Published:Updated:

``புளியில் பல்லி... வட மாநிலங்களிலிருந்து வெல்லம்" - பொங்கல் பொருள் விவகாரத்தில் ஹெச்.ராஜா காட்டம்!

ஹெச்.ராஜா காட்டம்
News
ஹெச்.ராஜா காட்டம்

``தற்போதைய தமிழக முதலமைச்சருக்கும் பிரதமர் மோடிதான். இந்த சின்ன மனுஷனுக்கு பெரிய மனுஷன் மோடிதான். தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்." - ஹெச்.ராஜா

Published:Updated:

``புளியில் பல்லி... வட மாநிலங்களிலிருந்து வெல்லம்" - பொங்கல் பொருள் விவகாரத்தில் ஹெச்.ராஜா காட்டம்!

``தற்போதைய தமிழக முதலமைச்சருக்கும் பிரதமர் மோடிதான். இந்த சின்ன மனுஷனுக்கு பெரிய மனுஷன் மோடிதான். தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்." - ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா காட்டம்
News
ஹெச்.ராஜா காட்டம்

``தமிழக முதலமைச்சருக்கும் பிரதமர் மோடி தான். இந்த சின்ன மனுஷனுக்குப் பெரிய மனுஷன் மோடிதான். தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அதனால், நான் அவரைத் தவறாகக் குறிப்பிடவில்லை" என்று பா.ஜ.க பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சித்துப் பேசியிருக்கிறார்.

 பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பஞ்சாப் மாநில அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே விவகாரத்துக்காக நேற்று கரூர் பா.ஜ.க-வினர் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கரூர் நகர காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அதையும் மீறி போராட்டம் நடத்த முற்பட்ட பா.ஜ.க-வினருக்கும், காவல்துறையினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், பா.ஜ.க-வினரை போலீஸார் கைது செய்தனர். அதைக் கண்டித்து பா.ஜ.க-வினர் சாலை மறியல் செய்தனர். இந்த நிலையில், இன்று பா.ஜ.க சார்பில் பஞ்சாப் விவகாரத்துக்காகவும், கரூர் நகர காவல்துறையினரைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்குச் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட பா.ஜ.க கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா சிறப்புரை ஆற்றினார்.

 பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

அப்போது பேசிய அவர், "தற்போதைய தமிழக முதலமைச்சருக்கும் பிரதமர் மோடிதான். இந்த சின்ன மனுஷனுக்குப் பெரிய மனுஷன் மோடிதான். தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். பஞ்சாப் மாநிலத்தில் பாரத பிரதமர் வருகையின்போது விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் பின்னணியில், காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி இருக்கிறார்"என்று பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கடந்த 5-ம் தேதி பஞ்சாப்பில் ரூ.42,750 கோடிக்கு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தச் சென்ற பாரத பிரதமருக்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட இருந்தது. பாதுகாப்பு குளறுபடி என்ற வார்த்தைகளோடு முடித்துக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால், இது காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் அரசின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்பதற்கு முகாந்திரம் இருக்கிறது. எவிடென்ஸ் இருக்கிறது. பிரதமர் சென்றால், மூன்று பேர் அவரை ரிசீவ் பண்ணச் சென்றிருக்க வேண்டும். முதலமைச்சர், இரண்டாவது தலைமைச் செயலாளர், அடுத்து டி.ஜி.பி. ஆனால், இவர்கள் மூன்று பேரும் செல்லவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

அதேபோல, தமிழகத்தில் இருக்கும் திராவிட ஆட்சி எப்படியென்றால், கீழே பத்து ரூபாயைப் போட்டுவிட்டு, 1,000 ரூபாயைத் திருடுவது திருடர்களின் வேலை. அத்தைதான் தி.மு.க செய்துகொண்டிருக்கிறது. ஆகவே, மக்களை ஏமாற்றி, வாக்குகளைத் திருடி, தி.மு.க இப்போது ஆட்சியில் இருக்கிறது. வெறும் இரண்டரை சதவிகிதம் வாக்கு விகிதத்தில் தான் ஆட்சியில் இருக்கிறது தி.மு.க.

வெள்ளச்சேதம் விஷயத்தில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விஷயத்தில் முழுமையாக தி.மு.க தோற்றுப் போய்விட்டது. இன்று தேர்தல் வைத்தால் கூட, தி.மு.க தோற்றுவிடும். இப்படிப்பட்ட ஆட்சி நடத்தும் தமிழக முதலமைச்சருக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

வெல்லத்தை வெளி மாநிலத்திலிருந்து வாங்குகிறார்கள். நாட்டு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளிடம் வாங்காமல் கமிஷனுக்காக வெளிமாநிலத்திலிருந்து வாங்குகிறார்கள். ஆனால், பனியனில் இந்தி தெரியாது போடா'னு வாசகத்தைப் போட்டுக்கொண்டு அரசியல் செய்கிறார்கள். அதேபோல, பொங்கல் பரிசுப்பொருள்களில் கொடுக்கப்பட்ட புளியில் பல்லி இருக்கிறது. எனவே இது தொடர்பாகத் தமிழக அரசு விசாரணை நடத்தவேண்டும்" என்றார்.