Published:Updated:

பா.ஜ.க 60, பா.ம.க 80... அ.தி.மு.க கூட்டணியில் `அடேங்கப்பா' எதிர்பார்ப்புகள்!

பா.ஜ.க.
பா.ஜ.க.

சீட் ஒதுக்கீடு பேச்சுவார்த்தையே இன்னும் ஆரம்பிக்காத நிலையில், இவர்கள் கொடுக்கும் நெருக்கடியால்தான், 'உங்களை நம்பி நாங்கள் இல்லை' என்று ஓங்கி அடித்திருக்கிறார்

கையோடு கொண்டுவந்திருந்த மணப்பாறை நெய் முறுக்குகளைத் தட்டில் அடுக்கிய கழுகாரிடம், " 'முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்காதவர்கள், கூட்டணியைவிட்டு வெளியேறலாம்' என்று கே.பி.முனுசாமி சீறியிருக்கிறாரே..?" என்றோம்.

"கூட்டணிக் கட்சிகளுடனான சீட் பேரத்தில் அ.தி.மு.க-வின் பிடி நழுவிவிடக் கூடாது என்பதால் இந்த முன்னெச்சரிக்கையாம். இப்போதே பா.ஜ.க 60 சீட் எதிர்பார்க்கிறது.

அவர்களே இவ்வளவு எதிர்பார்க்கும்போது, 5.5 சதவிகித வாக்குகளை இருபது வருடங்களுக்கு மேலாகத் தக்கவைத்திருக்கும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கணக்குப் போட மாட்டாரா? அ.தி.மு.க கூட்டணியில் 80 சீட் எதிர்பார்க்கிறாராம் பெரிய மருத்துவர்."

"அடேங்கப்பா!"

"அதுமட்டுமல்ல... துணை முதல்வர் பதவியும் தர வேண்டுமென்று இரு கட்சிகளும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தத் தகராறுக்கு நடுவேதான், 'நேற்றைய பொழுது நிஜமில்லை, நாளைய பொழுது நிச்சயமில்லை' என ட்வீட் போட்டு, கூட்டணி பேரத்தை எகிறச் செய்திருக்கிறார் ராமதாஸ்.

சீட் ஒதுக்கீடு பேச்சுவார்த்தையே இன்னும் ஆரம்பிக்காத நிலையில், இவர்கள் கொடுக்கும் நெருக்கடியால்தான், 'உங்களை நம்பி நாங்கள் இல்லை' என்று ஓங்கி அடித்திருக்கிறார் கே.பி.முனுசாமி!"

"தி.மு.க-வில் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க குழு அமைத்துவிட்டார்களே..?"

"டி.ஆர்.பாலுவை ஒருங்கிணைப்பாளராக நியமித்து, எட்டுப் பேர்கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், டெல்டா விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி நன்கறிந்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு இடம் கிடைக்கும் என்று அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் டி.ஆர்.பாலுவின் தலையீட்டால்தான், பழனிமாணிக்கத்தை குழுவில் சேர்க்கவில்லை என்கிறார்கள்.

பா.ஜ.க 60, பா.ம.க 80... அ.தி.மு.க கூட்டணியில் `அடேங்கப்பா' எதிர்பார்ப்புகள்!

இந்த விவகாரம் டெல்டாவில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுபான்மையினர் பிரதிநிதிகளாக இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்களையும் குழுவில் நியமிக்காதது கட்சிக்குள் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது."

> "நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பிக்கப்போகிறார்களாமே?" என்றோம்.

> "குஷ்பு பா.ஜ.க-வில் இணைந்த பின்னணி என்னவோ?"

> "அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது செல்லூர் ராஜூவும், ராஜன் செல்லப்பாவும் கடுப்பில் இருக்கிறார்களாமே..?"

> "காங்கிரஸ் தப்பில் அப்டேட்ஸ்..?"

- இவற்றுடன் கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட் முழுவதையும் ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2FrzCOi > மிஸ்டர் கழுகு: காயப்பட்ட குஷ்பு! - கரைசேர்த்த தாமரை... https://bit.ly/2FrzCOi

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு