Published:Updated:

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்த பால் தாக்கரே பேரன்!

ஷிண்டேயுடன் நிஹர் தாக்கரே

மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் பேரன் சிவசேனா அதிருப்தி கோஷ்டியான ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்திருக்கிறார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்த பால் தாக்கரே பேரன்!

மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் பேரன் சிவசேனா அதிருப்தி கோஷ்டியான ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்திருக்கிறார்.

Published:Updated:
ஷிண்டேயுடன் நிஹர் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு உத்தவ் தாக்கரேயும், அதிருப்தி கோஷ்டித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேயும் தங்களுக்கு ஆதரவாளர்களைத் திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருவரும் தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக தேர்தல் கமிஷன் அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்துள்ளனர். இதையடுத்து வரும் 8-ம் தேதிக்குள் இரண்டு அணிகளும் தங்களது ஆதரவாளர்கள் பட்டியலை கொடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேயிக்கு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதனால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எண்ணிக்கை தங்களுக்கு அதிகமாக இருப்பதாகக் காட்ட உத்தவ் தாக்கரே தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்த பால் தாக்கரே பேரன்!

இந்த நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு மறைந்த பால் தாக்கரே மருமகள் ஸ்மிதா தாக்கரே முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயைச் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தற்போது பால் தாக்கரேயின் பேரன் நிஹர் தாக்கரேயும் ஏக்நாத் ஷிண்டேயைச் சந்தித்து அவரின் அணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

நேற்று நிஹர், ஏக்நாத் ஷிண்டேயைச் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பால் தாக்கரேயின் மகன் பிந்து மாதவ்-வின் மகன்தான் நிஹர் தாக்கரே. பிந்து மாதவ் கடந்த 1996-ம் ஆண்டு இறந்துபோனார். தற்போது நிஹர் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். அதோடு பாஜக தலைவர்களில் ஒருவரான ஹர்ஷ்வர்தன் பாட்டீல் மகள் அங்கிதாவைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். நிஹர் தாக்கரே ஏக்நாத் ஷிண்டேவுக்க்கு ஆதரவு கொடுத்திருப்பது அதிருப்தி கோஷ்டிக்கு பிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

தாக்கரே குடும்பத்தினரும் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்துவருவது உத்தவ் தாக்கரேவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. உத்தவ் தாக்கரே தன் தந்தை இருந்தபோதே தன்னுடைய சகோதரர்களை ஓரங்கட்டிவிட்டு கட்சியைத் தனது கட்டுக்குள் கொண்டுவந்தார். இதற்கிடையே ஏக்நாத் ஷிண்டே பாஜக-வுடன் அமைச்சர்களை 65:35 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்ள திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 35 சதவிகித அமைச்சர்கள் ஷிண்டே அணிக்கு வழங்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!