Published:Updated:

``இந்துத்துவாவுக்கு பாஜக ஒன்றும் காப்புரிமை பெற்றிருக்கவில்லை!” - உத்தவ் தாக்கரே காட்டம்

உத்தவ் தாக்கரே

``இந்துத்துவா மீது பாஜக ஒன்றும் காப்புரிமை பெற்றிருக்கவில்லை” என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

``இந்துத்துவாவுக்கு பாஜக ஒன்றும் காப்புரிமை பெற்றிருக்கவில்லை!” - உத்தவ் தாக்கரே காட்டம்

``இந்துத்துவா மீது பாஜக ஒன்றும் காப்புரிமை பெற்றிருக்கவில்லை” என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் கூட்டணிக் கட்சிகளாக இருந்த சிவசேனாவும் பாஜக-வும் இப்போது விரோதிகளாக இருக்கின்றன. சிவசேனா தலைவர்கள்மீது அமலாக்கப் பிரிவு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இந்நிலையில் பாஜக தொடர்ந்து இந்துத்துவாவுக்கு உரிமை கோரிவருவது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்ச்சித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ``இந்துத்துவாவுக்கு பாஜக ஒன்றும் காப்புரிமை பெற்றிருக்கவில்லை. கடவுள் ராமர் பிறந்திருக்காமல் இருந்திருந்தால் அரசியலுக்கு பாஜக என்ன பிரச்னையை எழுப்பியிருக்கும்... இப்போது பிரச்னை எதுவும் இல்லாததால் மதம் மற்றும் வெறுப்பைப் பரப்புவது குறித்து பாஜக பேசுகிறது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

பொய்யைப் பரப்புவதில் நாங்கள் பின்தங்கித்தான் இருக்கிறோம். காவியும் இந்துத்துவாவும் இணைந்துதான் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க உதவும் என்று மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே தெரிவித்தார். எனது தந்தைதான் காவியும், இந்துத்துவாவும்தான் டெல்லியில் ஆட்சியமைக்க உதவும் என்று அவர்களுக்கு (பாஜக) வழிகாட்டினார். சிவசேனா எப்போதும் காவி மற்றும் இந்துத்துவாவின் மீது உறுதியாக இருக்கிறது. ஆனால் பாஜக மாறுபட்ட கொள்கைக்காக பாரதிய ஜன சங், ஜன சங் என்ற மாறுபட்ட பெயர்களை வைத்திருக்கிறது.

பால் தாக்கரே மீது மரியாதை வைத்திருக்கிறது என்று பாஜக கூறுகிறது. அப்படியென்றால் நவிமும்பை விமான நிலையத்துக்கு பால் தாக்கரே பெயர வைக்க ஏன் பாஜக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்... பாலாசாஹேப் அறையில் அமித் ஷா சொன்ன வார்த்தைகளை ஏன் பாஜக நிறைவேற்றவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இரு கட்சிகளும் நடத்திய பேச்சுவார்த்தையில் சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்ததாக சிவசேனா கூறுகிறது. ஆனால் பாஜக, அப்படி தாங்கள் கூறவே இல்லை என்று கூறிக்கொண்டிருக்கிறது. இதனால்தான் தேர்தலுக்குப் பிறகு இரு கட்சிகளும் பிரிந்துவிட்டன. கோலாப்பூர் வடக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் நீண்ட நாள்களாக சிவசேனாதான் வெற்றிபெற்று வந்துள்ளது. ஆனால் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ இறந்துபோனார். இதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்காக உத்தவ் தாக்கரே மும்பையிலிருந்து டிஜிட்டல் முறையில் பிரசாரம் செய்தார்.

அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே
அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே

இதில் பேசிய உத்தவ் தாக்கரே, ``2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவசேனாவுடன் பாஜக உறவை முறித்துக்கொண்டது. ஆனால் அத்தேர்தலில் சிவசேனா வேட்பாளர் கோலாப்பூர் வடக்கு தொகுதியில் 69 ஆயிரம் வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் 40 ஆயிரம் வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 47 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர். 2019-ம் ஆண்டு தேர்தலில் சிவசேனாவும், பாஜக-வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனாலும் சிவசேனா வேட்பாளருக்கு வெறும் 75 ஆயிரம் வாக்குகள்தான் கிடைத்திருக்கின்றன. அதாவது முந்தைய தேர்தலைவிட வெறும் 5 ஆயிரம் வாக்குகள் மட்டுமே அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் 91 ஆயிரம் வாக்கு பெற்றிருக்கிறார். அப்படியானால் பாஜக முந்தைய தேர்தலில் பெற்ற 40 ஆயிரம் வாக்குகள் எங்கு சென்றன. இந்த வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்குச் சென்றனவா என்பதை யார் தெளிவுபடுத்துவார்கள்... காங்கிரஸ் கட்சியுடன் பாஜக மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டதா? இதில் சிவசேனா வேட்பாளர் தோல்வி அடைவதற்கு பாஜக-தான் காரணம். சிவசேனா வெளிப்படையான அரசியல் செய்யும். ஆனால் முதுகில் குத்த மாட்டோம்” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism