Published:Updated:

உ.பி: ப.சிதம்பரம் வழக்கை விசாரித்த அதிகாரிக்கு சீட்! - அகிலேஷ் உறவினருக்கு `நோ’ சொன்ன பாஜக

அபர்ணா யாதவ்

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முலாயம் சிங் யாதவ் மருமகளுக்கு சீட் கொடுக்க பாஜக மறுத்துள்ளது.

உ.பி: ப.சிதம்பரம் வழக்கை விசாரித்த அதிகாரிக்கு சீட்! - அகிலேஷ் உறவினருக்கு `நோ’ சொன்ன பாஜக

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முலாயம் சிங் யாதவ் மருமகளுக்கு சீட் கொடுக்க பாஜக மறுத்துள்ளது.

Published:Updated:
அபர்ணா யாதவ்

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் இரு கட்சிகளும் எதிர் தரப்பிலிருந்து தலைவர்களை இழுக்கும் பணியில் ஈடுபட்டன. இதில் பாஜக-வில் இருந்த முக்கிய பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் சமாஜ்வாடி கட்சிக்குத் தாவினர். இதையடுத்து முலாயம் சிங் மருமகள் அபர்ணா யாதவை பாஜக தங்களது பக்கம் இழுத்துக்கொண்டு வந்தது. அவருக்கு லக்னோவில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதாகக் கூறித்தான் பாஜக-வுக்கு அழைத்துவந்ததாகச் சொல்லப்பட்டது.

கடந்த தேர்தலில் அபர்ணா லக்னோ கண்டோமென்ட் தொகுதியில் நின்று தோல்வி அடைந்தார். தற்போது பாஜக லக்னோவில் உள்ள 17 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் அபர்ணாவுக்கு எந்தத் தொகுதியும் கொடுக்கப்படவில்லை. இதனால் அபர்ணா அதிர்ச்சியடைந்துள்ளார்.

ராஜேஷ்வர்
ராஜேஷ்வர்

அவருக்கு சட்டமேலவை அல்லது வேறு ஏதாவது பதவி கொடுக்க பாஜக திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. லக்னோ கண்டோன்மென்ட் தொகுதியில் மாநில அமைச்சர் பிரிஜேஷ் பதக் என்பவரை பாஜக நிறுத்தியிருக்கிறது. பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற அமலாக்க ப்பிரிவு இணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங்குக்கும் இத்தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்திருக்கிறது. ராஜேஷ்வர் சிங்குக்கு சரோஜினி நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராஜேஷ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்பான ஏர்செல் வழக்கை விசாரித்த முக்கிய அதிகாரி. அதோடு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது நடந்ததாகக் கூறப்படும் ஒவ்வோர் ஊழல் வழக்கு விசாரணைக் குழுவிலும் ராஜேஷ்வர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேஷ்வருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் மாநில அமைச்சர் ஸ்வாதி சிங்கும், அவரது கணவர் தயா சிங்கும் போட்டியிடத் திட்டமிட்டிருந்தனர். அமைச்சர் அஸ்தோஷ் தண்டனுக்கு லக்னோ கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மாயாவதி
மாயாவதி

இதற்கிடையே தேர்தல் பிரசார நடவடிக்கையிலிருந்து ஒதுங்கியிருந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று முதல் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவிருக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஆக்ராவில் தனது கட்சியின் பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார். ஆக்ராவில் தலித் மக்கள் அதிகம் இருப்பதால் தனது பிரசாரத்தை அங்கிருந்து தொடங்க மாயாவதி திட்டமிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism