Published:Updated:

மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு: வெற்றிகள், தோல்விகள், சாதனைகள், சறுக்கல்கள்! - முழுமையான தொகுப்பு

மு.க.ஸ்டாலின்

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மீண்டும் 1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அதே ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்றார்.

மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு: வெற்றிகள், தோல்விகள், சாதனைகள், சறுக்கல்கள்! - முழுமையான தொகுப்பு

ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். மீண்டும் 1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அதே ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்றார்.

Published:Updated:
மு.க.ஸ்டாலின்

பிறப்பும் பின்னணியும்:

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் மார்ச் 1, 1953-ம் ஆண்டு மூன்றாவது மகனாக பிறந்தார் மு.க.ஸ்டாலின். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் நினைவாக இவருக்கு இந்தப் பெயரை சூட்டினார் கருணாநிதி. இவரின் மனைவி துர்கா. இவர்களுக்கு உதயநிதி என்ற மகனும், செந்தாமரை என்ற மகளும் இருக்கிறார்கள்.

கல்வியும் கலையும்:

இவர் சென்னை சேத்துப்பட்டிலுள்ள கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். பின் விவேகானந்தா கல்லூரியில் பி.யூ.சி படிப்பையும், மாநிலக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தந்தையின் தாக்கத்தால், இளம் வயதிலேயே ஸ்டாலினுக்கு நாடகக்கலை மற்றும் அரசியலில் ஆர்வம் இருந்தது. இவர் நடித்த முதல் நாடகமான `முரசே முழங்கு’ வெற்றிவிழா கண்டது. அதைத் தொடர்ந்து `திண்டுக்கல் தீர்ப்பு’,` நீதி தேவன் மயங்குகிறான்’, `நாளை நமதே’ என திராவிடக் கொள்கைகளை விளக்கும் பல நாடகங்களிலும் நடித்துள்ளார். இதேபோல, திரைத்துறையிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ஸ்டாலின், `ஒரே இரத்தம்’, `மக்கள் ஆணையிட்டால்’ ஆகிய திரைப்படங்களிலும் `குறிஞ்சி மலர்’ என்ற நெடுந்தொடரிலும் நடித்துள்ளார்.

அன்று முதலே அரசியலில்...

ஸ்டாலின் தனது 14-வது வயதிலேயே அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிவிட்டார். குறிப்பாக, தி.மு.க முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த 1967 காலகட்டங்களில் பள்ளி மாணவனாக இருந்த ஸ்டாலின், தனது நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு `கோபாலபுரம் இளைஞர் தி.மு.க’ என்ற அமைப்பை ஏற்படுத்தி தலைவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவது, சமூகப்பணி செய்வது என மாணவப் பருவத்திலேயே அரசியல் செயல்பாடுகளில் இறங்கிவிட்டார்.

1968-ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க-வுக்காகப் பிரசாரம் செய்தார். அதைத் தொடர்ந்து, முதல் கட்சிப் பதவியாக சென்னை 75-வது வட்ட தி.மு.க-வின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

1973-ம் ஆண்டு தி.மு.க-வின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1976-ம் ஆண்டு `மிசா’ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஓராண்டுக்காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1980-ம் ஆண்டு தி.மு.க-வின் இளைஞரணி தொடங்கப்பட்டு அதன் ஏழு அமைப்பாளர்களில் ஒருவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

1983-ம் ஆண்டின் இறுதியில் தி.மு.க-வின் மாநில இளைஞரணிச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

2008-ம் ஆண்டு தி.மு.க-வின் பொருளாளராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2016 சட்டமன்றத் தேர்தலில் 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.

2017-ம் ஆண்டு தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு தி.மு.க பொதுக்குழுவின் மூலம் அக்கட்சியின் செயல் தலைவரானார்.

2018 தி.மு.க தலைவர் கருணநிதியின் மறைவுக்குப் பிறகு, தி.மு.க தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

வெற்றியும் தோல்வியும்:

மேயராக…

1996-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார். பஞ்சாயத்து ராஜ் சட்ட திருத்தத்துக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால், `முதன்முறையாக மக்களால் நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்’ என்ற பெயரையும் ஸ்டாலின் பெற்றார்.

2001-ம் ஆண்டு மீண்டும் சென்னையின் மேயராக போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றிபெற்றார். ஆனால் 2002-ல் ஆட்சியிலிருந்த அ.தி.மு.க அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தமான, `ஓரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது’ என்ற காரணத்தால், அதே ஆண்டு, தான் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக்கொண்டு மேயர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்டாலின்.

சட்டமன்ற உறுப்பினராக…

1984-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்டாலின், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தனது முதல் தேர்தலிலேயே தோல்வியடைந்தார். ஆனால், அதன் பிறகு 1989-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

1991-ல் நடைபெற்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். மீண்டும் 1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அதே ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்றார். 2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வர உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி ஸ்டாலினுக்குக் கிடைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் மாறுதலாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் இரண்டுமுறையும் வெற்றிபெற்றார். தற்போதும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஸ்டாலின், கருணாநிதி
ஸ்டாலின், கருணாநிதி

சாதனைகளும் விமர்சனங்களும்:

ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது அவர் கொண்டுவந்த நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாகச் `சிங்காரச் சென்னை’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து, ஒன்பது மேம்பாலங்கள், 49 குறும்பாலங்கள், பூங்காக்கள், நீரூற்றுகள், மெரினா கடற்கரையை அழகுபடுத்தல், சாலை விரிவாக்கம் என அவர் செய்த அனைத்து விஷயங்களும் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக அமைந்தன.

ஆட்சி நிர்வாகம், சமூக மேம்பாடு பங்களிப்புக்காக அண்ணா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை அவருக்கு வழங்கியது. மேலும், அமெரிக்காவிலுள்ள கெண்டகி மாகாணத்தின் காமன்வெல்த் `கெண்டக்கி கர்னல்’ விருதை ஸ்டாலினின் பொதுச் சேவைக்காக வழங்கியது.

குடும்ப அரசியல், ஊழல், நில அபகரிப்பு புகார்கள் தொடர்ந்து ஸ்டாலின் துணை முதல்வராக இருக்கும்போது கையெழுத்திட்ட மீத்தேன் திட்ட அனுமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அவர் மீதான குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்படுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism