Published:Updated:

`சசிகலா நடக்கிறார்; திட உணவு எடுத்துக்கொள்கிறார்!’- பெங்களூரு மருத்துவமனை

சசிகலா

`தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலா, உதவியுடன் எழுந்து நடக்கிறார்’ என்று விக்டோரியா மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

`சசிகலா நடக்கிறார்; திட உணவு எடுத்துக்கொள்கிறார்!’- பெங்களூரு மருத்துவமனை

`தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சசிகலா, உதவியுடன் எழுந்து நடக்கிறார்’ என்று விக்டோரியா மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
சசிகலா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் வி.கே.சசிகலா பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் 4-வது நாளாக சிகிச்சை பெற்றுவருகிறார். மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருக்கும் அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

விக்டோரியா மருத்துவமனை
விக்டோரியா மருத்துவமனை

இது தொடர்பாக, விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில்,``சசிகலா ஐ.சி.யூ வார்டில் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார். ரத்த அழுத்தம் நார்மலாக இருக்கிறது. சர்க்கரை அளவும் குறைந்திருக்கிறது. திட உணவு எடுத்துக்கொள்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உதவியுடன் எழுந்து நடக்கிறார். சிகிச்சைக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு தருகிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், சசிகலாவின் வயதைக் கருத்தில்கொண்டுதான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பரிசோதனை அறிக்கை
பரிசோதனை அறிக்கை

நுரையீரலில் இருந்த தொற்றும் குறைந்திருக்கிறது. இதேநிலை நீடித்தால் விரைவில் அவர் குணமடைவார். 27-ம் தேதி விடுதலையாகும் பட்சத்தில், வேறு மருத்துவமனைக்கோ அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கவோ சசிகலா விருப்பம் தெரிவிக்கலாம் என்றும் மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.