Published:Updated:

தேசிய அளவில் பாஜக... தமிழக அளவில் அதிமுக - அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு..?!

பாஜக

தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ரூ.4,847.78 கோடியுடன் பா.ஜ.க தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.

தேசிய அளவில் பாஜக... தமிழக அளவில் அதிமுக - அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு..?!

தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ரூ.4,847.78 கோடியுடன் பா.ஜ.க தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.

Published:Updated:
பாஜக

இந்தியாவில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்து, ஜனநாயகச் சீர்திருத்தங்கள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக் கழகம் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி 2019-2020 நிதியாண்டில் மாநில மற்றும் தேசிய அளவிலுள்ள கட்சிகளின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற அறிக்கையை ஜனநாயகச் சீர்திருத்தங்கள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு கழகம் தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், தேசியக் கட்சிகளின் சொத்து மதிப்பில் பா.ஜ.க ரூ.4,847.78 கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்தப் பட்டியலில், பகுஜன் சமாஜ் கட்சி ரூ.698.33 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், இந்திய தேசிய காங்கிரஸ் ரூ.588.16 கோடியுடன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து முறையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.569.519 கோடி, திரிணாமுல் காங்கிரஸ் ரூ.247.78 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.29.78 கோடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.8.2 கோடி என அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

அ.தி.மு.க
அ.தி.மு.க

மேலும், மாநிலக் கட்சிகளின் சொத்து மதிப்பு குறித்த பட்டியலில் ரூ.563.47 கோடியுடன் சமாஜ்வாடி கட்சி முதலிடத்திலும், ரூ.301.47 கோடியுடன் தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி இரண்டாவது இடத்திலும், ரூ.267.61 கோடியுடன் அ.தி.மு.க மூன்றாவது இடத்திலும் உள்ளன. தமிழக அளவில் அ.தி.மு.க-தான் முதலிடத்தில் உள்ளது. மேலும், தமிழகத்தின் ஆளுங்கட்சியான தி.மு.க இந்தப் பட்டியலில் ரூ.184.24 கோடியுடன் 6-வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism