Published:Updated:

ஆ.ராசா வைத்த `பஞ்ச்'... கடுப்பில் கனிமொழி - தி.மு.க பொதுக்குழு பின்னணி!

தி.மு.க பொதுக்குழு கூட்டம்
தி.மு.க பொதுக்குழு கூட்டம் ( ஸ்ரீநிவாசுலு )

தி.மு.க மகளிரணிச் செயலாளர் என்ற பதவியில் கனிமொழி இருந்தாலும், அது ஓர் அணியின் பதவி மட்டுமே. கட்சியின் அமைப்புரீதியான பதவியல்ல, தனக்குக் கட்சி அமைப்பில்தான் பதவி வேண்டும் என்று கனிமொழி நினைக்கிறார்.

``இந்தியாவிலே எந்தக் கட்சியும் செய்யாத சாதனையாக ஆன்லைனிலே பொதுக்குழுவை நடத்தி முடித்திருக்கிறார் ஸ்டாலின். அதேநேரம் பொதுக்குழு எப்போது நடக்கும், தங்கள் மனதிலுள்ள குறைகளை தலைமையிடம் பொங்கிவிடலாம் எனக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பேசிய நிர்வாகிகள் அனைவருமே தலைமைக்கு புகழ்மாலை சூடிச் சென்றதால் சுவாரஸ்யம் இல்லாத பொதுக்குழுவாகவும் இது நடந்து முடிந்திருக்கிறது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்
ASHWIN_KUMAR

தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 9-ம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 67 இடங்களிலிருந்து தி.மு.க உறுப்பினர்கள் இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்றனர். அன்பழகன் மறைவுக்குப் பிறகு அவர் வகித்துவந்த பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் ஏற்கெனவே போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.

அதேநேரம் தனக்கு மாநில அளவில் பொறுப்பு வேண்டும் என்று தலைமைக்கு அழுத்தம் கொடுத்த பொன்முடிக்கும், `என்னைக் கண்டுகொள்வதே இல்லை’ என்று கவலையிலிருந்த ஆ.ராசாவுக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை அளித்து அவர்களைச் சரிக்கட்டியிருக்கிறார் ஸ்டாலின். இந்தப் பதவி ஏற்பு வைபவங்கள் ஒருபுறமிருந்தாலும், இதற்கு பின்னால் நடந்த மறைமுகச் சுவாரஸ்யங்களையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

நேருவுடன் ஒன்றாக சட்டமன்றத்தில் காலடி எடுத்துவைத்தவர் பொன்முடி. நேருவுக்கு முதன்மைச் செயலாளர் பதவியை வழங்கியதும் டென்ஷனான பொன்முடி, `நான் இதுவரை மாவட்டச் செயலாளர் பதவியிலேயே இருக்கிறேன். எனக்கு என்ன செய்யப்போகிறீர்கள்’ என்று கடந்த ஒரு மாதமாகவே தலைமைக்கு நெருக்கடி கொடுத்துவந்தார். அதேபோல் தி.மு.க-வின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ஆ.ராசா, கடந்த சில மாதங்களாகவே கட்சித் தலைமைமீது வருத்ததில் இருந்தார். பொருளாளர் பதவி தனக்குக் கிடைக்க வேண்டும் என்பதே அவர் எதிர்பார்ப்பு, ஆனால், அவரைவிட கட்சிக்குள் சீனியர்கள் இருந்ததால், அந்தப் பதவிக்கு வாய்ப்பில்லை என்பதை ஆரம்பத்திலேயே கட்சித் தலைமை சொல்லிவிட்டது. இதனால், கடந்த ஐந்து மாதங்களாகவே சென்னைப் பக்கம் வராமல் டெல்லியிலேயே வாசம் செய்தார். அங்கு புதிதாக வீடு ஒன்றையும் பிடித்து குடும்பத்தினருடன் குடியேறிவிட்டார். பொதுக்குழு அறிவிக்கப்படும் வரை அவர் டெல்லியைவிட்டு வரவில்லை. இது கட்சித் தலைமைக்கு தெரிந்து, டி.ஆர்.பாலுவை வைத்து ஆ.ராசாவிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.

துரைமுருகன், ஸ்டாலின். டி.ஆர்.பாலு
துரைமுருகன், ஸ்டாலின். டி.ஆர்.பாலு
ASHWIN_KUMAR

அந்தப் பேச்சுவார்த்தையில், ``உங்களுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்க தலைவர் தயாராக இருக்கிறார்” என்று சொன்னதும், ஆ.ராசா பெரிதாக ரியாக்‌ஷன் காட்டவில்லையாம். `பட்டியலின கோட்டாவில் எனக்குப் பொறுப்பு கொடுக்கத் திட்டமிட்டிருக்கிர்களா... கோட்டாவில் வரும் பொறுப்பு எனக்கு வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார். `கோட்டாவில் இல்லை. பொதுப் பட்டியலிலேயே உங்களுக்கு வழங்குகிறோம்’ என்று சொன்ன பிறகே `ஓகே’ சொல்லியிருக்கிறார். ஆனால், கட்சித் தலைமை ஆ.ராசா எந்தப் பிரிவில் இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கிறார் என்பதைத் தெரிவிக்கவில்லை. துணைப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்று மட்டுமே அறிவித்தது.

