Published:Updated:

`வங்கி, மகளிர் குழு கடன் வசூலை 2 மாதம் ஒத்திவையுங்கள்!’- #Corona-வால் பா.ஜ.க கோரிக்கை

கொரோனா
கொரோனா

``அனைத்து வங்கிக் கடன் வசூல், சிறு நிதி நிறுவனங்கள் கடன் வசூல், மகளிர் குழு கடன் தவணை வசூல் என அனைத்தையும் 2 மாதம் ஒத்திவைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’

``கொரோனோ வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் வருமான இழப்பைச் சந்தித்து அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் மகளிர் குழு கடன் வசூலை 2 மாதங்கள் ஒத்தி வைக்க வேண்டும்’’ என்று தமிழக அரசுக்கு பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

இதுபற்றி நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், ``கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவிலும் ஊடுறுவி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் இக்கொடிய நோயில் சிக்கி சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பெரும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத் தலங்கள், திருக்கோயில்கள் என அனைத்தையும் மூடச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.

இச்சூழ்நிலையில் வியாபாரிகள், தொழிலாளர்கள், சாதாரண மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்து வருமானமின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கிய சிறு நிதி நிறுவனங்கள் கிராமங்களில் உள்ள பெண்களுக்கு நெருக்கடி கொடுத்து, கடனை வசூல் செய்ய நிர்பந்திக்கின்றன. உழைத்து வருமானம் ஈட்டும் வாய்ப்பு முற்றிலும் இல்லாத நிலை உள்ளது. இதனால் மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் மகளிர் குழுவில் கடன் பெற்றவர்கள் பெறும் அவதிப்படுகிறார்கள்.

கொரோனா
கொரோனா

எனவே, தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கும் கொரோனா பிரச்னை முடியும் வரையில், அனைத்து வங்கிக் கடன் வசூல், சிறு நிதி நிறுவனங்கள் கடன் வசூல், மகளிர் குழு கடன் தவணை வசூல் என அனைத்தையும் 2 மாதம் ஒத்திவைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய உத்தரவைப் பிறப்பித்து ஏழை மக்களை ஆபத்தான இத்தருணத்தில் காப்பாற்றுமாறு அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு