Published:Updated:

பசும்பொன்: சேதப்படுத்தப்பட்ட முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கட்அவுட்டுகள்!

சேதப்படுத்தப்பட்ட முதல்வர் எடப்பாடி கட் அவுட்
சேதப்படுத்தப்பட்ட முதல்வர் எடப்பாடி கட் அவுட் ( உ.பாண்டி )

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வைகோ வராத நிலையில் ம.தி.மு.க-வின் மற்ற நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பகல் 12 மணியளவில் அ.ம.மு.க சார்பில் டி.டி.வி.தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுடன் அஞ்சலி செலுத்தினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த முதல்வரை வரவேற்று வைக்கப்பட்ட கட்அவுட்டுகள் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேதப்படுத்தப்பட்ட முதல்வர் எடப்பாடி கட் அவுட்
சேதப்படுத்தப்பட்ட முதல்வர் எடப்பாடி கட் அவுட்
உ.பாண்டி

பசும்பொன்னில் 58-வது குருபூஜை தினமான இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், ஒ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், பாஸ்கரன் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தேவர் நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன்
தேவர் நினைவிடத்தில் டி.டி.வி.தினகரன்
உ.பாண்டி

தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, சுப.தங்கவேலன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வைகோ வராத நிலையில் ம.தி.மு.க-வின் மற்ற நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பகல் 12 மணியளவில் அ.ம.மு.க சார்பில் டி.டி.வி.தினகரன் தனது கட்சி நிர்வாகிகளுடன் அஞ்சலி செலுத்தினார்.

சேதப்படுத்தப்பட்ட முதல்வர் கட்அவுட்டுகள்.
சேதப்படுத்தப்பட்ட முதல்வர் கட்அவுட்டுகள்.
உ.பாண்டி

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆண்டுதோறும் பசும்பொன்னில் நடத்தப்படும் அரசு விழா இந்த ஆண்டு நடத்தப்படவில்லை. மேலும், அஞ்சலி செலுத்த வரும் கட்சி தலைவர்களை வரவேற்று விளம்பர பேனர்கள் வைக்கவும் அனுமதி இல்லை. ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை மட்டும் வரவேற்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி பசும்பொன்னிலுள்ள நினைவிடப் பகுதிகளில் கட்அவுட்கள் வைத்திருந்தார்.

சேதப்படுத்தப்பட்ட முதல்வர் கட்அவுட்டுகள்
சேதப்படுத்தப்பட்ட முதல்வர் கட்அவுட்டுகள்
உ.பாண்டி

இதைக் கண்ட டி.டி.வி.தினகரனுடன் அஞ்சலி செலுத்த வந்த அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஒ.பி.எஸ் கட்அவுட்டுகளைச் சேதப்படுத்தியும், கால்களில் போட்டு மிதித்தும் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார் சேதப்படுத்தப்பட்ட, எஞ்சியிருந்த கட்அவுட்டுகளை அங்கிருந்து அகற்றினர். இதனால் நினைவிடத்துக்கு வெளியே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அடுத்த கட்டுரைக்கு