ஆனால், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பு, கோட்டாவில் வந்த பொறுப்பல்ல என்பதைத் தனது ஏற்புரையில் குறிப்பிட்டு, 'பஞ்ச்' வைத்தார் ஆ.ராசா. அவரின் சமயோசித வேலையை எண்ணி ஆச்சர்யப்படுகிறார்கள் தி.மு.க-வினர். துணைப் பொதுச்செயலாளராக ஆ.ராசா பொறுப்பேற்ற பிறகு காணொளியில் அவர் உரையாற்றியபோது, ``தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் பதவிகளில் ஆதிதிராவிடருக்கு என்று ஒரு பதவி இருக்கிறது. அந்தப் பதவியை ஏற்கெனவே அந்தியூர் செல்வராஜ் அலங்கரித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அதையும் தாண்டி துணைப் பொதுச்செயலாளர் எண்ணிக்கையை ஐந்தாக்கி, பொதுப் போட்டியிலும் ஒரு பட்டியலினத்தவர் வர முடியும் என்கிற வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறீர்கள். அதற்கு நன்றி” என்று குறிப்பிட்டார்.

ஆ.ராசா
ஆ.ராசா

அதாவது ``நான்கோட்டாவில் வந்தவன் அல்ல, பொதுப்பட்டியல்படியே இந்தப் பதவிக்கு வந்திருக்கிறேன்” என்பதை அழுத்தமாகப் பொதுக்குழுவில் பதவி செய்திருக்கிறார் ஆ.ராசா.

அதேநேரம் இந்தப் பொதுக்குழுவுக்குப் பிறகு மனக்கவலையுள்ள நபராக மாறியிருக்கிறார் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி. தனக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவிகிடைத்துவிடும். மேடையில் தானும் அமரும் வாய்ப்பு கிட்டும் என்று நீண்ட நாள்களாகவே எதிர்ப்பார்த்துவருபவர் கனிமொழி. ஏற்கெனவே தி.மு.க=வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சற்குணபாண்டியன் மறைவுக்கு பிறகு அந்த இடம் தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் கனிமொழி. ஆனால், அந்தப் பதவி சுப்புலெட்சுமி ஜெகதீசனுக்குச் சென்றது.

இந்த முறை துணைப் பொதுச்செயலாளர் எண்ணிக்கையை அதிகரிக்கும்போது நாடார் என்கிற சமூக இட ஒதுக்கீட்டு அடிப்படையிலும், பெண் என்கிற கோட்டாவிலும் தனக்கும் ஒரு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அதற்கு கடைசிவரை பிடிகொடுக்கவில்லை ஸ்டாலின். கடைசியாக, புதிதாகப் பதவியேற்றவர்களுக்கு வாழ்த்துரை வழங்க மட்டுமே கனிமொழியை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இது குறித்து பொதுக்குழு நடந்த அன்றே சமூக வளைதளங்களில் `கனிமொழி வருத்தத்தில் இருக்கிறார்’ என்று செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன.

கனிமொழி
கனிமொழி

அதேநேரம் கனிமொழிக்கு ஏற்கெனவே மு.க.அழகிரி வசமிருந்த தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியையாவது வழங்க வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் இப்போது கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள்.

இதனால் தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் நாடார் மக்களின் வாக்குகளையும் எளிதாகப் பெறமுடியும் என்றும், தி.மு.க-வின் பவர்ஃபுல் பதவியில் ஒரு பெண்ணை அமரவைத்து அழகுபார்த்த வரலாறும் தி,மு.க-வுக்கு இருக்கும் என்றும் கனிமொழி தரப்பினர் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

தி.மு.க: பொதுச்செயலாளர் துரைமுருகன்... பொருளாளர் டி.ஆர் பாலு... சமாளிப்பாரா  ஸ்டாலின்?

கனிமொழி மகளிர் அணிச் செயலாளர் பதவியில் இருந்தாலும், அது ஓர் அணியின் பதவி மட்டுமே. கட்சியின் அமைப்புரீதியான பதவியல்ல. தனக்குக் கட்சியின் அமைப்புரீதியிலான ஒரு பதவி வேண்டும் என்கிற தனது எண்ணத்தை யாரிம் சொல்லி உயிர்கொடுப்பது என்கிற கடுப்பில் இருக்கிறாார் கனிமொழி.

கனிமொழி -ஸ்டாலின்,
கனிமொழி -ஸ்டாலின்,

அதேநேரம், ``ஒரே குடும்பத்தில், அதிகாரம்மிக்க பதவிகளை அடுத்தடுத்து தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே கொடுத்தால் குடும்ப அரசியல் முத்திரை தன்மீது விழுந்துவிடும்” என்று ஸ்டாலின் பதவி மாற்றத்துக்குப் பிடிகொடுக்காமல் இருக்கிறார். இதனால் பொதுக்குழுவில் பிறரை வாழ்த்தி, புளங்காங்கிதம் அடையும் அளவுக்குப் பேசிய கனிமொழி உள்ளூரக் கடுப்பில் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமனாவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு