Published:Updated:

அ.தி.மு.க-வில் அதிகாரப் போர்... ரசிக்கும் பா.ஜ.க-வின் தேர்தல் வியூகங்கள்!

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

2021 சட்டமன்றத் தேர்தலைவிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான் பா.ஜ.க-வின் பிரதான இலக்கு. நாடாளுமன்றத் தேர்தலுக்குள் வாக்குவங்கியை அதிகரித்துக்கொண்டு, தமிழகத்தில் வலுவான கட்சியாகக் காலூன்றிவிட பா.ஜ.க முயல்கிறது.

அ.தி.மு.க செயற்குழுவுக்குப் பிறகும் எடப்பாடி - பன்னீர் மோதல் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டேயிருக்கிறது. முதல்வர் வேட்பாளரை அக்டோபர் 7-ம் தேதியன்று அறிவிக்கவிருப்பதாக அந்தக் கட்சி தெரிவித்திருக்கும் நிலையில், இருதரப்பிலும் உக்கிரம் மேன்மேலும் கூடியிருக்கிறது.

தமிழகத்தில் நடக்கும் இந்த அதிகாரப் போர், டெல்லி பா.ஜ.க தரப்பை உற்சாகமாக்கியிருக்கிறது. 'நன்றாக மோதட்டும்' என்று ரசித்தபடியே மோதலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க.

அக்டோபர் 14-ம் தேதி நவராத்திரி ஆரம்பமாகிறது. அடுத்த 16 நாள்களுக்கு நவராத்திரி சீஸன் நடக்கும். ஆர்.எஸ்.எஸ். சார்பில் அந்த நாள்களில் நாக்பூர் தலைமையகத்தில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூடுவார்கள். அடுத்த ஒரு வருட காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய அரசியல் முடிவுகளும் அங்கு ஆலோசிக்கப்படும்.

அந்த வகையில், நாக்பூரில் தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்கப்போகிறார்களாம். அதுவரை, தமிழக அரசியலில் அ.தி.மு.க - தி.மு.க - காங்கிரஸ் என்று மூன்று கட்சிகளுக்குள்ளும் குழப்ப அலைகளைப் பரவவிடுவதே பா.ஜ.க-வின் திட்டம்.

அ.தி.மு.க-வில் அதிகாரப் போர்... ரசிக்கும் பா.ஜ.க-வின் தேர்தல் வியூகங்கள்!

அதேசமயம், அ.தி.மு.க-வில் அவர்களின் சாய்ஸ் சசிகலாவா, பன்னீர்செல்வமா, பழனிசாமியா என்பதெல்லாம் நவம்பரில்தான் தெரியவரும் என்கிறார்கள். இதற்குத் தகுந்தாற்போல், பா.ஜ.க மேலிடம் தேசிய பொதுச்செயலாளராக இருக்கும் பூபேந்தர் யாதவை தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கவிருக்கிறது.

> நீக்கப்பட்ட பன்னீர் பெயர்; "என்ன குறைவெச்சேன்?" - கொந்தளித்த எடப்பாடி; வருகிறார் சுசீல் சந்திரா; பன்னீர்-தினகரன் உடன்படிக்கை... இந்தத் தகவல்களுடன் கூடிய முழுமையான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க.. https://bit.ly/3n8feCZ > ஓங்கும் எடப்பாடியின் கரம்! https://bit.ly/3n8feCZ

60 தொகுதிகள்... பா.ஜ.க-வின் பரபர வியூகங்கள்!

2021 சட்டமன்றத் தேர்தலைவிட, 2024 நாடாளுமன்றத் தேர்தல்தான் பா.ஜ.க-வின் பிரதான இலக்கு. நாடாளுமன்றத் தேர்தலுக்குள் வாக்குவங்கியை அதிகரித்துக்கொண்டு, தமிழகத்தில் வலுவான கட்சியாகக் காலூன்றிவிட பா.ஜ.க முயல்கிறது. அதற்கு அடித்தளம் அமைக்கும் பணியைத்தான், இந்தச் சட்டமன்றத் தேர்தல் வாயிலாக முன்னெடுக்கவிருக்கிறது.

பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலரிடம் பேசினோம். ``திராவிடக் கட்சிகளின் மீது மாறி மாறி சவாரி செய்துதான், தமிழகத்தில் அதிகப்படியான எம்.பி-க்களை காங்கிரஸ் பெறுகிறது. இதை உடைப்பதுதான் பா.ஜ.க-வின் நீண்டநாள் திட்டம்.

இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்றை வீழ்த்தினால் மட்டுமே, காங்கிரஸ் இதுநாள் வரை நடத்திவந்த பூச்சாண்டி அரசியல் முடிவுக்கு வரும். அ.தி.மு.க வலுவில்லாமல் போய்விட்டால், தி.மு.க கொடுப்பதை காங்கிரஸ் வாங்கிக்கொண்டுதானே ஆக வேண்டும்...

அ.தி.மு.க-வில் அதிகாரப் போர்... ரசிக்கும் பா.ஜ.க-வின் தேர்தல் வியூகங்கள்!

அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை உருவாக பா.ஜ.க தலைமை விரும்பவில்லை. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி அதற்கு முயன்றால், ஓ.பன்னீர்செல்வம் மூலமாக இரட்டை இலையை முடக்குவதற்கும் டெல்லி தயாராக இருக்கிறது..." என்றவர்கள் மேலும் பல தகவல்களை தந்தனர்.

அவற்றை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > அறுபது தொகுதிகள்... அதிரடி முடிவுகள்... பா.ஜ.க-வின் பரபர வியூகங்கள்! க்ளிக் செய்க... https://bit.ly/33oF2CQ

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு