Published:Updated:

`பெரியப்பாவின் கோட்டைக்கு வரவேற்கிறோம்'- உதயநிதியை வரவேற்ற அழகிரி ஆதரவாளர்கள்!

udhayanidhi stalin ( vikatan )

உதயநிதியை அழகிரி ஆதரவாளர்கள் வரவேற்றதுதான் மதுரை அரசியல் புள்ளிகள் மத்தியில் பேச்சாக உள்ளது.

`பெரியப்பாவின் கோட்டைக்கு வரவேற்கிறோம்'- உதயநிதியை வரவேற்ற அழகிரி ஆதரவாளர்கள்!

உதயநிதியை அழகிரி ஆதரவாளர்கள் வரவேற்றதுதான் மதுரை அரசியல் புள்ளிகள் மத்தியில் பேச்சாக உள்ளது.

Published:Updated:
udhayanidhi stalin ( vikatan )

மதுரை வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, அழகிரி ஆதரவாளர்கள் வரவேற்பு போஸ்டர் ஒட்டியுள்ளது தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் அணி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த இன்று காலை மதுரை வந்தார், தி.மு.க இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

udhayanidhi stalin
udhayanidhi stalin

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட, நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை நாராயணபுரத்தில் இளைஞர் அணியினர் தூர்வாரும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதன்பின் திருவாரூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செல்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து நகரமெங்கும் ஒட்டியுள்ளது, பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 'உங்கள் பெரியப்பா அழகிரியின் கோட்டைக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கிறோம்' என்று போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

udhayanidhi stalin
udhayanidhi stalin

இதைப்பற்றி அழகிரி தரப்பில் விசாரித்தபோது, ``மதுரை மாவட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் ஏற்கெனவே ஸ்டாலின் அணிக்குத் தாவி பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். எப்படியும் கட்சியில் இணைந்து பணியாற்றுவார் என்ற நம்பிக்கையில் இன்னும் சிலர் அழகிரியை நம்பி இருந்து வருகின்றனர். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழல் தெரிவதால் இதுபோன்று போஸ்டர் அடித்து ஸ்டாலின் தரப்பினரை கன்வின்ஸ் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.

ஆனால், இது உதயநிதியை ஈர்க்குமா என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் உங்கள் பெரியப்பாவின் கோட்டை என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம், ஸ்டாலின் தரப்பினரை கிண்டல் செய்வதுபோல் உள்ளது என்பதால் விமர்சனம் எழுந்துள்ளது. அதேநேரம் இந்த போஸ்டர் விவகாரம் அழகிரிக்குத் தெரியுமா என்று தெரியவில்லை'' என்கிறார்கள்.