Published:Updated:

மகாராஷ்டிரா எம்.பி பதவி: காங்கிரஸ் கோரிக்கை; வேட்புமனுவைத் திரும்பப் பெற்ற பாஜக!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உபாத்யாய் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார்
உபாத்யாய் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றார்

மகாராஷ்டிராவில் நடைபெறவிருக்கும் ஒரே ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனுவைத் திரும்பப் பெறும்படி காங்கிரஸ் கேட்டுக்கொண்டதால், பாஜக தனது மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மகாராஷ்டிராவில் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் சாதவ் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்தார். அவரது பதவியிடத்தை நிரப்ப இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக ராஜ்னி பாட்டீல் மற்றும் பாஜக சார்பாக சஞ்சய் உபாத்யாய் ஆகியோர் கடந்த புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ், சிவசேனா, தேசியவாதக் கட்சிகளின் கூட்டணிக்கு சட்டமன்றத்தில் 152 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இது தவிர சிறிய கட்சிகளின் 17 உறுப்பினர்கள் ஆதரவும் இருக்கிறது. சட்டமன்றத்தில் பாஜக-வுக்கு அதிகபட்சமாக 106 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

உபாத்யா மனுவை திரும்ப பெறுகிறார்
உபாத்யா மனுவை திரும்ப பெறுகிறார்
பிரியங்கா டு சந்திரசேகர் ஆசாத் - உ.பி தேர்தல் களத்தில் உதயமாகும் புதிய அரசியல் சக்திகள் யார் யார்?

இந்தத் தேர்தலில் போட்டியின்றி தங்களது வேட்பாளரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டது. இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்நாவிஸைச் சந்தித்து பாஜக வேட்பாளரின் வேட்புமனுவைத் திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பாஜக தனது கட்சி வேட்பாளர் சஞ்சய் உபாத்யாயை வேட்புமனுவைத் திரும்பப் பெறும்படி கேட்டுக்கொண்டது. கட்சியின் வேண்டுகோளை ஏற்று உபாத்யாய் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. போட்டி இருக்கும் பட்சத்தில் அக்டோபர் 4-ம் தேதி தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 288 உறுப்பினர்களைக்கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜக-வுக்கு 106 உறுப்பினர்கள் இருந்தபோதும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் துணையோடு சிவசேனா ஆட்சியமைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று பாஜக வேட்புமனுவைத் திரும்ப பெற்றிருப்பது மகாராஷ்டிரா அரசியலில் இருக்கும் நாகரிகத்தை காட்டுவதாக அமைந்திருக்கிறது என்று அரசியல் வல்லநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு