Published:Updated:

`உண்மையை எழுதுங்கள்!’ - அரசியல் நிலைப்பாடு கேள்வியும் அழகிரியின் பதிலும்

அழகிரி, அரசியல் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுத்து ஆதரவாளர்களை மகிழ்ச்சியடைய வைப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாகவே இருந்து வந்தார்.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

எந்தவொரு அரசியல் நடவடிக்கையும் இல்லாமல் தொடர்ந்து ஓய்வில் இருக்கும் மு.க. அழகிரி, நீண்ட இடைவெளிக்குப் பின் தன் ஆதரவாளர் உதயகுமாரின் கடையைத் திறந்துவைக்க வந்தவர், அரசியல் நிலைப்பாடு குறித்து எந்தப் பதிலையும் கூறாமல் சென்றது, ஆதரவாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி
ஈ.ஜெ.நந்தகுமார்

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டிருக்கும் அழகிரி, கருணாநிதி இருக்கும்போதே கட்சியில் சேர முடியாமல் ஒதுக்கப்பட்ட நிலையில், அவரது மறைவுக்குப் பின் முழுமையாக ஓரங்கட்டப்பட்டார்.

கட்சிக்கு எதிராகவோ அல்லது தனி இயக்கமோ தொடங்கி ஆதரவாளர்களை மகிழ்ச்சியடைய வைப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாகவே இருந்துவந்தார்.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி
ஈ.ஜெ.நந்தகுமார்

கடந்த மாதம் அவருக்கு திடீரென்று உடல் நலமில்லாமல் போகவே, மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்ட பின் வெளி நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் ஓய்விலேயே இருந்தார். இந்த நிலையில்தான், தீவிர விசுவாசியான உதயகுமாரின் மார்பிள் ஷோரூமைத் திறந்துவைக்க இன்று வருகைதந்தார்.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி
ஈ.ஜெ.நந்தகுமார்

திறந்து வைத்துவிட்டு உடனே கிளம்பியவரிடம், ''சார், உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?''என்றோம். நம்மை ஏற இறங்கப் பார்த்தவர், ''ஊடகங்கள்... உண்மையை எழுதுங்கள்'' என்றார் சம்பந்தமில்லாமல்.