Published:Updated:

கடைசியாக பி.ஜே.பி முன்வைத்துள்ள 3 சான்ஸ்!- செவிசாய்க்குமா சிவசேனா?

பா.ஜ.கவுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் பழைய டீலிங்கை நிறைவேற்ற இதுதான் சமயம் என்று முதலில் நாங்கள் இரண்டரை ஆண்டுக்காலம் ஆட்சியமைத்துக் கொள்கிறோம் என முரண்டு பிடித்து வருகிறது சிவசேனா.

பட்நாவிஸ் - உத்தவ் தாக்கரே
பட்நாவிஸ் - உத்தவ் தாக்கரே

கூட்டணி முரண்பாடுகளால் புதிய அரசு அமைவதில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக தகித்துக்கொண்டிருக்கிறது மகாராஷ்டிர அரசியல். நாடாளுமன்றத் தேர்தல் நடந்த சமயம் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்த சிவசேனாவுக்கு அக்கட்சியின் தலைவர் அமித் ஷா `சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம் கூட்டணி வெற்றிபெற்றால் 50:50 பாலிசியில் ஆட்சியை ஐந்தாண்டுகள் தொடரலாம்' என டீலிங் பேசினார். தற்போது பா.ஜ.கவுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் பழைய டீலிங்கை நிறைவேற்ற இதுதான் சமயம் என்று முதலில் நாங்கள் இரண்டரை ஆண்டுக்காலம் ஆட்சியமைத்துக் கொள்கிறோம் என முரண்டு பிடித்து வருகிறது சிவசேனா.

சிவசேனா -பா.ஜ.க
சிவசேனா -பா.ஜ.க

இதற்காகத் தொடர்ந்து காய் நகர்த்திவரும் அந்தக் கட்சி உத்தவ் தாக்கரேயின் மூத்த மகன் ஆதித்யாவை முதல்வர் வேட்பாளராக டிக் செய்துள்ளது. ஆனால், சிவசேனாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து பட்நாவிஸை மீண்டும் தங்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்து அதிரடி காட்டியுள்ளது பா.ஜ.க. மேலும், சிவசேனாவின் ஆதரவு இல்லாமலே மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பா.ஜ.க ஒரு பிளானை கையில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிப் பேசியுள்ள அம்மாநில பா.ஜ.க எம்.பி சஞ்சய் காக்கடே, ``சிவசேனா கட்சியில் வெற்றி பெற்ற 56 எம்.எல்.ஏ-க்களில் 45 பேர் எங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர்.

 `எதையும் செய்யுங்கள், நாங்கள் இருக்கிறோம்!’- பிளான் B-யுடன் களமிறங்கிய மகாராஷ்டிரா பா.ஜ.க

அவர்கள் அனைவரும் எங்களுக்கு போன் செய்து ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் பா.ஜ.க ஆட்சியில் நாங்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என அந்த எம்.எல்.ஏக்கள் கூறுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். எனினும் கடைசியாக சிவசேனாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் என்ற ரீதியில் மூன்று சான்ஸ்களை உத்தவ் தாக்கரே மத்தியில் பா.ஜ.க தலைமை முன்வைத்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்திடம் பேசியுள்ளனர். அதன்படி, முதல் வாய்ப்பாக, ``மத்திய அமைச்சரவையில் சிவசேனாவுக்குக் கூடுதலாக 2 அமைச்சர்கள் பதவி வழங்கப்படுவதற்கு பா.ஜ.க தலைமை முடிவு செய்துள்ளது.

பட்நாவிஸ்
பட்நாவிஸ்

இந்த வாய்ப்பை சிவசேனா ஏற்கும் பட்சத்தில் உடனடியாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு சிவசேனாவைச் சேர்ந்த 2 பேர் மத்திய அமைச்சர்கள் ஆக்கப்படுவார்கள். இரண்டாம் வாய்ப்பாக ஹரியானாவில் பா.ஜ.க ஆட்சியமைக்க உதவிய துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதுபோல் மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சியமைக்க சிவசேனா உதவும் பட்சத்தில் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்கிற உத்திரவாதம்.

`தமிழர் vs தமிழர்; 2வது முறை ஜாக்பாட் அடித்த பட்னாவிஸின் நம்பிக்கை!'- மகாராஷ்டிரா தேர்தல் சுவாரஸ்யம்

ஆதித்யா தாக்கரேவுக்கு விருப்பமில்லை எனில் அக்கட்சியைச் சேர்ந்த யாருக்கேனும் துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும். மூன்றாவது வாய்ப்பாக ஆட்சியமைக்க உதவினால் மாநில அமைச்சரவையில் கூடுதலாக சில முக்கியத் துறைகளுடன் அடங்கிய அமைச்சர் பதவி சிவசேனாவுக்கு வழங்கப்படும். சிவசேனா உடன் பா.ஜ.க தலைவர்கள் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது இந்த மூன்று சான்ஸ்கள் முன்வைக்கப்படும். இதை அவர்கள் ஏற்கும் பட்சத்தில் உடனடியாக அனைத்தும் நிறைவேற்றப்படும்.

ஆதித்யா தாக்கரே
ஆதித்யா தாக்கரே

அதேநேரம் முதல்வர் பதவியிலும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலும் பா.ஜ.கவே இருக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளும் பட்நாவிஸே முதல்வர் நாற்காலியில் என பா.ஜ.க உறுதியாக உள்ளது. இது சிவசேனாவிடம் தெளிவாக எடுத்துக்கூறப்படும் என அக்கட்சித் தலைவர்கள் பேசியுள்ளார்கள். ஆனால், இதற்கு சிவசேனா என்ன சொல்லப்போகிறது என்பதை பொறுத்துதான் மகாராஷ்டிர அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கப்போகின்றன.

வருங்கால சி.எம் வேட்பாளர்?- 53 வருட வரலாற்றில் முதல் முறையாகத் தேர்தல் களம் காணும் தாக்கரே வாரிசு