Published:Updated:

மதுரை பாஜக முக்கிய நிர்வாகிகள் விலகல் - காரணம் என்ன?!

கமல் முன்னிலையில் சேர்ந்த முனியசாமி

``ஏற்கெனவே இருந்த கட்சியில் தற்போது சேர்ந்திருக்கிறார்கள். அதனால் பா.ஜ.க-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்கிறது பாஜக.

மதுரை பாஜக முக்கிய நிர்வாகிகள் விலகல் - காரணம் என்ன?!

``ஏற்கெனவே இருந்த கட்சியில் தற்போது சேர்ந்திருக்கிறார்கள். அதனால் பா.ஜ.க-வுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்கிறது பாஜக.

Published:Updated:
கமல் முன்னிலையில் சேர்ந்த முனியசாமி

மதுரை மாவட்ட பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் சிலர் கட்சியிலிருந்து வெளியேறி, வெவ்வேறு கட்சிகளில் இணையும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜெயராம் அ.ம.மு.க-வில்...
ஜெயராம் அ.ம.மு.க-வில்...

சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க-வினர் நடத்தியதாகச் சொல்லப்பட்ட செருப்பு வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மாநகரத் தலைவராக இருந்த டாக்டர் சரவணன் பா.ஜ.க-விலிருந்து உடனே விலகினார்.

அதிமுகவில் இணைந்த ராஜா சீனிவாசன்
அதிமுகவில் இணைந்த ராஜா சீனிவாசன்

அதைத் தொடர்ந்து இரண்டு மாவட்டங்களாகச் செயல்பட்ட மதுரை மாவட்ட பா.ஜ.க., மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் பா.ஜ.க பொருளாதார அணியில் மாநிலத் துணைத் தலைவராக இருந்த மதுரையைச் சேர்ந்த முனியசாமி, சென்னையில் கமல்ஹாசனைச் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இவர் ஏற்கெனவே மய்யத்திலிருந்துதான் பா.ஜ.க-வுக்கு வந்தார்.

அமமுக-வில் இணைந்த ஜெயராம்
அமமுக-வில் இணைந்த ஜெயராம்

பா.ஜ.க வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் ஜெயராமன் அ.ம.மு.க-வில் இணைந்தார். சில நாள்களுக்கு முன்பு முன்னாள் கவுன்சிலர் ராஜா சீனிவாசன், செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணந்தார். இவரும் அ.தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்கு வந்தவர்தான்.

இது குறித்து பா.ஜ.க-வின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரனிடம் கேட்டோம். "இவர்கள் யாரும் நீண்டகாலம் பா.ஜ.க-வில் பணியாற்றியவர்கள் இல்லை. திடீரென்று வந்தவர்கள்.

சுசீந்திரன்
சுசீந்திரன்

டாக்டர் சரவணன் விலகியபோதே போய்விட்டார்கள். ரொம்ப நாளாயிடுச்சு. அவர்கள் ஏற்கெனவே இருந்த கட்சியில் தற்போது சேர்ந்திருக்கிறார்கள். அதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவ்வளவுதான்" என்றார்.