநகராட்சி மேயர் ரேஸ்

ஆவடி மாநகராட்சியில் மாவட்ட அமைச்சரான நாசரின் கைதான் ஓங்கியிருக்கிறது. நாசரின் `நிழல்’ என அறியப்படும் வீரபாண்டியனே மேயர் என்கிறார்கள்.

ஆவடி மாநகராட்சி: மேயருக்கு `நிழல்’... துணை மேயருக்கு `மகன்’! - மேயர் ரேஸில் அமைச்சரின் பலே திட்டம்?

ஆவடி மாநகராட்சியில் மாவட்ட அமைச்சரான நாசரின் கைதான் ஓங்கியிருக்கிறது. நாசரின் `நிழல்’ என அறியப்படும் வீரபாண்டியனே மேயர் என்கிறார்கள்.

Published:Updated:
ஆவடி மாநகராட்சி மேயர் ரேஸ்

48 வார்டுகளைக்கொண்ட ஆவடி மாநகராட்சிக்கு நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க 35 இடங்களிலும், அ.தி.மு.க நான்கு இடங்களிலும், ம.தி.மு.க மூன்று இடங்களிலும், காங்கிரஸ் மூன்று இடங்களிலும், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சி தலா ஓர் இடத்திலும் இடத்திலும் வெற்றிபெற்றன. ஒரு சுயேச்சையும் ஜெயித்திருக்கிறார்.

ஆசிம்ராஜா
ஆசிம்ராஜா

ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டபோதே அதன் மேயர் தான்தான் என்று சொல்லிக்கொண்டிருந்தாராம் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா. ஆனால், மேயர் பதவியை பட்டியலினத்தவருக்குக் கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது தி.மு.க தலைமை. இருந்தபோதும் துணை மேயர் ஆசிம்ராஜாதான் என்று தற்போது சொல்லிவருகிறார்கள். உண்மையில் மேயர் மற்றும் துணை மேயருக்கு ரேஸில் இருப்பது யார் யார்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது பற்றி திருவள்ளூர் மாவட்ட தி.மு.க முன்னோடி ஒருவரிடம் பேசினோம். ``ஆவடி மாநகராட்சியில் 21-வது வார்டில் போட்டியிட்டு வென்ற வீரபாண்டியன்தான் ஆவடியின் முதல் மேயர் என்பது 99 சதவிகிதம் முடிவாகிவிட்டதாம். தலைமையிலிருந்து அனைத்து கவுன்சிலர்களுக்கும் இது பற்றிய தகவல் சென்றுவிட்டதாம். வீரபாண்டியன், அமைச்சர் நாசரின் நிழல் போன்றவர். பெரும்பாலான நேரங்களில் நாசருடன்தான் இருப்பார். நாசர் வீட்டருகே பல காலமாக மளிகைக் கடை வைத்திருப்பவர்.

வீரபாண்டியன்
வீரபாண்டியன்

நாசரின் வீட்டுத் தேவை மொத்தமும் வீரபாண்டியன் கடையிலிருந்துதான் பூர்த்தி செய்யப்படுமாம். நாசருக்கும் வீரபாண்டியனுக்கும் 20 ஆண்டுகளுக்கும் மேலான பழக்கம் இருக்கிறது. இதேபோல், வீரபாண்டியனின் மகன் ஒருவர்தான் ஆசிம்ராஜாவுக்கு எல்லாமுமாக இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனால், வீரபாண்டியன்தான் மேயர் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். ஒருவேளை வீரபாண்டியனுக்கு யோகம் அடிக்கவில்லையென்றால், அடுத்த இடத்தில் இருப்பது உதயகுமார். திருமுல்லைவாயல் காலனி பகுதியைச் சேர்ந்த உதயகுமார், 8-வது வார்டில் முதன்முறையாகப் போட்டியிட்டு ஜெயித்தவர்.

உதயகுமார்
உதயகுமார்

இவருக்கு அடுத்து ராஜேஷ் என்பவர் பெயரும் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க-வில் கடந்த ஆண்டுதான் உறுப்பினராக இணைந்தார். பேசவேண்டிய இடத்தில் பேசி கவுன்சிலர் சீட்டைப் பெற்றார். ஜெயித்ததும் தி.மு.க-வில் ஐக்கியமாகிவிடுவதாக ராஜேஷ் உறுதிகொடுத்ததால், ராஜேஷுக்கு ஆதரவாக தி.மு.க 14-வது வார்டை வி.சி.க-வுக்குக் கொடுத்தது மட்டுமின்றி, தி.மு.க நிர்வாகி ஒருவரின் மனைவியையும் சுயேச்சையாகப் போட்டியிட வைத்ததாகச் சொல்லப்படுகிறது. நினைத்ததுபோலவே வாக்குகள் பிரிந்து, ராஜேஷ் வெற்றிபெற்றார்.

வெற்றிபெற்றதற்கான சான்றிதழைத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வாங்கச் சென்றபோதே தி.மு.க கரைவேட்டியுடன்தான் சென்றார் ராஜேஷ். வெற்றியைப் பட்டாசு வெடித்துக் கொண்டாட அ.தி.மு.க-வினர் ராஜேஷைத் தேடிக்கொண்டிருந்த சமயம், ராஜேஷுடைய கார் அமைச்சர் நாசர் வீட்டில் இருந்திருக்கிறது. ஜெயித்த மறுகணம், சொன்னதுபோலவே அமைச்சர் நாசருக்குச் சால்வையைப் போட்டு, தி.மு.க-விலும் இணைந்துவிட்டார் ராஜேஷ். மேயர் பதவியை எதிர்பார்த்துத்தான் ராஜேஷ் கட்சி தாவியதாகவும் சொல்கிறார்கள். எனினும், பட்டியலில் வீரபாண்டியனே முந்துகிறார்.

வி.ஜி.ஆர்
வி.ஜி.ஆர்

மேயர் பதவிக்குத்தான் போட்டி நிறைந்திருக்கிறது, துணை மேயர் பதவிக்கு போட்டியிருக்காது என்றுதான் நினைத்திருந்தது அமைச்சர் தரப்பு. ஆனால், அமைச்சர் நாசர் மகன் ஆசிம்ராஜாவுக்கு துணை மேயர் கொடுப்பதை, நாசரின் எதிர் டீமான எம்.எல்.ஏ வி.ஜி.ஆர் டீம், ஆசிம்ராஜாவுக்குப் பதவி கிடைக்கவிடாமல் லாபி செய்துவருகிறார்கள்.

ஆதவன், விசிக
ஆதவன், விசிக

அதுமட்டுமின்றி, சென்னை, தாம்பரத்தைவிட ஆவடியைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் பட்டியலின மக்கள் மிகுதியாக வாழ்வதால், தங்களுக்குத் துணை மேயர் பதவியையாவது விட்டுக்கொடுக்க வேண்டும் என வி.சி.க-வினர் கேட்டுவருகிறார்கள். 41-வது வார்டில் வென்ற ஆதவன் என்பவர்தான் துணை மேயர் பதவியை எதிர்பார்க்கிறார்.

அபிஷேக், காங்கிரஸ்
அபிஷேக், காங்கிரஸ்

இன்னொரு புறம் காங்கிரஸ் கட்சியும் துணை மேயர் பொறுப்பை எதிர்பார்க்கிறது. 13-வது வார்டில் போட்டியிட்ட அபிஷேக் என்பவர் கேட்கிறார். இறுதிக்கட்ட பட்டியலில் மேயர் பதவிக்கு வீரபாண்டியனும், துணை மேயருக்கு ஆசிம்ராஜாவும் தேர்வு செய்யப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் இப்போதைக்கான தகவல்” என்பதோடு முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism